Thursday, May 24, 2012

en ninaivugalin e -pathivu privacy-tirukkural

குறிப்பறிதல்



கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்  மாறாநீர் வையக் கணி.
701
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
702
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
703
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை  உறுப்போ ரனையரால் வேறு.
704
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்  என்ன பயத்தவோ கண்?
705
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்  கடுத்தது காட்டும் முகம்.
706
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்  காயினும் தான்முந் துறும்.
707
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி  உற்ற துணர்வார்ப் பெறின்.
708
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
709
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.
710

அவையறிதல்



அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்  தொகையறிந்த தூய்மை யவர்.
711
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்  நடைதெரிந்த நன்மை யவர்.
712
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
713
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்  வான்சுதை வண்ணம் கொளல்.
714
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்  முந்து கிளவாச் செறிவு.
715
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
716
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
717
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்  பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
718
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்  நன்குசலச் சொல்லு வார்.
719
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்  அல்லார்முன் கோட்டி கொளல்.
720

அவையஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்  தொகையறிந்த தூய்மை யவர்.
721
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்  கற்ற செலச்சொல்லு வார்.
722
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
723
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற  மிக்காருள் மிக்க கொளல்.
724
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
725
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்  நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
726
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து  அஞ்சு மவன்கற்ற நூல்.
727
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்  நன்கு செலச்சொல்லா தார்.
728
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
729
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்  கற்ற செலச்சொல்லா தார்.
730
அமைச்சியல் முற்றிற்று

அங்கவியல்



நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்  செல்வரும் சேர்வது நாடு.
731
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு.
732
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு  இறையொருங்கு நேர்வது நாடு.
733
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்  சேரா தியல்வது நாடு.
734
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்  கொல்குறும்பும் இல்லது நாடு.
735
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா  நாடென்ப நாட்டின் தலை.
736
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்  வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்  அணியென்ப நாட்டிவ் வைந்து.
738
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
739
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே  வேந்தமை வில்லாத நாடு.
740

அரண்



ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்  போற்று பவர்க்கும் பொருள்.
741
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்  காடும் உடைய தரண்.
742
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்  அமைவரண் என்றுரைக்கும் நூல்.
743
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
744
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்  நிலைக்கெளிதாம் நீரது அரண்.
745
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.
746
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்  பற்றற் கரியது அரண்.
747
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்  பற்றியார் வெல்வது அரண்.
748
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து  வீறெய்தி மாண்ட தரண்.
749
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி  இல்லார்கண் இல்லது அரண்.
750

பொருள்செயல்வகை



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்  பொருளல்லது இல்லை பொருள்.
751
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை  எல்லாரும் செய்வர் சிறப்பு.
752
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்  எண்ணிய தேயத்துச் சென்று.
752
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து  தீதின்றி வந்த பொருள்.
754
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்  புல்லார் புரள விடல்.
755
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்  தெறுபொருளும் வேந்தன் பொருள்.
756
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்  செல்வச் செவிலியால் உண்டு.
757
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று  உண்டாகச் செய்வான் வினை.
758
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்  எஃகதனிற் கூரிய தில்.
759
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்  ஏனை இரண்டும் ஒருங்கு.
760

படைமாட்சி



உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்  வெறுக்கையுள் எல்லாம் தலை.
761
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்  தொல்படைக் கல்லால் அரிது.
762
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
763
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
764
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்  ஆற்ற லதுவே படை.
765
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
766
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
767
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
768
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்  இல்லாயின் வெல்லும் படை.
769
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை  தலைமக்கள் இல்வழி இல்.
770

படைச்செருக்கு



என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை  முன்நின்று கல்நின் றவர்.
771
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
772
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்  ஊராண்மை மற்றதன் எஃகு.
773
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
774
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்  ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்  வைக்கும்தன் நாளை எடுத்து.
776
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
778
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
779
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு  இரந்துகோள் தக்கது உடைத்து.
780

நட்ப


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
781
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
782
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்  பண்புடை யாளர் தொடர்பு.
783
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்  மேற்செனறு இடித்தற் பொருட்டு.
784
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்  நட்பாங் கிழமை தரும்.
785
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
786
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்  அல்லல் உழப்பதாம் நட்பு.
787
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
788
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
789
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று  புனையினும் புல்லென்னும் நட்பு.
790

நட்பாராய்தல்



நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
791
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை  தான்சாம் துயரம் தரும்.
792
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
793
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
794
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய  வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
795
கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை  நீட்டி அளப்பதோர் கோல்.
796
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
797
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
798
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை  உள்ளினும் உள்ளஞ் சுடும்.
799
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
800

பழைமை



பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
801
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு  உப்பாதல் சான்றோர் கடன்.
802
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை  செய்தாங்கு அமையாக் கடை.
803
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்  கேளாது நட்டார் செயின்
.
804
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க  நோதக்க நட்டார் செயின்.
805
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்  தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
806
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
807
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு  நாளிழுக்கம் நட்டார் செயின்.
808
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை  விடாஅர் விழையும் உலகு.
809
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
810

தீ நட்பு



பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை  பெருகலிற் குன்றல் இனிது.
811
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை  பெறினும் இழப்பினும் என்?
812
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
813
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்  தமரின் தனிமை தலை.
814
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை  எய்தலின் எய்தாமை நன்று.
815
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்  ஏதின்மை கோடி உறும்.
816
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
817
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
818
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு  சொல்வேறு பட்டார் தொடர்பு.
819
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ  மன்றில் பழிப்பார் தொடர்பு.
820

கூடாநட்பு



சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.
821
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்  மனம்போல வேறு படும்.
822
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
823
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
824
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்  சொல்லினால் தேறற்பாற்று அன்று.
825
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்  ஒல்லை உணரப் படும்.
826
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
827
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்  அழுதகண் ணீரும் அனைத்து.
828
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து  நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
829
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு  அகநட்பு ஒரீஇ விடல்.
830

பேதைமை



பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு  ஊதியம் போக விடல்.
831
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை  கையல்ல தன்கட் செயல்
.
832
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்  பேணாமை பேதை தொழில்
833
ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்  பேதையின் பேதையார் இல்.
834
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்  தான்புக் கழுந்தும் அளறு.
835
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்  பேதை வினைமேற் கொளின்.
836
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
837
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்  கையொன்று உடைமை பெறின்.
838
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்  பீழை தருவதொன் றில்.
839
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்  குழாஅத்துப் பேதை புகல்.
840

புல்லறிவாண்மை



அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு
.
841
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்
.
842
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
843
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.
844
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
.
845
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி
.
846
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
.
847
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்
.
848
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.
849
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்.
850

இகல்



இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பார஧க்கும் நோய்.
851
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
852
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்  தாவில் விளக்கம் தரும்
.
853
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்  துன்பத்துள் துன்பங் கெடின்.
854
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே  மிக்லூக்கும் தன்மை யவர்.
855
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
856
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்  இன்னா அறிவி னவர்.
857
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
858
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை  மிகல்காணும் கேடு தரற்கு.
859
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்  நன்னயம் என்னும் செருக்கு.
860

பகைமாட்சி



வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
861
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.
862
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
863
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்  யாங்கணும் யார்க்கும் எளிது.
864
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்  பண்பிலன் பற்றார்க்கு இனிது.
865
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்  பேணாமை பேணப் படும்.
866
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து  மாணாத செய்வான் பகை.
867
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு  இனனிலனாம் ஏமாப் புடைத்து.
868
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா  அஞ்சும் பகைவர்ப் பெறின்.
869
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்  ஒல்லானை ஒல்லா தொளி.
870

பகைத்திறந்தெரிதல்



பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
871
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க  சொல்லேர் உழவர் பகை.
872
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
873
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்  தகைமைக்கண் தங்கிற்று உலகு.
874
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்  இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
875
தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
876
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
877
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
878
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
879
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
880

உட்பகை



நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
881
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
882
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து  மட்பகையின் மாணத் தெறும்.
883
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா  ஏதம் பலவும் தரும்.
884
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்  ஏதம் பலவும் தரும்.
885
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.
886
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே  உட்பகை உற்ற குடி.
887
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
888
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
889
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்  பாம்போடு உடனுறைந் தற்று.
890

பெரியாரைப் பிழையாமை



ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.
891
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும்
.
892
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.
893
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்.
894
யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர்
.
895
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
.
896
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
.
897
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
898
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்
.
899
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.
900

பெண்வழிச்சேறல்



மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது.
901
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்
.
902
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும்
.
903
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
904
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.
905
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர்
.
906
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
.
907
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட் டாங்கு ஒழுகு பவர்
.
908
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல்.
909
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
910

வரைவின்மகளிர்



அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.
911
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.
912
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்  ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
913
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்  ஆயும் அறிவி னவர்.
914
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்  மாண்ட அறிவி னவர்.
915
தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்  புன்னலம் பாரிப்பார் தோள்.
916
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்  பேணிப் புணர்பவர் தோள்.
917
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப  மாய மகளிர் முயக்கு
.
918
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்  பூரியர்கள் ஆழும் அளறு.
919
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
920

கள்ளுண்ணாமை



உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்  கட்காதல் கொண்டொழுகு வார்.
921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்  எண்ணப் படவேண்டா தார்.
922
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்  சான்றோர் முகத்துக் களி.
923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்  பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
924
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.
925
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்  நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
926
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்  கள்ளொற்றிக் கண்சாய் பவர்3
927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
928
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்  குளித்தானைத் தீத்துரீஇ அற்ற
929
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்  உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
930

சூது



வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்  தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
931
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்  நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
932
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
933
சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
934
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
935
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
937
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து  அல்லல் உழப்பிக்கும் சூது.
938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்  அடையாவாம் ஆயங் கொளின்.
939
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்  உழத்தொறூஉம் காதற்று உயிர்.
940

மருந்து



மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்  வளிமுதலா எண்ணிய மூன்று.
941
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது  அற்றது போற்றி உணின்.
942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
943
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்  ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
945
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்  கழிபேர் இரையான்கண் நோய்.
946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
947
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்  வாய்நாடி வாய்ப்பச் செயல்.
948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று  அப்பால் நாற் கூற்றே மருந்து.
950
அங்கவியல் முற்றிற்று

ஒழிபியல்



குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்  செப்பமும் நாணும் ஒருங்கு.
951
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்  இழுக்கார் குடிப்பிறந் தார்.
952
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
953
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
954
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி  பண்பில் தலைப்பிரிதல் இன்று.
955
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்.
956
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்  மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.
957
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்  குலத்தின்கண் ஐயப் படும்.
958
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்  குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
959
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்  வேண்டுக யார்க்கும் பணிவு.
960

மானம்



இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
961
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
962
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
963
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
964
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ  குன்றி அனைய செயின்.
965
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை.
966
ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே  கெட்டான் எனப்படுதல் நன்று.
967
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை  பீடழிய வந்த இடத்து.
968
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
969
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
970

பெருமை



ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு  அஃதிறந்து வாழ்தும் எனல்.
971
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான்.
972
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்  கீழல்லார் கீழல் லவர்.
973
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
974
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்  அருமை உடைய செயல்.
975
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்  பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
976
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
977
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
978
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
979
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்  குற்றமே கூறி விடும்.
980

சான்றாண்மை



கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து  சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
981
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
982
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு  ஐந்துசால் ஊன்றிய தூண்.
983
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
984
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்  மாற்றாரை மாற்றும் படை.
985
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி  துலையல்லார் கண்ணும் கொளல்.
986
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்  என்ன பயத்ததோ சால்பு.
987
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்  திண்மை உண் டாகப் பெறின்.
988
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு  ஆழி எனப்படு வார்.
89
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்  தாங்காது மன்னோ பொறை.
990

பண்புடைமை



எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்  பண்புடைமை என்னும் வழக்கு.
991
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்  பண்புடைமை என்னும் வழக்கு.
992
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க  பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
993
யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
994
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்  பண்புள பாடறிவார் மாட்டு.
995
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.
996
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்  மக்கட்பண்பு இல்லா தவர்
.
997
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
998
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
999
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்  கலந்தீமை யால்திரிந் தற்று.
1000

நன்றியில்செல்வம்



வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்  செத்தான் செயக்கிடந்தது இல்.
1001
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்  மருளானாம் மாணாப் பிறப்பு
1002
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
1003
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்  நச்சப் படாஅ தவன்.
1004
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
1005
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று  ஈதல் இயல்பிலா தான்.
1006
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்  பெற்றாள் தமியள்மூத் தற்று.
1007
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
1008
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய  ஒண்பொருள் கொள்வார் பிறர்.
1009
சீருடைச் செல்வர் சிறுதுனி மார஧
வறங்கூர்ந் தனையது உடைத்து.
1010

நாணுடைமை



கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
1011
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல  நாணுடைமை மாந்தர் சிறப்பு.
1012
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்  நன்மை குறித்தது சால்பு.
1013
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
1014
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு  உறைபதி என்னும் உலகு.
1015
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்  பேணலர் மேலா யவர்.
1016
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
1017
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
1018
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை.
1019
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
1020

குடிசெயல்வகை



கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்  பெருமையின் பீடுடையது இல்.
1021
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்  நீள்வினையால் நீளும் குடி.
1022
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்  மடிதற்றுத் தான்முந் துறும்.
1023
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.
1024
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.
1025
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த  இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
1026
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்  ஆற்றுவார் மேற்றே பொறை.
1027
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து  மானங் கருதக் கெடும்.
1028
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்  குற்ற மறைப்பான் உடம்பு.
1029
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்  நல்லாள் இலாத குடி.
1030

உழவு



சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
1031
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது  எழுவாரை எல்லாம் பொறுத்து.
1032
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்  தொழுதுண்டு பின்செல் பவர்.
1033
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்  அலகுடை நீழ லவர்.
1034
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
1035
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்  விட்டேம்என் பார்க்கும் நிலை.
1036
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.
1037
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
1038
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து  இல்லாளின் ஊடி விடும்.
1039
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்  நிலமென்னும் நல்லாள் நகும்.
1040

நல்குரவு



இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்  இன்மையே இன்னா தது.
1041
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
1042
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக  நல்குரவு என்னும் நசை
.
1043
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  சொற்பிறக்கும் சோர்வு தரும்.
1044
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்  துன்பங்கள் சென்று படும்.
1045
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்  சொற்பொருள் சோர்வு படும்.
1046
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
1047
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
1048
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்  யாதொன்றும் கண்பாடு அரிது.
1049
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
1050

இரவு



இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
1051
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
1052
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் 
முன்நின்று  இரப்புமோ ரேஎர் உடைத்து.
1053
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
1054
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று  இரப்பவர் மேற்கொள் வது.
1055
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை  எல்லாம் ஒருங்கு கெடும்.
1056
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.
1057
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்  மரப்பாவை சென்றுவந் தற்று.
1058
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்  மேவார் இலாஅக் கடை.
1059
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை  தானேயும் சாலும் கரி.
1060

இரவச்சம்



கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.
1061
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
1062
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்  வன்மையின் வன்பாட்ட தில்.
1063
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்  காலும் இரவொல்லாச் சால்பு.
1064
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது  உண்ணலின் ஊங்கினிய தில்.
1065
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
1066
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
.
1067
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்  பார்தாக்கப் பக்கு விடும்.
1068
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
1069
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
1070

கயமை



மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
1071
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
1072
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
1073
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
1074
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
1075
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
1076
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
1077
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.
1078
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்  வடுக்காண வற்றாகும் கீழ்.
1079
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
1080
ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று

காமத்துப்பால்

களவியல்


3.1.1

தகையணங்குறுத்தல்



அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
1081
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு  தானைக்கொண் டன்ன துடைத்து.
1082
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்  பெண்டகையால் பேரமர்க் கட்டு.
1083
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்  பேதைக்கு அமர்த்தன கண்.
1084
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்  நோக்கமிம் மூன்றும் உடைத்து.
1085
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  செய்யல மன்இவள் கண்.
1086
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
1087
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்  நண்ணாரும் உட்குமென் பீடு.
1088

No comments:

Post a Comment