Tuesday, January 17, 2012

privacy-pongal


மார்கழியில் ஏற்கனவே நம் உடல் குளிர்ந்திருக்க ,நம் மனதையும் குளிர்விக்க பிறக்கிறாள் தை மகள்.உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள்.பொங்கல் தமிழர்களின் திரு நாள், உழவர்களின் திரு நாள்,மட்டுமல்ல, உணவு நாகரிகத்திற்கே ஒரு தாயும் இந்த பொங்கல் தான். தாயும் அவள் தான், மகளும் அவள் தான்.

பொங்கலை நம் முன்னோர்கள் நான்கு நாட்களாக கொண்டாடினார்கள்.உழைத்த உடலுக்கு ஒரு ஆசுவாசம் இந்த பொங்கல் நம் முன்னோருக்கு..
பொங்கலுக்கு முந்தின தினம்—போகி
அடுத்த தினம்-பொங்கல்
மூன்றாம் நாள்—கரி நாள்,
நான்காம் நாள்—காணும் பொங்கல்
போகிப் பொங்கல்:
                  அந்த காலத்தில் பொருள்களை யெல்லாம் கிடைக்கும் சீசனில் சேமித்து வைத்திருந்தார்கள்..சேமித்த பொருள்களில் கெட்டுப்போனது, சேமிக்க பயன்படுத்திய பாத்திரங்களின் சீர்கேடு என அவர்களுக்கு நிறைய வேலை இருந்தது.எனவே, போகி அன்று வீட்டை சுத்தப்படுத்த வேண்டாத்தை அப்புறப் படுத்தினார்கள். அவற்றை எரிக்க டயர் போன்றவற்றையும் பயன்படுத்தினர்.
  இந்த காலத்தில் எல்லா  பொருள்களும் எல்லா சீசனிலும் கிடைக்கிறது.நாம் சேமிக்க வேண்டிய அவசியமுமில்லை.நிறைய முன்னேற்றங்களை பெற்றிருக்கிறோம்.(குப்பைகளை கூட வீட்டில் இருந்து அகற்ற குப்பைதொட்டி.காம் பெற்றிடுக்கிறோம்)எனவே  தேவையான பொருள்களை மட்டும் அவற்றின் பயனை ந்ன்கு அறிந்த பின் வாங்கி, முறையாக பயன்படுத்துவோமானால் வீட்டில் வேண்டாத பொருள்களே இருக்காது. போகி கொண்டாடுகிறோம் பேர்வழி என்று, டயர் போன்ற பொருள்களை எறித்து சுற்றுச் சூழலை மாசுபடுத்த வேண்டாமே...முன்னோர்களின் எண்ணங்களை ,செயல்களை சேதப்படுத்தாமல், புதிய முறையில் போகி கொண்டாடலாமே;;;
அதாவது நம் மனத்திலுள்ள கெட்ட எண்ணங்கள், வேண்டாத ஆசைகள்,சோம்பேறித்தனம், போன்ற செயல்களை எறிப்போமே, சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாமல்...

No comments:

Post a Comment