திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால்
உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்
திருமுருகா திருமுருகா
சிறு மதியால் உள்ளம் இருண்டிடும் வேளையில்
அருள் மொழி கூறிடும் ஆண்டவன் நீயே திருமுருகா( திருமுருகா)
அப்பனும் பிள்ளையும் நீதானய்யா
அடிப்பதும் அணைப்பதும் கைதானய்யா
கற்பனை வாழ்வினில் கதி இனியேது
கருணா/நிதியே கதிர் வடிவேலா(திரு முருகா)
No comments:
Post a Comment