Monday, November 21, 2011

PRIVACY-கவலையைப் போக்க சில வழிகள்;


நடப்பது நடக்கட்டும்
நடப்பது நடக்கட்டும் என்ற  மனோபாவம் பொறுப்பில்லாத்து போல் 
தோன்றினாலும், உண்மையில் கவலையை வெற்றி கொள்ள நினைப்பவர்கள் 
வளர்த்துக் கொள்ள வேண்டிய மனோபாவமது.
வாழ்க்கையில் துன்பங்களையும்,தோல்விகளையும் தவிர்க்க முடியாதுதான்.
துன்பங்களும், ,தோல்விகளும் எப்போது வரும் என காத்திருந்து, செய்ய 
வேண்டிய வேலைகளை செய்யாமல்  இருப்போம். செய்ய வேண்டிய
வேலைகளை செய்யாததால்  மனக்களைப்பும்,உடல் சோர்வும் ஏற்படும்.
நடப்பது நடக்கட்டும் எனதெளிந்து விட்டால் அதை அடுத்து உடனே மனநிம்மதி
கிடைப்பதுடன், நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம் என்ற குழப்பமில்லா 
சிந்தனையும் உருவாகி விடும்.

எனவே,
நல்லன நடக்கும் போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது, தீயன நடக்கும் போது 
மனத்திண்மை ஏற்படுகிற்து.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா தவர்.
துன்பத்தைக் கண்டு வருந்தாதவர் அந்த துன்பத்துக்கே துன்பத்தைச் செய்து வென்று விடுவர்.என்கிறார் வள்ளுவர்.
தெளிந்த சிந்தனையோடு செயல் பட்டு பிரச்சனைகளை தீர்க்க கவலையை 
நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
கடைசியாக ஒன்று
நடப்பது நடக்கட்டும் என்றமுடிவுக்கு வந்து விட்டால் நம்மை எதிர்நோக்கி
உள்ள பிரட்சனையின் சிக்கல் தானாகவே நீங்கி விடும்.
மேலும்,
மனநிலை ரீதியில் ஒரு கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு அதை
அமைதியான முறையில் சமாளிப்பது எளிது.

No comments:

Post a Comment