Tuesday, October 23, 2012

en ninaivukalin e -pathivukal -murugan song


வாதினையடர்ந்த வேல் விழியர் தங்கள்
மாயம தொழிந்து தெளியே/னே
மா/மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மா/பதம் அணிந்து பணியே/னே

ஆதியொடு மந்த/மாகிய நலங்கள்
ஆறுமுகமென்று தெரியேனே
ஆ/ன தனி மந்த்ர/ரூப நிலை கொண்ட
ஆடு மயிலென்ப தறியேனே

நாதமொடு விந்து வான/வுடல் கொண்டு
நானிலமலைந்து திருவே/னே
நா/கமணிக்கின்ற நாகநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே

சோதியுணர்/கின்ற வாழ்வு சிவ/மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூ/ரர் குலம் வென்று வாகையோடு சென்று
சோலை மலை நின்/ற பெருமாளே

No comments:

Post a Comment