Thursday, May 24, 2012

en ninaivugalin e -pathivu privacy-tirukkural

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
1089
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
1090

குறிப்பறிதல்



இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
1091
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது.
1092
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.
1093
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்  தான்நோக்கி மெல்ல நகும்.
1094
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்  சிறக்கணித்தாள் போல நகும்
1095
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்  ஒல்லை உணரப் படும்
.
1096
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்  உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
1097
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்  பசையினள் பைய நகும்.
1098
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
1099
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
1100

புணர்ச்சிமகிழ்தல்



கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.
1101
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
1102
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்  தாமரைக் கண்ணான் உலகு.
1103
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?
1104
வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.
1105
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.
1106
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்  அம்மா அரிவை முயக்கு.
1107
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
1108
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
1109
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மாட்டு.
1110

நலம்புனைந்துரைத்தல்



நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
1111
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்  பலர்காணும் பூவொக்கும் என்று.
1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்  வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
1113
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்  மாணிழை கண்ணொவ்வேம் என்று.
1114
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு  நல்ல படாஅ பறை.
1115
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
1116
அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.
1117
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மத.
1118
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்  பலர்காணத் தோன்றல் மதி.
1119
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
1120

காதற்சிறப்புரைத்தல்



பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
1121
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
1122
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்  திருநுதற்கு இல்லை இடம்.
1123
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
1124
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்  ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
1125
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா  நுண்ணியர்எம் காத லவர்.
1126
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
1127
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
1128
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் வூர்.
1129
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்  ஏதிலர் என்னும் இவ் வூர்.
1130

நாணுத்துறவுரைத்தல்



காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
1131
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
1132
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்  காமுற்றார் ஏறும் மடல்
.
1133
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
1134
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு  மாலை உழக்கும் துயர்.
1135
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற  படல்ஒல்லா பேதைக்கென் கண்.
1136
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
1137
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
1138
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
1139
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
1140

அலரறிவுறுத்தல்



அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
1141
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
1142
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
1143
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
1144
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.
1145
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
1146
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.
1147
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
1148
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.
1149
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர்.
1150
களவியல் முற்றிற்று

கற்பியல்



பிரிவாற்றாமை



செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.
1151
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.
1152
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.
1153
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு
.
1154
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.
1155
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.
1156
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.
1157
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு.
1158
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
1159
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்.
1160

படர்மெலிந்திரங்கல்



மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.
1161
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.
1162
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து.
1163
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
1164
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
1165
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது.
1166
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
1167
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
1168
> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா
.
1169
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.
1170

கண்விதுப்பழிதல்



கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.
1171
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்?
1172
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
1173
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.
1174
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.
1175
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
1176
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
1177
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.
1178
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்.
1179
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.
1180

பசப்புறுபருவரல்



நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற.
1181
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு.
1182
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.
1183
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.
1184
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது.
1185
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
1186
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
1187
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல்.
1188
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்.
1189
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.
1190

தனிப்படர்மிகுதி



தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.
1191
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அள க்கும் அளி.
1192
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
1193
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
1194
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை
.
1195
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.
1196
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.
1197
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.
1198
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
1199
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.
1200

நினைந்தவர்புலம்பல்



உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
1201
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.
1202
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்.
1203
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்
.
1204
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்.
1205
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்.
1206
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.
1207
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.
1208
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.
1209
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.
1210

கனவுநிலையுரைத்தல்



காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
1211
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.
1212
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
1213
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.
1214
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
1215
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
1216
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.
1217
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
1218
நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.
1219
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.
1220

பொழுதுகண்டிரங்கல்



மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.
1221
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.
1222
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.
1223
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.
1224
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?
1225
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.
1226
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
1227
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.
1228
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.
1229
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.
1230

உறுப்புநலனழிதல்



சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்.
1231
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
1232
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
1233
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.
1234
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்.
1235
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.
1236
பாடுபெறுதியோ நெஞ்சே 
கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.
1237
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
1238
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
1239
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
1240

நெஞ்சொடுகிளத்தல்



நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
1241
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
1242
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்.
1243
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.
1244
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்.
1245
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
1246
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.
1247
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
1248
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
1249
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
1250

No comments:

Post a Comment