Monday, November 21, 2011

PRIVACY-“நானோ” --.தங்க ரதம்


நமது நாட்டின் ஆபரணங்கள் செய்யும் பாரம்பரியத்திற்கு வயது 5,000ஆண்டுகள்
என்கிறது வரலாற்றுக் குறிப்பு.
தங்க நகைகள் செய்வதில் புகழ் பெற்ற “டாடாவின் டைட்டன் நிறுவனம் 
டாடா மோட்டார்ஸின் தயாரிப்பான “நானோகாரையே தங்க காராக மாற்றி
பலரையும் அதிசயிக்க வைத்து விட்ட்து.
80 கிலோ தங்கம்,15கிலோ வெள்ளி வைத்து இழைத்த்தோடு, 
வைரம்,வைடுரீயம் கோமேதகம், பவழம்,முத்து, மாணிக்கம் ....என்ற 
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நவரத்தினங்களையும் பதித்து அந்த தங்க நானோ
காரை உருவாக்கியிருக்கிறார்கள்.இதை வடிவமைத்த தங்க நகை டிசைனர் 
தீக்‌ஷா.திக்‌ஷா மற்றும் அவர் குழுவினருக்கு பாராட்டுக்கள்.
 
இந்த தங்க நானோ வில் தமிழ் நாட்டின் “டெம்பிள் செட்டிங்குறிப்பாக
காரைக்குடியின் “க்ளோஸ்டு செட்டிங்ஆந்திராவின் 
“பிதிரிவேலைபாடு,ராஜஸ்தானின் “குந்தன் ஸ்டைல்மேற்கு வங்காளத்தின் 
“ஃபிலிகுரிநேர்த்தி...என்று நாட்டின் அத்தனை அடையாளங்களையும் இந்த 
டிசைனில் கொண்டு வந்தோம்.நமது தேசியபறவை மயில்,தேசிய மலர் தாமரை
ஆகியவற்றையும் இந்த காரில் பார்க்க முடியும்.

இதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து 30 பொற்கொல்லர்களை 
தேர்ந்தெடுத்தோம்.

இநத தங்க ரதம் உருவான இடம் ஓசூர். இந்த காரை நாடு முழுவதும் கொண்டு
சென்று பொதுமக்கள் இதில் அமர்ந்து போட்டோ எடுக்கவும்,சின்னதாக் ஜாலி 
ரைடு செல்லவும் அனுமதிக்கலாம் என்று கூட திட்டம் இருக்கிறது!  என்று
சொல்லி ஆர்வத்தை தூண்டினார் டைட்டன் டிசைன் துறைக்கு 
தலைமைப்பொறுப்பேற்றிருக்கும் ரேவதி .
டாடாவின் கோல்டு பிள்ஸ் நகைக்கூடங்கள் நம் மாநிலத்தில் அதிகம் 
என்பதால் நம்  ஊரில் தான் இந்த ரதம் அதிகமாக ரவுண்ட் அடிக்கும் என 
எதிபார்க்கலாம்.
என்ன...தங்க ரதத்தில் ஊர்கோலம் போக ரெடியா..?

No comments:

Post a Comment