தென்பழனி வேல் முருகா
ஓடி வரவா—உந்தன்
தேன் தமிழை நாவில்
வைத்து பாடி வரவா
ஆவினன் குடியை நான்
நாடி வரவா—முருகா
அருணகிரி திருப்
புகழைப் பாடி வரவா
கால்நடை பக்தருடன்
கூடி வரவா-ஐயா
காவடியை தோளில்
வைத்து ஆடி வரவா
குன்னக்குடி குன்றில்
உனை காண வரவா- அங்கே
அன்னக் கொடி கண்களுக்கு
தோண வரவா
குலத்தினில் குறத்தியை
சேர்த்த முருகா-ஒரு
பழத்திற்காக ஆண்டியான
பால முருகா
கோடி நலம் நீதருவாய்
ஓடி வரவா—முருகா
கொஞ்சும் தமிழ்
விஞ்சி வர பாடி வரவா
ஆறுபடை வீட்டில்
உன்னை பார்க்க வரவா-முருகா
அடியார்கள் பாடுவதைக்
கேட்க வரவா
ஆடியில் முந்தி
வெள்ளி வரவா-ஐயா
அறியாமல் செய்தவற்றை
கிள்ளி வரவா (தென்)
No comments:
Post a Comment