ஆராதனை செய்திடுவோம்
அம்மா
ஸ்ரீ வாசவி தேவிக்கு
வைகாசி மாதம் பிறந்து வந்தாயே
வைஷ்ய குலம் தனை தழைக்க செய்தாயே
வேண்டிடும் வரங்கள் தந்திடுவாயே
காத்யாயணியே காத்திடுவாயே (ஆராதனை)
மல்லிகை முல்லை விருவாச்சியிலே
உன்னை நாங்கள் அர்ச்சிப்போமே
கும்பிடும் தெய்வம் எங்களுக் கருள்வாய்
மங்கையர் திலகமே மங்கள தேவியே (ஆராதனை)
விருப்பாட்சதனின் சோதரி நீயே
கல்ப விருட்சமாய் காத்திடுவாயே
சர்வ மங்கள பூரணியே உன்
சந்நிதி தன்னில் சரண் புகுந்தோமே (ஆராதனை)
வாசவி சரணம்
ஸ்ரீ வாசவி சரணம்
ஸ்ரீ வாசவி ச/ர/ண/ம்
ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி (ஸ்ரீ)
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணீ
நாக கங்கண நடராஜ மனோஹரீ
ஞான விக்னேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி (ஸ்ரீ)
பலவிதமாய் உனைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகமுழுதும் என தகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரீ (ஸ்ரீ)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ் கொடுமைகளை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ)
துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலை காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி(ஸ்ரீ)
லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
செள பாக்ய ஜனனி------அம்ப
லலிதே மாம்பாலய பரஸிவ வனிதே
த்ரைலோக்ய ஜனனி ----அம்ப
சீதே பரமானந்த வில சீதே
குரு பக்த ஜனெள/க வ்ராதே
பர தத்வ சுதாரஸ மிலிதே
ஷாசினி துரித விநாஸினி நிகம
நிவாஸினி விஜய விலாசனி பகவதி (லலிதே )செள
பாலே குங்கும ரேகாங்கித பாலே
பரி பாலித சுரமுனி ஜாலே
பவபாச விமோசன மூலே
ஹிமகிரி தனயே கமல சுநிலயே
சுமஹித சதயே சுந்தர
ஹ்ருதயே (லலிதே) த்ரை
ராமே கன சுந்தர மேக ஸ்யாமே
நிலயீக்ருத ஹர தனு
வாமே
சகலாகம விதி தோத்தாமே
வாமசாரிணீ காம விஹாரிணி
சாம வினோதினி சோமசேகரீ
(லலிதே) செள
துங்கே ப்ருந்தாரக பரில சதாங்கே
பரி பூரித கருணா பாங்கே
சுர ஸாஸ்த்ரவ புங்க
விபங்கே
சங்க ரஹித முனி புங்கவ நுதபத
மங்கள சுபகே ஸர்வ மங்களே (லலிதே)
த்ரை
குந்தே பரி வந்தித சனக சனந்தே
வந்தாரு மஹூசுர ப்ருந்தே
ம்ருக ராஜ ஸ்கந்தா ஸ்பந்தே
இந்திரா மந்திர பிந்து ஸமாகுல
சுந்தர சரணே த்ரிபுர ஸூந்தரி (லலிதே) செள…த்ரை
அம்பா பகவதி பிம்பா…….தரி
ஜகதம்பா…மாம் பாஹி
)
No comments:
Post a Comment