மகாலஷ்மி ஜகன்மாதா
மனமிறங்கி வரமருள்
(மகா)
மகா விஷ்ணுவின்
மார்பெனும்
மணி பீட மதனில் அமர்ந்திடும்
மன்மதனை ஈன்றருளும்
தாயே
தயா நிதியே மகா
மாயே (மகா)
பார் கடல் தரும்
கிருபாகரி
பரிந்து வந்தென்னை
ஆதரி
பங்கஜ மலர் வளர்
அன்னையே
கடைக்கண் பார்
ராமதாசன் பணியும்
No comments:
Post a Comment