ஆத்திசூடி மூலமும் உரையும்
|
|
(பதவுரை) அறம் - தருமத்தை,
செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை
கொள்ளு.
(பொழிப்புரை) நீ
தருமம் செய்ய ஆசைப்படு. |
|
|
|
|
|
(பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவது,
சினம்-கோபமாம்.
(பொழிப்புரை) கோபம்
தணியத் தகுவதாம். |
|
|
|
|
|
(பதவுரை) இயல்வது-கொடுக்கக்கூடிய
பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,
(பொழிப்புரை) கொடுக்க
முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. |
|
|
|
|
|
(பதவுரை) ஈவது-(ஒருவர்க்கு
மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே.
(பொழிப்புரை) ஒருவர்
மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ
தடுக்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) உடையது - (உனக்கு)
உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே.
(பொழிப்புரை) உன்னுடைய
பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
உன்னுடைய பொருளை அல்லது
கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா. |
|
|
|
|
|
(பதவுரை) ஊக்கம் -
(செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல் - கைவிடாதே.
(பொழிப்புரை) நீ
எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள்
விகுதி.) |
|
|
|
|
|
(பதவுரை) எண் - கணித
நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் -
இகழ்ந்து தள்ளாதே.
(பொழிப்புரை)
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் -
கணக்கு.) |
|
|
|
|
|
(பதவுரை)
ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி-
பழிப்பாகும்.
(பொழிப்புரை)
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை
வேண்டாதே. |
|
|
|
|
|
(பதவுரை) ஐயம் -
பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து,
உண் - நீ உண்ணு.
(பொழிப்புரை)
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.
ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும். |
|
|
|
|
|
(பதவுரை) ஒப்புரவு-உலக
நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட.
(பொழிப்புரை)
உலகத்தோடு பொருந்த நடந்துகொள். |
|
|
|
|
|
(பதவுரை) ஓதுவது -
எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் - விடாதே.
(பொழிப்புரை) அறிவு
தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. |
|
|
|
|
|
(பதவுரை) ஒளவியம் -
பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.
(பொழிப்புரை) நீ
ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) அஃகம் - (நெல்
முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைத்து விற்காதே.
(பொழிப்புரை) மிகுந்த
இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) கண்டு-(ஒன்றைக்)
கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் -
சொல்லாதே.
(பொழிப்புரை) கண்ணாற்
கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.) |
|
|
|
|
|
(பதவுரை)
ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத்
தழுவு.
(பொழிப்புரை) ஙஎன்னும்
எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக்
கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத்
தழுவிக்கொள்.
[ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச்
சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி
இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக்
கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.] |
|
|
|
|
|
(பதவுரை)
சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய்
தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு
(பொழிப்புரை) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து
முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.) |
|
|
|
|
|
(பதவுரை)
ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு.
(பொழிப்புரை)
கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.] |
|
|
|
|
|
(பதவுரை)
இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை,
எடேல் - கட்டாதே
(பொழிப்புரை)
அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப்
பெருக வாழ்'' என்பது பழமொழி. |
|
|
|
|
|
(பதவுரை)
இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை,
அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு)
நண்பு கொள்.
(பொழிப்புரை) நற்குண
நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய. |
|
|
|
|
|
(பதவுரை)
தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும்,
பேண்-காப்பாற்று
(பொழிப்புரை) உன்
தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று. |
|
|
|
|
|
(பதவுரை) நன்றி - (ஒருவர்
உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.
(பொழிப்புரை) உனக்குப்
பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு.
உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை
செய்தலாகாது. |
|
|
|
|
|
(பதவுரை) பருவத்தே - தக்க
காலத்திலே, பயிர்செய்-பயிரிடு.
(பொழிப்புரை) விளையும்
பருவமறிந்து பயிரிடு.
எச்செயலும் அதற்குரிய காலத்திலே
செய்யப்படவேண்டும். |
|
|
|
|
|
(பதவுரை) மன்று -
நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும்
குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே.
(பொழிப்புரை)
நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று
பொருளாம். |
|
|
|
|
|
(பதவுரை) இயல்பு அலாதன -
இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே.
(பொழிப்புரை)
நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே. |
|
|
|
|
|
(பதவுரை) அரவம் -
(நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே.
(பொழிப்புரை)
பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே. |
|
|
|
|
|
(பதவுரை) இலவம்பஞ்சில் -
இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு.
(பொழிப்புரை)
இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு. |
|
|
|
|
|
(பதவுரை) வஞ்சகம்-கபடச்
சொற்களை, பேசேல்-பேசாதே.
(பொழிப்புரை) கபடச்
சொற்களைப் பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) அழகு அலாதன -
சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே.
(பொழிப்புரை) இழிவான
செயல்களைச் செய்யாதே. |
|
|
|
|
|
(பதவுரை) இளமையில் -
இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்.
(பொழிப்புரை) இளமைப்
பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள். |
|
|
|
|
|
(பதவுரை) அறனை-தருமத்தை,
மறவேல் - (ஒருபோதும்) மறவாதே.
(பொழிப்புரை) தருமத்தை
எப்பொழுதும் மறவாமல் செய். |
|
|
|
|
|
(பதவுரை) அனந்தல் -
தூக்கத்தை, ஆடேல் - மிகுதியாகக் கொள்ளாதே.
(பொழிப்புரை)
மிகுதியாகத் தூங்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) கடிவது -
(ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற - மறந்துவிடு.
(பொழிப்புரை) யாரையும்
கோபத்தாற் கடிந்து பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) காப்பது -
(உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம் -
நோன்பாகும்.
(பொழிப்புரை) பிற
உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே
தவமாகும்.
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற்
செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம். |
|
|
|
|
|
(பதவுரை)
கிழமைப்பட-(உன்உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி,
வாழ் - வாழு.
(பொழிப்புரை) உன்
உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு. |
|
|
|
|
|
(பதவுரை) கீழ்மை -
இழிவானவற்றை, அகற்று - நீக்கு.
(பொழிப்புரை) இழிவான
குணஞ் செயல்களை நீக்கு. |
|
|
|
|
|
(பதவுரை) குணமது -
(மேலாகிய) குணத்தை, கைவிடேல் - கைவிடாதே.
(பொழிப்புரை)
நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே.
அது: பகுதிப்பொருள் விகுதி. |
|
|
|
|
|
(பதவுரை) கூடி -
(நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு)
நீங்காதே.
(பொழிப்புரை)
நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப்
பிரியாதே. |
|
|
|
|
|
(பதவுரை) கெடுப்பது -
பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி - விட்டு விடு.
(பொழிப்புரை)
பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச்
செய்யாதே.) |
|
|
|
|
|
(பதவுரை) கேள்வி -
கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்ப தற்கு; முயல் - முயற்சி
செய்.
(பொழிப்புரை)
கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய். |
|
|
|
|
|
(பதவுரை) கைவினை -
(உனக்குத் தெரிந்த) கைத் தொழிலை, கரவேல் - ஒளியாதே.
(பொழிப்புரை) உனக்குத்
தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற்
செய்.
(ஏதேனும் கைத்தொழில்
செய்துகொண்டிரு.) |
|
|
|
|
|
(பதவுரை)
கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு,
விரும்பேல்-ஆசைப்படாதே.
(பொழிப்புரை) பிறர்
பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே. |
|
|
|
|
|
(பதவுரை) கோது-குற்றம்
பொருந்திய, ஆட்டு- விளையாட்டை, ஒழி-நீக்கு.
(பொழிப்புரை) குற்றமான
விளையாட்டை விட்டுவிடு. |
|
|
|
|
|
(பதவுரை)
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச்
சேர்ந்திரு.
(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில்
நிறைந்த பெரியோர் களின் கூட்டத்தைச்
சேர்ந்திரு. |
|
|
|
|
|
(பதவுரை)
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச்
சேர்ந்திரு.
(பொழிப்புரை) அறிவொழுக்கங்களில்
நிறைந்த பெரியோர் களின் கூட்டத்தைச்
சேர்ந்திரு. |
|
|
|
|
|
(பதவுரை) சித்திரம்-பொய்ம்மொழிகளை,
பேசேல்-பேசாதே.
(பொழிப்புரை) பொய் வார்த்தைகளை மெய்போலப்
பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை,
மறவேல்- மறந்துவிடாதே.
(பொழிப்புரை) புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை
யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன்
பொருள். |
|
|
|
|
|
(பதவுரை) சுளிக்க -
(கேட்பவர்) கோபிக்கும்படியாக,சொல்லேல் - (ஒன்றையும்)
பேசாதே.
(பொழிப்புரை) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) சூது-சூதாடலை,
விரும்பேல்-(ஒருபோதும்) விரும்பாதே.
(பொழிப்புரை)
ஒருபொழுதும் சூதாடுதலை
விரும்பாதே. |
|
|
|
|
|
49. செய்வன
திருந்தச்செய்.
|
(பதவுரை)
செய்வன-செய்யும் செயல்களை, திருந்த - செவ்வையாக,
செய் - செய்.
(பொழிப்புரை)
செய்யுஞ் செயல்களைத்,
திருத்தமாகச் செய். |
|
|
|
|
|
(பதவுரை) சேர் இடம் -
அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து,
சேர் - அடை
(பொழிப்புரை) சேரத்தக்க நல்லிடத்தை
ஆராய்ந்தறிந்து சேர |
|
|
|
|
|
(பதவுரை) சை
என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி,
திரியேல் - திரியாதே
(பொழிப்புரை) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி
வீணாய்த் திரியாதே |
|
|
|
|
|
(பதவுரை) சொல்-(நீ
பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல் - மறதிபடப்
பேசாதே
(பொழிப்புரை) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து
குற்றமுண்டாகப் பேசாதே |
|
|
|
|
|
(பதவுரை) சோம்பி -
(நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல்கொண்டு,
திரியேல் - வீணாகத் திரியாதே.
(பொழிப்புரை) முயற்சியின்றிச் சோம்பேறியாகத்
திரியாதே. |
|
|
|
|
|
(பதவுரை) தக்கோன் என -
(உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி -
நடந்துகொள
(பொழிப்புரை) பெரியோர்கள் உன்னைத் தக்கவன்
என்று புகழும்படி நடந்துகொள். |
|
|
|
|
|
(பதவுரை) தானமது -
(சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு -
ஆசைப்படு.
(பொழிப்புரை) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை
விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி |
|
|
|
|
|
56. திருமாலுக் கடிமை
செய்.
|
(பதவுரை) திருமாலுக்கு -
விட்டுணுவுக்கு, அடிமைசெய் - தொண்டுபண்ணு
(பொழிப்புரை) நாராயணமூர்த்திக்குத் தொண்டு
செய |
|
|
|
|
|
(பதவுரை) தீவினை-பாவச்
செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு.
(பொழிப்புரை) பாவச் செயல்களைச் செய்யாமல்
விலக்கு. |
|
|
|
|
|
58. துன்பத்திற்
கிடங்கொடேல்.
|
(பதவுரை) துன்பத்திற்கு -
வருத்தத்திற்கு, இடங்கொடேல் - (சிறிதாயினும்)
இடங்கொடாதே.
(பொழிப்புரை) துன்பத்திற்குச் சிறிதும்
இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை
விட்டுவிடலாகாது |
|
|
|
|
|
(பதவுரை) தூக்கி - (முடிக்கும்
வழியை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய்
- (அதன் பின்பு) செய்.
(பொழிப்புரை) முடிக்கத் தகுந்த உபாயத்தை
ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச்
செய |
|
|
|
|
|
(பதவுரை) தெய்வம் - கடவுளை,
இகழேல் - பழிக்காதே.
(பொழிப்புரை) கடவுளை இகழ்ந்து
பேசாதே |
|
|
|
|
|
(பதவுரை) தேசத்தோடு - நீ வசிக்கும்
தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒத்து,
வாழ் - வாழு.
(பொழிப்புரை) நீ வசிக்கும் தேசத்தவருடன்
பகையில்லாமலபொருந்தி வாழு. |
|
|
|
|
|
(பதவுரை) தையல் - (உன்) மனைவியினுடைய,
சொல்- சொல்லை, கேளேல் - கேட்டு
நடவாதே.
(பொழிப்புரை) மனைவி சொல் கேட்டு ஆராயாமல்
நடவாதே. |
|
|
|
|
|
(பதவுரை) தொன்மை - பழைமையாகிய
நட்பை,மறவேல் - மறந்துவிடாதே
(பொழிப்புரை) பழைமையாகிய நட்பினை
மறந்துவிடாதே |
|
|
|
|
|
(பதவுரை) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே,
தொடரேல்-சம்பந்தப்படாதே
(பொழிப்புரை) தோல்வியடையக்கூடிய காரியங்களில்
தலையிடாதே. |
|
|
|
|
|
(பதவுரை) நன்மை - புண்ணியத்தையே,
கடைப்பிடி-உறுதியாகப் பிடி
(பொழிப்புரை) நல்வினை செய்தலை உறுதியாகப்
பற்றிக்கொள |
|
|
|
|
|
(பதவுரை) நாடு - உன் நாட்டில் உள்ளோர்
பலரும்,ஒப்பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல
காரியங்களை,செய் - செய்வாயாக.
(பொழிப்புரை) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய
நல்ல செயல்களைச் செய |
|
|
|
|
|
(பதவுரை) நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த)
நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்)
நீங்காதே.
(பொழிப்புரை) உன்னுடைய நல்ல நிலையினின்றும்
தாழ்ந்துவிடாதே |
|
|
|
|
|
(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே,
விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.
(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி
விளையாடாதே. |
|
|
|
|
|
(பதவுரை) நுண்மை - (நோயைத்தருகிற)
சிற்றுண்டிகளை,நுகரேல் - உண்ணாதே.
(பொழிப்புரை) நோயைத் தரும் சிற்றுண்டிகளை
உண்ணாதே |
|
|
|
|
|
(பதவுரை) நூல் பல - (அறிவை வளர்க்கிற) நூல்கள்
பலவற்றையும், கல் - கற்றுக்கொள்.
(பொழிப்புரை) அறிவை வளர்க்கும் பல நூல்களையும்
கற்றுக்கொள |
|
|
|
|
|
(பதவுரை) (நெற்பயிர் -
நெல்லுப் பயிரை, விளை- (வேண்டிய முயற்சி செய்து)
விளைவி.
(பொழிப்புரை) நெற்பயிரை முயற்சியெடுத்து
விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே
மேல |
|
|
|
|
|
(பதவுரை) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்)
செவ்வைப் பட, ஒழுகு - நட.
(பொழிப்புரை) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான
வழியில் நட |
|
|
|
|
|
(பதவுரை) நை - (பிறர்) கெடத்தக்க,
வினை - தீவினைகளை, நணுகேல் - (ஒருபோதும்)
சாராதே.
(பொழிப்புரை) பிறர் வருந்தத்தகுந்த
தீவினைகளைச்செய்யாதே. |
|
|
|
|
|
(பதவுரை) நொய்ய - (பயன் இல்லாத) அற்ப
வார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.
(பொழிப்புரை) வீணான அற்ப வார்த்தைகளைப்
பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) நோய்க்கு - வியாதிகளுக்கு,
இடங்கொடேல்-இடங்கொடாதே.
(பொழிப்புரை) உணவு, உறக்கம் முதலியவற்றால்
பிணிக்கு இடங்கொடுக்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப்
படுவனவாகிய இழி சொற்களை, பகரேல் - பேசாதே.
(பொழிப்புரை) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ்
சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்
சொல் என்பனவும்; இடக்கர்ச்
சொற்களுமாம். |
|
|
|
|
|
(பதவுரை) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும்
விடத்தைக்கொடுக்கிற) பாம்பைப்போல்பவர்களுடனே, பழகேல்
-சகவாசஞ் செய்யாதே.
(பொழிப்புரை) பாம்புபோலும் கொடியவர்களுடன்
பழக்கஞ் செய்யாதே. |
|
|
|
|
|
(பதவுரை) பிழைபட-வழுக்கள்
உண்டாகும்படி,சொல்லேல்-ஒன்றையும் பேசாதே.
(பொழிப்புரை) குற்ற முண்டாகும்படி
பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) பீடு - பெருமையை, பெற
- பெறும்படியாக,நில் - (நல்ல வழியிலே) நில்..
(பொழிப்புரை) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே
நில்லு. |
|
|
|
|
|
80. புகழ்ந்தாரைப்
போற்றிவாழ்.
|
(பதவுரை) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து
அடுத்தவரை,போற்றி - (கைவிடாமற்) காப்பாற்றி,
வாழ் - வாழு.
(பொழிப்புரை) அடுத்தவரை ஆதரித்து
வாழு. |
|
|
|
|
|
(பதவுரை) பூமி - (உன்) விளைநிலத்தை,
திருத்தி-சீர்திருத்திப்பயிர் செய்து, உண் -
உண்ணு.
(பொழிப்புரை) பூமியைச் சீர்திருத்திப்
பயிர்செய்து உண்ணு. |
|
|
|
|
|
82. பெரியாரைத்
துணைக்கொள்.
|
(பதவுரை) பெரியாரை - (அறிவிலே சிறந்த)
பெரியோரை,துணைக்கொள் - உனக்குத் துணையாகப்
பேணிக்கொள்.
(பொழிப்புரை) பெரியாரைத் துணையாக
நாடிக்கொள். |
|
|
|
|
|
(பதவுரை) பேதைமை - அஞ்ஞானத்தை,
அகற்று - போக்கு.
(பொழிப்புரை) அறியாமையை
நீக்கிவிடு. |
|
|
|
|
|
(பதவுரை) பையலோடு - சிறு பிள்ளையோடு,
இணங்கேல் - கூடாதே.
(பொழிப்புரை) அறிவில்லாத சிறுவனோடு கூடித்
திரியாதே. |
|
|
|
|
|
85. பொருடனைப்
போற்றிவாழ்.
|
(பதவுரை) பொருள்தனை - திரவியத்தை,
போற்றி - (மேன் மேலும் உயரும்படி) காத்து,
வாழ் - வாழு.
(பொழிப்புரை) பொருளை வீண்செலவு செய்யாமற்
பாதுகாத்து வாழு. |
|
|
|
|
|
86. போர்த்தொழில்
புரியேல்.
|
(பதவுரை) போர் - சண்டையாகிய,
தொழில் - தொழிலை,புரியேல் -
செய்யாதே.
(பொழிப்புரை) யாருடனும் கலகம்
விளைக்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) மனம் - உள்ளம்,
தடுமாறேல் - கலங்காதே.
(பொழிப்புரை) எதனாலும் மனக்கலக்க
மடையாதே. |
|
|
|
|
|
88. மாற்றானுக்
கிடங்கொடேல்.
|
(பதவுரை) மாற்றானுக்கு - பகைவனுக்கு,
இடம் கொடேல் -
இடங்கொடாதே.
(பொழிப்புரை) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி
இடங்கொடுக்காதே. |
|
|
|
|
|
(பதவுரை) மிகைபட - சொற்கள் அதிகப்படும்படி,
சொல்லேல் - பேசாதே.
(பொழிப்புரை) வார்த்தைகளை மிதமிஞ்சிப்
பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை,
விரும்பேல்-இச்சியாதே.
(பொழிப்புரை) மிகுதியாக உணவுண்டலை
விரும்பாதே. |
|
|
|
|
|
91. முனைமுகத்து
நில்லேல்.
|
(பதவுரை) முனைமுகத்து - சண்டை முகத்திலே,
நில்லேல் - (போய்) நில்லாதே.
(பொழிப்புரை) போர் முனையிலே
நின்றுகொண்டிருக்காதே. |
|
|
|
|
|
(பதவுரை)
மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல் -
சிநேகம் பண்ணாதே!
(பொழிப்புரை) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன்
சேர்ந்து பழகாதே. |
|
|
|
|
|
93. மெல்லினல்லாள்
தோள்சேர்.1
|
(பதவுரை) மெல் - மெல்லிய, இல்
- (உன்) மனையாட்டியாகிய, நல்லாள் - பெண்ணுடைய,
தோள் - தோள்களையே, சேர் -
பொருந்து.
(பொழிப்புரை) பிற மாதரை விரும்பாமல் உன்
மனைவியுடன் சேர்ந்து வாழு.
1. மெல்லியா டோன் சேர்' என்றும்
பாடம |
|
|
|
|
|
(பதவுரை) மேன்மக்கள் - உயர்ந்தோருடைய,
சொல் - செல்லை, கேள் - கேட்டு
நட.
(பொழிப்புரை) நல்லொழுக்கமுடைய பெரியோர்
சொல்லைக் கேட்டு நட. |
|
|
|
|
|
(பதவுரை) மைவிழியார் - மைதீட்டிய கண்களையுடைய
வேசையருடைய, மனை - வீட்டை, அகல் -
(ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ.
(பொழிப்புரை) பரத்தையர் மனையைச் சேராமல்
விலகு. |
|
|
|
|
|
(பதவுரை) மொழிவது - சொல்லப்படும் பொருளை,
அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி -
சொல்லு.
(பொழிப்புரை)சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச்
சொல்லு. |
|
|
|
|
|
(பதவுரை) மோகத்தை - ஆசையை,
முனி - கோபித்து விலக்கு.
(பொழிப்புரை) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள
ஆசையை வெறுத்துவிடு. |
|
|
|
|
|
(பதவுரை) வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை,
பேசேல் - (புகழ்ந்து) பேசாதே.
(பொழிப்புரை) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே
புகழ்ந்து பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) வாது - வாதுகளை, முன் -
(பெரியோர்) முன்னே, கூறேல் - பேசாதே.
(பொழிப்புரை) பெரியோர்களிடத்தில்
முற்பட்டு வாதாடாதே. |
|
|
|
|
|
(பதவுரை) வித்தை - கல்விப்பொருளையே,
விரும்பு - இச்சி.
(பொழிப்புரை) கல்வியாகிய நற்பொருளை
விரும்பு. |
|
|
|
|
|
(பதவுரை) வீடு - மோட்சத்தை,
பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய
ஞானவழியிலே) நில்.
(பொழிப்புரை) முத்தியைப் பெறும்படி
சன்மார்க்கத்திலே நில்லு. |
|
|
|
|
|
(பதவுரை) உத்தமனாய் - உயர்குணமுடையவனாகி,
இரு-வாழ்ந்திரு.
(பொழிப்புரை) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி
வாழு. |
|
|
|
|
|
(பதவுரை) ஊருடன் - ஊரவர்களுடனே,
கூடி - (நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ் -
வாழு.
(பொழிப்புரை) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து
வாழு. |
|
|
|
|
|
(பதவுரை) வெட்டு என - கத்திவெட்டைப்போல,
பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே.
(பொழிப்புரை) யாருடனும் கத்திவெட்டுப்போலக்
கடினமாகப் பேசாதே. |
|
|
|
|
|
(பதவுரை) வேண்டி - விரும்பி,
வினை -
தீவினையை,செயேல்-செய்யாதே.
(பொழிப்புரை) வேண்டுமென்றே தீவினைகளைச்
செய்யாதே. |
|
|
|
|
|
(பதவுரை) வைகறை-விடியற்காலத்திலே,
துயில்-நித்திரையை விட்டு, எழு -
எழுந்திரு.
(பொழிப்புரை) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே
தூக்கத்தைவிட்டு எழுந்திரு. |
|
|
|
|
|
(பதவுரை) ஒன்னாரை - பகைவர்களை,
தேறேல் - நம்பாதே.
(பொழிப்புரை) பகைவரை நம்பாதே.
'ஒன்னாரைச் சேரேல்' என்றும்
பாடமுண்டு. |
|
|
|
|
|
(பதவுரை) ஓரம் - பட்சபாதத்தை,
சொல்லேல் - (யாதொரு வழக்கிலும்) பேசாதே.
(பொழிப்புரை) எந்த வழக்கிலும் ஒருபுடைச்
சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.
ஆத்திசூடி மூலமும்
உரையும்முற்றிற்று. |
|
No comments:
Post a Comment