Thursday, October 25, 2012

en ninaivukalin e-pathivu ---ambal songs


அம்பாள் என்னை ஆதரிக்க வேண்டும்—உன்
சிந்தையில் நன்றாக மனதிரங்கியே ----அம்பாள்

சிந்தை தேடியே  மனதிரங்கியே
ஸ்ரீ குரு நாயகி த்ரிபுர சுந்தரி-----அம்பாள்

மதுரா புரீஸ்வரி மரகத ஸ்யாமளி
மகிமையுள்ள தேவீ----அந்த
மஹிஷாசுரனை  மர்த்தனம் செய வந்த
மஹா ராஜ ராஜேஸ்வரி( அந்த)

பக்தாளுக்கனு கூலங்கள் செய்திடும்
முக்தி தரும் பராசக்தி  மீனாஷி  நீ—அம்பாள்
 முத்துச் செருக்கும் முகத்தினழகும்
மூக்கத்தி மின்ணொளியாள் –நல்ல
வஜ்ர முருகும் மரகத் தோடும்
ஸ்வர்ணப் பீதாம்பரமும் (நல்ல)
நெத்திச் சூட்டியும் சந்திரப் பிறையும்
சேயீக்கு நீ  தானே காக்கும் மீனாஷி நீ(அம்பாள்)

அகில  ஜகத்திற்கும்  ஆதார சக்தி-நீ
அம்பா  மீனாஷி  நீயே—
ஸகல பாக்யமும் தந்து  ரக்‌ஷிப்பாய் நீ
ஜகதீஸ்வரி நீயே

No comments:

Post a Comment