Saturday, November 26, 2011

Privacy--நான் ரசித்த வைரமுத்துவின் வைரவரிகள்....


நோய்:

நோய் என்பதொரு கொடை. தறிகெட்டோடும்

வாழ்க்கையில் அது ஒரு மெல்லிய வேகத்தடை.

வாழ்வின் பெருமையை உயர்த்துவதும்

உறுப்புக்களின் அருமையை உணர்த்துவதும்

நேற்றையும் இன்றையும் நேசிக்க வைப்பதும்

தன்னை சார்ந்தவர் பற்றி யோசிக்க வைப்பதும்

ஒரு நிமிட சொட்டின் விலை என்ன

என்று நிறுத்துச் சொல்வதும்-செலுத்தப்படாத

அன்பை செலுத்தச் செய்வதும்

திமிர் கொண்டோடும் தேகத்தை ஞானப் பாதைக்கு

அழைத்து வருவதுவும்

கடந்த காலத் தவறுகளை எண்ணி கடைவிழியில்

நீரொழுக வைப்பதும் நோய் தான்

ஆகவே! உடம்பே! அவ்வப்போது கொஞ்சம் நோய் பெறுக..


நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம்.ஆனால்

நோயும் ஒரு செல்வமென்று பட்டுத் தெளி மனமே...
 

1 comment:

  1. இந்த கவிதையை முழுவதும் பதிவிடுங்கள்...எங்களுக்காக...

    ReplyDelete