Tuesday, October 23, 2012

en ninaivugalin e -pathivu ganesha song


 ஞான விநாயகனே ஸூமுகனே(2)
கா/ன/ம் தரும் ஈசனே கண நாதனே
                                                                            (ஞான)
உன் கோவில் வந்து உன் திருக்கோலம் கண்டு
என் நாவில் உனைப் பாட வரம் வேண்டுமே
கண நாதா நீ வர வேண்டுமே
உனைப் பாட அருள் தர வேண்டுமே (ஞான)

மாணிக்க வீணை ஏந்தும் வாணியும் மகிழ
செந்/தாமரை மேல் அமரும் பூமகள் புகழ
வானவர் கொண்/டா/ட ஞானியர் உனை நாட
ஆனந்த கூத்தாடும் ஐங்கரனே

மூஷிக வாஹன/மேஹியே இந்த பூவுலகையாளும்
நாயகனே விநாயகனே விநாயகனே

மோதகப் ப்ரியனே மோன ரூபனே /மூலப் பொருளோனே
முக்காலமும் உணர்வோனே

வேதமும் நாதமும் முழங்கிட தினமும்
வேழமுகா உனக்கபிஷேகம்

பால் அபிஷேகம் தேனபிஷேகம் பன்னீர் அபிஷேகம்
நாதஸ்வர மேள/ங்களுடன் / கணநாதா உனக்கலங்காரம்
பூவலங்காரம் பொன்னலங்காரம் திவ்ய அலங்காரம்
கணநாதா உன் அலங்காரமே
கண்டவர்க்கே வாழ்வில் சுபயோகமே (ஞான)

No comments:

Post a Comment