Tuesday, January 17, 2012

privacy-pongal


பொங்கல் பண்டிகையை நம் முன்னோர்கள் நன்றியைத் தெரிவிக்கும் பண்டிகையாக கொண்டாடினார்கள். நாமும், சூரியபகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக பொங்கலை ஞாயிறன்று சிறப்பாக கொண்டாடினோம்.
இன்று திங்களன்று கொண்டாடிய மாட்டுப் பொங்கலைப் பற்றி சில வார்த்தைகள்:
 விளைச்சலுக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்க  கொண்டாடப் படும் கொண்டாட்ட பொங்கல் தான் மாட்டுப் பொங்கல் .
 மாட்டுப் பொங்கல் அன்று காலை மாடுகளின் வசிப்பிடமான மாட்டுக் கொட்டகையை நன்கு கழுவி சுத்தம் செய்வர். அங்கு கோலமிட்டு பொங்கல் விட அடுப்பு,பானை,மற்றும் பூஜை செய்ய பூஜை சாமான்களையும் எடுத்து வைப்பர்.
மாடுகளை குளிப்பாட்டி அலங்கரிப்பர்.பூ,பொட்டு வைத்து மகிழ்வர். அதன் கொம்புகளில் விதவிதமான வர்ணங்களை அழகாக தீட்டுவார்கள்.
பின் கோ பூஜையை செய்வர். அதாவது ஆரத்தி கரைத்து மாடுகளுக்கு சுற்றுவர். தீப ஆரத்தி காட்டுவார்கள்.
பின் அதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப் பட்ட பொங்கலை கனிவுடன் ஊட்டுவார்கள்.
மாடு இல்லாத வீடுகளிலும்,பொங்கலிட்டு, மாடுகள் இருக்கும் வீடுகளுக்கு பொங்கலை எடுத்துச் சென்று மாடுகளுக்கு ஊட்டுவார்கள். வாழைப் பழத்தையும் ஊட்டுவார்கள் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர் வரை எல்லாரும் மிகவும் ஈடுபாட்டுடன் இந்த மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் நலிவு இழந்து,பொலிவு,இழந்து காணப்படுகிறது.நம் முன்னோர்கள் மாதிரி இல்லாவிட்டாலும், மாடுகளுக்கு நன்றி தெரிவிக்க நம் அருகில் வசிக்கும் மாடுகளிடமாவது கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நம் குழந்தைகளுக்கு இப் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தை தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் நம் பிள்ளைகளுக்கு இப்படித் தான் நாங்கள் மாட்டுப் பொங்கல் கொண்டாடினோம் என காட்ட வேண்டியது தான்.

No comments:

Post a Comment