-->
-->
-->
-->
-->
-->
-->
-->
ஏப்ரல்--14
Life is a journey in the darkness of the night- Wake up to the inner light.
வாழ்க்கை என்பது இரவின் இருளில் செய்யும் பயணம் ஆகும்,உள் ஒளிக்கு விழித்தெழு.
ஏப்ரல்--15
Daily we must aspire to conquer all mistakes all obscurities, all ignorances.
எல்லாத் தவறுகளிலிருந்தும், எல்லாத் தெளிவற்ற நிலைகளிலிருந்தும், எல்லா அறியாமைகளிலிருந்தும் வெற்றிபெற்று எழ, நாம் தினமும் ஆர்வமுற வேண்டும்.
ஏப்ரல்—16
A great joy is always deep in our heart and always we can find it there.
பெரியதொரு மகிழ்ச்சி நமது இதயத்தின் ஆழத்தில் எக்காலமும் உள்ளது.இதை நாம் எப்போது வேண்டுமானாலும் உணர முடியும்.
ஏப்ரல்--17
It is in the Divine that we shall always find all what we need.
நமக்குத் தேவையான எல்லாமே எப்பொழுதும் இறைவனிடம் உள்ளன என்பதை நாம் காண்போம்.
ஏப்ரல்--18
Alone the Divine can give us a perfect safety.
இறைவன் மட்டுமே நமக்கு பூரணமான பாதுகாப்பை அளிக்க முடியும்.
ஏப்ரல்—19
Whenever there is sincerity and good will the Divine’s help also is there.
நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்ற போதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
ஏப்ரல்--20
With trust in the Divine’s grace all obstacles can be surmounted.
இறைவனின் அருளின் மேல் உள்ள நம்பிக்கையின் மூலம் எல்லா இடையூறுகளையும் எதிர்த்துச் சமாளிக்க முடியும்.
ஏப்ரல்--21
At the hour of danger a perfect quietness is required.
ஆபத்தான வேளையில் பூரண அமைதியே தேவை.
ஏப்ரல்--22
Let the Divine consciousness be the leading power in your life.
இறை உணர்வு உன்னுடைய வாழ்க்கையை நடத்திச் செல்லும் சக்தியாக அமையட்டும்.
ஏப்ரல்--23
The best way to express one’s gratitude to the Divine is to feel simply happy.
இறைவனுக்குத் தன்னுடைய நன்றியை வெளிப்படுத்துவதற்கு, மகிழ்ச்சியுடன் இருப்பதே சிறந்த வழி.
ஏப்ரல்—24
We celebrated on this date the 34th anniversary of my final arrival at Pondicherry—Since then I have not left this place.
பாண்டிச்சேரிக்கு நான் இறுதியாக வந்து முப்பத்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றதை இன்று கொண்டாடினோம்.அன்று முதல் இந்த இடத்தை விட்டு நான் அகலவே இல்லை.
ஏப்ரல்--25
Steady efforts always bring great results.
தளராத நிதானமான முயற்சி எப்பொதும் மிகப் பெரிய அளவில் பலனைக் கொண்டுவரும்.
ஏப்ரல்--26
There is no end to progress and every day one can learn to do better what one does.
முன்னேற்றத்திற்கு முடிவு என்பது கிடையாது.ஒவ்வொரு நாளும் ஒருவன் தான் செய்வதை மேலும் சிறப்பாகச் செய்யக் கற்றுக் கொள்ள முடியும்.
ஏப்ரல்--27
Let the Divine presence be always with you.
இறைவனுடைய சாந்நித்தியம் எப்பொதும் உன்னுடன் இருக்கட்டும்
ஏப்ரல்--28
Take truth for your force Take Truth for your refuge.
உண்மையே உனக்குச் சக்தியாக இருக்கட்டும். உண்மையே உன் புகலிடமாகட்டும்.
ஏப்ரல்--29
We must always aspire to be free from all ignorance and to have a true faith.
நாம் எல்லா அறியாமைகளிலிருந்து விடுபடவும்.உண்மையான நம்பிக்கையைப் பெறவும் எப்பொதும் ஆர்வமுற வேண்டும்.
ஏப்ரல்--30
An old wisdom says: “Just as unity is in each of the numbers so the Divine is one in all things.”
“ஒவ்வொரு எண்ணிலும் ஒருமை இருப்பதுபோல அனைத்திலும் இறைவன் ஒன்றாக இருக்கிறான்” என்பது ஒரு முதுமொழி.
மே--1
There is no greater courage than of recognizing one’s own mistakes.
தன்னுடைய தவறுகளைத் தானே உணர்வதைவிட மிகப் பெரிய வீரம் வேறு எதுவும் இல்லை.
மே--2
Always do what you know to be the best even if it is the most difficult thing to do.
மிக கடினமாக இருப்பினும் எது உனக்கு மிகச் சிறந்ததாகத் தெரிகிறதோ அதையே எப்போதும் செய்.
மே—3
There is no greater victory than that of controlling oneself.
தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதை விட மிகப் பெரிய வெற்றி வேறு எதுவும் இல்லை.
மே--4
The true strength is always peaceful.
உண்மையான வலிமை எப்பொதுமே அமைதியானது.
மே—5
Whatever you do always remember the Divine.
நீ எதைச் செய்தாலும் இறைவனை எப்பொதும் நினைவில் கொள்.
மே—6
Every thing must be transformed by the knowledge of the Truth.
யாவும் மெய்யறிவினால் திருவுருமாற்றம் செய்யப்பட வேண்டும்.
மே--7
In the Divine’s love we always find all support and all consolation.
இறைவனின் அன்பில் நாம் எப்போதும் ஆதரவையும் ஆறுதலையும் காணமுடியும்.
மே--8
Let the Divine’s peace always reign in your heart and mind.
உன்னுடைய இதயத்திலும் மனத்திலும் இறைவனுடைய அமைதி ஆட்சி செய்யட்டும்.
மே--9
The only important thing is to follow the Divine’s truth with love and joy.
இறைவனுடைய உண்மையை அன்புடனும், மகிழ்ச்சியுடனும் பின்பற்றுவது தான் முக்கியம்.
மே--10
The grace will never fail us- such is the faith we must keep constantly in our heart.
அருள் என்றுமே நம்மைக் கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையை நம் உள்ளத்தில் எப்பொதும் கொண்டிருக்க வேண்டும்.
மே--11
How beautiful grand simple and calm everything becomes when our thoughts turn to the Divine and we give ourselves to the Divine!
நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும் போதும் நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும் யாவும் எவ்வளவு அழகாகவும், மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும்,அமைதியாகவும் மாறிவிடுகிறது!
மே--12
In peace and silence the Eternal manifest .Let nothing trouble you and the Eternal will manifest.
சாந்தியிலும் மோனத்திலும் இறைவன் வெளிப்படுகிறான்.எதனாலும் பாதிக்கப்படாமல் இரு;இறைவன் வெளிப்படுவான்.
மே--13
If man surrenders totally to the Divine he identifies himself with the Divine.
மனிதன் கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்தால் தன்னில் கடவுளைக் காண்கிறான்.
மே--14
There is no greater joy than to serve the Divine.
இறைவனுக்கு சேவை செய்வதை விட மிகப் பெரிய மகிழ்ச்சி வேறில்லை.
மே--15
When we trust in the Divine’s Grace we get an unfailing courage.
நாம் இறைவனின் அருளின் மேல் நம்பிக்கை வைக்கும் போது திடமான உறுதியான ஒரு துணிவைப் பெறுகிறோம்.
மே--16
With a quite mind and a peaceful heart let us do the work happily.
சலனமற்ற மனத்துடனும், அமைதியான உள்ளத்துடனும் மகிழ்ச்சியாகச் செயல்புரிவோம்.
மே--17
The truth is in us we have only to become aware of it.
“உண்மை” நமக்குள்ளே இருக்கிறது.நாம் தான் அதை உய்த்துணர வேண்டும்.
மே--18
After all , it is very simple, we have only to become what we are in the depths of our being.
நம் ஜீவனின் ஆழ்நிலையில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நாம் ஆக வேண்டும்.இது மிகவும் எளிது.
மே--19
Let us have a sincere aspiration united to a constant good-will and the victory is certain.
நல்லெண்ணத்துடன் இணைந்த பரிபூரணமான முழுமையான ஆர்வத்தைக் கொண்டால் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.
மே--20
Let us do our best in all circumstances, leaving the result to the Divine’s decision
எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்களைச் செய்து, அதன் பலனை இறைவனுடைய முடிவுக்கே விட்டுவிடுவோம்.
மே--21
A constant aspiration conquers all defects.
இடையராத பேரார்வம் எல்லாக்குறைகளையும் போக்க வல்லது.
மே--22
The Divine is present in the very atoms of our body.
நம் உடலின் எல்லா நுண்ன்ணுக்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான்.
மே--23
Day after day our aspiration will grow and our faith will intensify.
நாளுக்கு நாள் நம்முடைய பேரார்வம் வளர்ந்து நம்முடைய நம்பிக்கை தீவிரமாகும்.
மே--24
Let us always do the right thing and we shall always be quiet and happy.
நாம் எப்பொதும் சரியானதையே செய்வோமாக. அப்போது நாம் அமைதியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.
மே—25
We must never forget that our goal is to manifest the supramental reality.
அதிமானுட ஸ்த்யத்தை வெளிப்பாடுறச் செய்வதுதான் நம் லட்சியம் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
மே--26
We must be free of all selfishness to serve properly the Divine’s cause.
இறைவனுக்கு உகந்த சேவை செய்வதற்கு நம்முடைய எல்லா சுயநலப்போக்குகளிலிருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும்.
மே--27
In the silence of our heart there is always peace and joy.
நம் இதயத்தின் மோனத்தில் எப்போதும் சாந்தியும், மகிழ்ச்சியும், நிலவுகின்றன.
மே--28
The storm is only at the surface of the sea; in the depths all is quiet.
கடலின் மேல் மட்டத்தில் தான் புயல் உள்ளது. ஆழ்மட்ட்த்தில் யாவும் அமைதியாகவே இருக்கிறது.
மே--29
The physical being itself can be the seat of perfect existence, knowledge and bliss.
நிறைவான வாழ்வுக்கும்,மெய் அறிவுக்கும்,பேரின்பத்துக்கும்,பூத உடல் ஆதாரமாக இருக்க முடியும்.
மே--30
In full appreciation of the way in which the work is proceeding.
சரியான வழியில் வேலை முன்னேறி வருவதற்கு என் முழு பாராட்டுதல்.
மே--31
My blessings at the beginning of the third month of your good work.
உன் நற்பணியின் மூன்றாவது மாதத் தொடக்கத்தில் எனது ஆசிகள்.
ஜூன்--1
Do not think of what you have been think only of what you want to be and you are sure to progress.
நீ எப்படி இருந்தாய் என்பதைப் பற்றி கவலைப் படாதே.எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயமாக முன்னேறுவாய்.
ஜூன்--2
Do not look behind look always in front at what you want to do-and you are sure of progressing.
பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கிப் பார்.நீ என்ன செய்ய வேண்டுனென்று விரும்புகிறாயோ அதைப் பார்---நிச்சயமாக முன்னேறுவாய்
ஜூன்--3
Every day at each moment my blessings are with you.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் என் ஆசிகள் உனக்கு உண்டு.
ஜூன்--4
Have full trust in the Divine’s Grace and the Divine’s Grace will help you in all ways.
இறையருளில் முழு நம்பிக்கை வை. இறையருள் உனக்கு எல்லா வகையிலும் உதவும்.
ஜூன்--5
Let us seek our happiness only in the Divine.
நம்முடைய சந்தோஷத்தை இறைவனிடம் மட்டுமே தேடுவோமாக.
ஜூன்--6
Keep yourself free from all human attachment and you will be happy.
மானிட ஆசாபாசங்களிலிருந்து நீ விலகி இரு. நீ மகிழ்ச்சியாய் இருப்பாய்
ஜூன்--7
With the Divine’s help nothing is impossible.
இறைவனின் உதவி இருக்கும்போது இயலாதது என்பது எதுவும் கிடையாது.
ஜூன்--8
If earnestly you say to the Divine.”I want only Thee,” the Divine will arrange the circumstances in such a way that you are compelled to be sincere.
மெய்யார்வத்துடன் நீ இறைவனிடம் “எனக்கு நீ மட்டுமே வேண்டும்” என்று சொல்வாயானால் நீ நேர்மையாக இருந்தே ஆக வேண்டிய சூழ்நிலைகளை இறைவன் உனக்கு ஏற்படுத்துவான்.
ஜூன்--9
Soar very high and you will discover the great depths.
மிக உயரத்திற்குப் போ. அப்போது மகத்தான ஆழங்களை அறிவாய்.
ஜூன்--10
The Divine manifests upon earth whenever and wherever it is possible.
எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் சாத்தியமோ (அப்போதெல்லாம்) இறைவன் புவியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.
ஜூன்--11
Open yourself more and more to the Divine’s force and your work will progress steadily towards perfection.
இறைவனுடைய சக்திக்கு நீ மேனும் உள்ளத்தைத் திற. உன்னுடைய செயல்கள் முழு நிறைவை நோக்கி உறுதியாக முன்னேறும்.
ஜூன்--12
The force is there waiting to be manifested we must discover the new forms through which it can manifest.
இறை சத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறது. அது எந்த புது வடிவங்களின் மூலமாக வெளிப்படமுடியும் என்று நாம் கண்டறிய வேண்டும்.
ஜூன்--13
It is in an unshakeable peace that can be found the true power.
அசைக்க முடியாத ஒரு அமைதியில் தான் உண்மையான சக்தியைக் காண முடியும்.
ஜூன்--14
A quiet endurance is the sure way to success.
அமைதியுடம் கூடிய பொறுமை வெற்றிக்கு நிச்சயமான வழி.
ஜூன்--15
A simple and faithful heart is a great boon.
எளிமையான விசுவாசமுள்ள இதயம் ஒரு மகத்தான வரப்பிரசாதம்.
ஜூன்--16
In each heart, the Divine’s presence is the promise of future and possible perfections.
ஒவ்வொரு இதயத்திலும் இறைவனின் சாந்நித்யம் வருங்காலத்தில் சாத்தியமாகும் நிறைவிற்கு உறுதியாம்
ஜூன்--17
Only those who are already very sincere know that they are not completely sincere.
ஏற்கனவே மிகவும் நேர்மையாக இருப்பவர்கள்தான் தாங்கள் முழுவதும் நேர்மையாக இல்லை என்பதை அறிவார்கள்.
ஜூன்--18
In a quiet silence strength is restored.
சாந்தமான அமைதியில் வலிமை புதுப்பிக்கப் படுகின்றது.
ஜூன்--19
When waking up every morning let us pray for a day of complete consecration.
ஒவ்வொரு நாளும் காலையில் துயிலெழும் போது அந்த நாள் ”பூரணமான சமர்ப்பணமாகுக”. என பிரார்த்திப்போமாக.
ஜூன்--20
Before going to sleep every night we must pray that the mistakes we may have committed during the day should not be repeated in future.
ஒவ்வொரு இரவிலும் உறங்கும் முன் அன்று முழுவதும் நாம் செய்திருக்க கூடிய தவறுகளை மீண்டும் செய்யாமலிருக்க பிரார்த்தனை செய்வோமாக.
ஜூன்--21
Let us keep flaming in our heart the fire of progress.
முன்னேற்றம் என்னும் ஒளிப்பிழம்பை நம் இதயத்தில் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கச் செய்வோமாக.
ஜூன்--22
Every day, at each moment we shall aspire to do the right thing in the right way always.
எப்போதும் சரியான செயலை முறையாகச் செய்திட, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் நாம் ஆர்வமுற வேண்டும்.
ஜூன்--23
For the body, to know means to be able to do. In fact the body knows only what it can do.
உடம்பை பொறுத்தவரை செயலாற்றுந் திறனே அறிவாகும்.பார்க்கப் போனால் தன்னால் செய்ய முடிவதை மட்டுமே உடல் அறிகிறது.
ஜூன்--24
All veils must be dissolved and the light must shine fully in the hearts of all.
எல்லாத் திரைகளும் விலகி எல்லோர் இதயங்களிலும் ஒளி முழுமையாகப் பிரகாசிக்கட்டும்.
ஜூன்--25
What cannot be done to-day will surely be done later on. No effort for progress has ever been made in vain.
இன்று செய்ய முடியாத்தை பின்னொரு நாள் நிச்சயமாக செய்யாமுடியும். முன்னேற்றத்துக்காக செய்யப்படும் எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாவதில்லை.
ஜூன்--26
New forms are needed for the manifestation of a new Force.
புதிய சக்தியின் வெளிப்பாட்டிற்குப் புதிய வடிவங்கள் தேவை.
ஜூன்--27
We must be satisfied with what the Divine gives us. And do what He wants us to do with out weakness free from useless ambition.
இறைவன் நமக்கு எதை அளித்துள்ளானோ அதில் நாம் மன நிறைவு காண வேண்டும். இறைவன் நாம் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறானோ அதை பலவீனமும் பயனற்ற பேராசையும் இன்றி செய்ய வேண்டும்.
ஜூன்--28
All sincere prayers are granted but it may take some time to realize materially.
நேர்மையான பிரார்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன.ஆனால் நடைமுறையில் உருப்பெற சிறிது காலம் ஆகலாம்.
ஜூன்--29
The more we know the more we can see that we do not know.
நம் அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை நாம் உணர முடிகிறது.
ஜூன்--30
It is easier to suppress than to organize but the true order is far superior to suppression.
உணர்ச்சிகளையோ எண்ணங்களையோ ஒழுங்கு படுத்துவதைவிட பலவந்தமாக அடக்குவது சுலபமே. ஆனால் உண்மையான ஒழுங்கு நிலையில் வைப்பதென்பது அடக்கு முறையை விட பன்மடங்கு சிறந்தது.
ஜூலை--1
Our mind must be silent and quiet but our heart must be full of an ardent aspiration.
நமது மனம் மெளனமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். ஆனால் நம் இதயம் தீவிரமானதொரு பேரார்வத்தால் நிறைந்திருக்க வேண்டும்.
ஜூலை—-2
We must replace competition and strife by collaboration and fraternity.
நாம் போட்டிகளையிம் சச்சரவுகளைவும் அகற்றி ஒத்துழைப்பையும் தோழமையையும் நிலவ செய்ய வேண்டும்.
ஜூலை--3
Let each suffering pave the way to transformation.
ஒவ்வொரு வேதனையும் திருவுருமாற்றத்திற்கு வழி வகுக்கட்டும்.
ஜூலை--4
No joy is comparable to the feeling of the eternal presence in one’s heart.
ஒருவரது இதயத்தில் குடி கொண்டிருக்கும் ஆதியந்தமில்லாத இறைவாஸ உணர்வுக்கு ஈடான மகிழ்ச்சி வேறெதுவுமில்லை.
ஜூலை--5
It is only in the Divine that we can find perfect peace and total satisfaction.
இறைவனிடம் மட்டுமே நாம் முழுமையான சாந்தியையும் பூரண நிறைவையும் பெறமுடியும்.
ஜூலை--6
We must march on with the quiet certitude that what has to be done will be done.
“நடக்க வேண்டியவை நடக்கும்” என்ற திட உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும்.
ஜூலை—7
The supramental force is ready for manifestation let us get ready also and it will manifest.
அதிமானுட சக்தி வெளிப்படத் தயாராக உள்ளது.நாமும் தயாரானவுடன் அது வெளிப்படும்.
ஜூலை—8
When the supramental manifests an unequalled joy spreads over the earth.
அதிமானுட சக்தி வெளிப்படுங்கால் நிகரற்ற ஒரு மகிழ்ச்சி புவி முழுவதும் பரவிடும்.
ஜூலை—9
Drop all fear all stife, all quarrels, open your hearts- the supramental force is there.
அச்சங்கள் யாவற்றையும் விரோத மனபாங்குகள் யாவற்றையும் சச்சரவுகள் யாவற்றையும் அகற்றி விட்டு உன்னுடைய கண்களையும் இதயத்தையும் திறந்து பார் அதிமானுட சக்தி அங்கே உள்ளது.
ஜூலை—10
With patience strength courage and a calm and undomitable energy we shall prepare ourselves to receive the supramental force.
அதிமானுட சக்தியை ஏற்க பொறுமை, வலிமை, தைரியம், சாந்தம், அசைக்கமுடியாத ஆற்றல் இவற்றுடன் நம்மை நாம் தயார் செய்துகொள்வோம்.
ஜூலை—11
The mind must remain quiet to let the force flow through it for an integral manifestation.
பூரணமான வெளிப்பாட்டின் பொருட்டு தெய்வீக சக்தி தன்னுள் பாய மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
ஜூலை—12
The chief purpose of the avatar is to give to man a concrete proof that the Divine can manifest upon earth.
“இறைவன் பூமியில் வெளிப்பட முடியும்” என்பதை மனிதனுக்கு உறுதியாக நிரூபிப்பதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்
ஜூலை—13
Contemplate the mirror of your heart and you shall taste little by little a pure joy and an unmixed peace/
உன் உள்ளமென்னும் கண்ணாடியைக் கூர்ந்து கவனி, கொஞ்சம் கொஞ்சமாக தூய மகிழ்ச்சியையும் கலப்படமில்லாத அமைதியையும் நீ சுவைக்க ஆரம்பிப்பாய்.
ஜூலை—14
Look into the depth of your heart and you will see there the Divine presence
உன் இதயத்தின் ஆழங்களுள் பார். அங்கே இறைவனின் சாந்நித்யத்தைக் காண்பாய்.
ஜூலை—15
When the aspiration is awake each day brings us nearer to the goal.
பேரார்வம் விழித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு தினமும் நம்மை இலட்சியத்திற்கு அருகே கொண்டு செல்கிறது.
ஜூலை—16
Not only the mind and the vital but the body also in all its cells must aspire for the Divine transformation.
நமது மனமும் பிராணனும் மட்டும் இன்றி உடலும் அதன் எல்லா அணுக்களும் திருவுருமாற்றத்திற்கு ஆர்வமுற வேண்டும்.
ஜூலை—17
Each one is responsible only of the sincerity of his aspiration.
ஒவ்வொருவரும் அவரவருடைய நேர்மையான ஆர்வத்திற்கு மட்டுமே பொறுப்பாவர்.
ஜூலை—18
With our own perfection grows in us a generous understanding of the others.
நமது முழுமை வளர வளர நாம் பிறரை பெருநோக்குடன் அறிகிறோம்.
ஜூலை—19
It is difficult to get rid of all habits. They must be faced with a steady determination.
பழக்கங்களை விடுவதென்பது கடினம்தான். அவற்றை தளராத உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஜூலை—20
When you reach the contact with the Divine’s love in everything and all circumstances.
நீ இறையன்புடன் தொடர்பு கொண்ட நிலையில் அந்த அன்பை யாவற்றிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் காண்பாய்.
ஜூலை—21
All sincere prayers are granted every call is answered.
நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன்.ஒவ்வொரு அழைப்புக்கும் பதில் உண்டு.
ஜூலை—22
Before getting angry for the mistakes of others one should always remember one’s own mistakes.
பிறருடைய தவறுகளுக்காக அவர்களிடம் சீற்றமுறுவதற்க்கு முன் எப்பொதுமே தன்னுடைய சொந்த தவறுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஜூலை—23
Let us progress ourselves it is the best way of making the others progress.
நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே பிறரை முன்னேறச் செய்ய சிறந்த வழி.
ஜூலை—24
The Divine’s love and knowledge must always govern our thought and actions.
மெய்யன்பும், மெய்யறிவும், எப்பொதும் நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆட்சி செய்ய வேண்டும்.
ஜூலை—25
We ought to be in a constant state of aspiration but when we cannot aspire let us pray with the simplicity of a child.
நாம் எப்பொதும் இடைவிடாத ஆர்வமுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும். அவ்வாறு இயலாவிடில் ஒரு குழந்தையின் எளிமையுடன் பிரார்த்தனை செய்வோமாக.
ஜூலை—26
Satisfaction does not depend on outer circumstances but on an inner condition.
மன நிறைவு என்பது வெளிப்புறச் சூழ்நிலைகளைச் சார்ந்த்து அல்ல, அது உள்நிலையைப் பொறுத்தது.
ஜூலை—27
We are upon earth to manifest the Divine’s will
இறைவனுடைய சங்கல்பத்தை வெளிப்படுத்தவே நாம் இப்புவியில் உள்ளோம்.
ஜூலை--—28
It is always a mistake to complain about the circumstances of our life for they are the outward expression of what we are ourselves.
நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளைப் பற்றி குறைகூறுவது எப்போதும் தவறாகும்.அவை நம் அகநிலையின் புற வெளிப்பாடே யாகும்.
ஜூலை—29
We must decide to get rid of all doubts they are among the worst enemies of our progress.
எல்லா சந்தேகங்களிலிருந்தும் விடுபட நாம் தீர்மானம் செய்ய வேண்டும், அவை நம் முன்னேற்றத்தின் பெரும் எதிரிகள் ஆகும்.
ஜூலை—30
It is our lack of faith that creates our limitations.
நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாய்.
ஜூலை—31
There is no greater courage than to be always truthful.
எக்காலும் உண்மையே பேசுவதை விட பெரிய வீரம் வேறெதுவும் இல்லை.
ஆகஸ்டு—1
New words are needed to express new ideas new forms are necessary to manifest new forces.
புதிய கருத்துக்களை வெளிப்படுத்த புதிய சொற்கள் தேவையாவது போல் புதிய சக்திகளை வெளிப்படுத்த புதிய வடிவங்கள் தேவை.
ஆகஸ்டு—2
Our courage and endurance must be as great as our hope and our hope had no limits.
நம் தைரியமும், தாங்கிக்கொள்ளும் திறனும் நம் நம்பிக்கையின் அளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும். நமது நம்பிக்கையின் எல்லைக்கோ அளவேயில்லை
ஆகஸ்டு—3
In the Divine consciousness the smallest things from below unite with the highest the most sublime from above.
இறை உணர்வில் கீழே உள்ள மிகச் சிறியவையும் மாண்புமிகுந்த மேலே உள்ள மிக உயர்ந்தவையுடன் ஒன்று சேர்கின்றன.
ஆகஸ்டு—4
It is ages of ardent aspiration that have brought us here to do the Divine’s work.
பல யுகங்களின் தீவிர ஆர்வம்தான் நம்மை இங்கு இறைவனது வேலைக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஆகஸ்டு—5
Whenever there is any difficulty we must always remember that we are here exclusively to accomplish the Divine’s will.
கஷ்டம் நேரும்போதெல்லாம் “தெய்வ சங்கற்பத்தை நிறைவேற்றும் பொருட்டே நாம் இங்கு இருக்கிறோம்” என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆகஸ்டு—6
And when our adherence to the Divine’s will is total then also our peace and joy become total
கஷ்டம் எதுவாயினும் நாம் அமைதியாக இருந்தால் தீர்வு வரும்.
ஆகஸ்டு—7
Behind the surface of things there is a sea of perfect consciousness in which we can always dip.
இவ்வுலகம் இன்னும் அறியாமையினாகும் பொய்மையினாலும் ஆளப்பட்டு வருகிறது. எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
ஆகஸ்டு -8
Whatever is the difficult if we keep truly quiet the solution will come,
கஷ்டம் எதுவாயினும் நாம் உண்மையாகவே அமைதியாக இருந்தால் தீர்வு வரும்.
ஆகஸ்டு -9
This earth is still governed by ignorance and falsehood but the time has come for the manifestation of Truth.
இவ்வுலகம் இன்னும் அறியாமையினானும் பொய்மையினாலும் ஆளப்பட்டு வருகிறது.எனினும் உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
ஆகஸ்டு -10
All mischief comes from a lack of balance .So, let us keep our balance carefully, always in all circumstances.
எல்லாத் தொல்லைகளும் நிதானக் குறைவினாலேயே வருகின்றன. எனவே, எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கவனமாக நிதானம் தவறாமல் இருப்போம்.
ஆகஸ்டு -11
The Divine consciousness must be our only guide.
இறையுணர்வு நம்முடைய ஒரே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
ஆகஸ்டு -12
The Divine consciousness is the only true help the only true happiness.
இறை உணர்வே உண்மையான துணை. அதுவே உண்மையான ம்கிழ்ச்சியுமாம்.
ஆகஸ்டு -13
We must never forget that we are here to serve the supramental Truth and to prepare its manifestation in ourselves and upon the earth.
அதிமானிட உண்மைக்கும் ஒளிக்கும் சேவை செய்யவும் அவை நம்முள்ளும் இப்புவியிலும் வெளிப்பட முன்னேற்பாடுகள் செய்யவும் தான் நாம் இங்கே இருக்கிறோம் என்பதை எக்காலமும் மறக்கலாகாது.
ஆகஸ்டு -14
Sri Aurobindo is always with us. Enlightening guiding protecting . We must answer to his grace by a perfect faithfulness.
ஸ்ரீ அரவிந்தர் எப்போதும் நமக்கு ஒளியூட்டிக் கொண்டும் வழிகாட்டியவாறும் நம்மைப் பாதுகாத்தபடியும் நம்முடனே இருக்கிறார். அவரது பெருங் கருணைக்கு முழு நம்பிக்கையின் மூலமாக நாம் பிரதி செய்வோமாக.
ஆகஸ்டு -15
A steady hope helps much on the way.
தளராத நம்பிக்கை நமக்கு உள்ள வழித் துணை.
ஆகஸ்டு -16
Faith is the surest guide in the darkest days.
இருள் செறிந்த நாட்களில் ந்ம்பிக்கையே நிச்சயமான வழிகாட்டியாம்,
ஆகஸ்டு -17
The Divine Grace is with us and never leaves us even when the appearances are dark.
இறைவனின் அருள் நம்முடனே இருக்கிறது.புறத்தோற்றங்கள் இருண்ட போதிலும் அது நம்மை விட்டு அகலுவதில்லை,
ஆகஸ்டு -18
In each human being there is a beast crouching ready to manifest at the slightest unwatchfulness.The only remedy is a constant vigilance.
ஒவ்வொரு மனிதனிடமும் விலங்கினத்தின் குணம் பதுங்கி இருக்கிறது. அது தன்னை வெளிப் படுத்த கவனக்குறைவான தருணத்தை எதிர்பார்க்கிறது. இடையறா விழிப்பு நிலையே இதற்கு மருந்தாகும்.
ஆகஸ்டு -19
When the path is known it is easy to tread upon it.
பாதையை அறியும்போது அதில் நடந்து செல்வது எளிது.
ஆகஸ்டு -20
The thing we cannot realize to-day we shall be able to realize to-morrow.The only necessity is to endure,
இன்று நாம் அனுபவ பூர்வமாக உண்ர இயலாதவையை நாளை உணர முடியும். பொறுமையுடன் இருப்பதொன்றே தேவை.
ஆகஸ்டு -21
Each new progress in the universal expression means the possibility of a new manifestation.
பிரபஞ்ச வெளிப்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு புதிய முன்னேற்றமும் ஒரு புதிய சிருஷ்டிக்கான சாத்தியக் கூறு ஆகும்.
ஆகஸ்டு -22
Our hopes are never too great for manifestation we cannot conceive of anything that cannot be.
நம்முடைய எதிர்பார்ப்புக்கள் வெளிப்பட இயலாத அளவிற்கு பெரியவை அல்ல.இருக்க முடியாத எதையும் நாம் சிந்திக்க முடியாது.
ஆகஸ்டு -23
The supreme’s power is infinite it is our faith that is small.
இறைவனின் சக்தி அளவற்றது. நம் நம்பிக்கைதான் சிறியது.
ஆகஸ்டு -24
The offering of our being we make to the Divine must be integral and effective.
நம்மையே இறைவனுக்கு காணிக்கையாக்கும் போது அது நன்கு இணைந்ததாயும் திறன் கூடியதாயும் இருக்கவேண்டும்.
ஆகஸ்டு -25
Our thoughts are still ignorant they must be enlightened our aspiration is still imperfect it must be purified our action is still powerless it must become effective.
நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன.அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும். நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப் படுத்தப்பட வேண்டும்.
ஆகஸ்டு 26
So much obscurity has fallen upon earth that only the supramental manifestation can dissolve it.
இவ்வுலகைப் பெரும் இருள் கவிந்து உள்ளது. அதிமானுட வெளிப்பாடு ஒன்று தான் அதை அறவே நீக்க முடியும்.
ஆகஸ்டு -27
Let us constantly aspire to be a perfect instrument for the Divine’s work.
இறைவனின் பணிக்கு ஒரு பூரணமான கருவியாக இருந்திட நாம் தொடர்ந்து ஆர்வமுறுவோமாக.
ஆகஸ்டு -28
Blessed will be the day when the earth awaken to the Truth lives only for the Divine.
என்று பூமி உண்மைக்கு விழிப்புற்று இறைவனுக்காகவே வாழ்கிறதோ அந் நாளே தெய்வீக ஆசியுடன் கூடிய நன்னாளாகும்.
ஆகஸ்டு -29
The Truth is in you- but you must want it in order to realize it.
உண்மை உனக்குள்ளேயே இருக்கிறது.நீ அதை உணர அதனை விரும்ப வேண்டும்.
ஆகஸ்டு -30
Man is the intermediary being between what is and what is to be realized.
இப்போதுள்ள நிலைக்கும் இனி அடைய வேண்டிய நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவன் மனிதன்.
ஆகஸ்டு -31
Let us advance always without stopping towards an always more complete manifestation an always more complete and higher consciousness.
எப்போதும் அதிக நிறைவான வெளிப்பாட்டையும் எப்போதும் அதிக நிறைவான உயர்வான உணர்வு நிலையையும் நோக்கி நாம் எப்போதும் சலிப்பின்றி முன்னேறுவோமாக.
செப்டம்பர்--1
My blessings are always with you.
என்னுடைய ஆசீர்வாதம் உன்னிடம் எப்போதும் இருக்கிறது.
செப்டம்பர் --2
My blessings are always with you.
என்னுடைய ஆசீர்வாதம் உன்னிடம் எப்போதும் இருக்கிறது.
செப்டம்பர் --3
In an unshakeable faith lies all our hope.
அசைக்க முடியாத நம்பிக்கையே நமக்கு உறுதுணை.
செப்டம்பர் --4
To follow the path to the end one must be armed with a very patient endurance.
இறுதிவரை பாதையைப் பின்பற்றுவதற்கு நீடித்த பொறுமையே தேவை.
செப்டம்பர் --5
On the spiritual path each step forward is a conquest and the result of a fight.
ஆன்மீகப் பாதையில் முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடியும் போராடிப் பெற்ற வெற்றியாகும்.
செப்டம்பர் --6
The victory is to the most enduring
தளராத பொறுமை உள்ளவருக்கே வெற்றி கிடைக்கும்.
செப்டம்பர் --7
The victory of yesterday must be only one step towards to-morrow’s victory.
நேற்றைய வெற்றி என்பது நாளைய வெற்றியை நோக்கி ஒர் அடி முன் செல்வதேயாகும்.
செப்டம்பர் --8
Out side the Divine all is falsehood and illusion all is mournful obscurity.
இறைவனுக்கு புறம்பான அனைத்தும் பொய்மையும் பிரமையும் துயர் மிகுந்த அறியாமையும் ஆகும்.
செப்டம்பர் --9
The Lord has said,”The time is come” and all the obstacle will be overcome.
“வேளை வந்து விட்டது” என்று இறைவன் கூறிவிட்டான்.எனவே, எல்லாத் தடைகளையும் தாண்டி விடலாம்.
செப்டம்பர் --10
The Divine is the favour of all life and the reason of all activity, the goal of our thoughts.
எல்லா வாழ்வின் ரசமாகவும் எல்லாச் செயல்களின் காரண கர்த்தாவாகவும் நம் எண்ணங்களின் இலக்காகவும் இருப்பவன் இறைவன்.
செப்டம்பர் --11
The Divine’s peace must dwell constantly in our hearts.
இறைவனின் அமைதி நம் இதயங்களில் இடையறாது உறைதல் வேண்டும்.
செப்டம்பர் --12
The Divine’s presence is for us an absolute immutable invariable fact.
இறைவனின் சாந்நித்தியம் நமக்கு முடிவான நிலையான மாறாத உண்மையாகும்.
செப்டம்பர் --13
In peace and silence the Eternal manifests; allow nothing to disturb you and the Eternal will manifest.
அமைதியிலும் மோனத்திலும் நித்தியன் வெளிப்படுகிறான். எதனாலும் பாதிக்கப் படாமலிரு; நித்தியன் வெளிப் படுவான்.
செப்டம்பர் --14
In the Divine by the Divine all is transfigured and glorified; in the Divine is found the key of all mysteries and all powers.
இறைவனில் இறைவனால் யாயும் உருமாற்றமும் மேன்மையும் அடைகின்றன.புலப்படாத விஷயங்கள் யாவற்றிலும் எல்லா சக்திகளுக்கும் திறவுகோல் இறைவனிடம் உள்ளது.
செப்டம்பர் --15
The power of the human intelligence is without bounds it increases by concentration that is the secret.
மனித அறிவின் ஆற்றல் அளவற்றது. ஒருமுனைப்படுவதின் மூலம் அது அதிகடக்கிறது. அதுவே இரகசியம்.
செப்டம்பர் --16
How many efforts and struggles again to give ourselves, to surrender once the individuality is constituted.
(நமது)தனித் தன்மை உருவாகிய பின்னர் நம்மை இறைவனுக்கு அர்ப்பந்த்துக் கொள்வதற்கும் சரணடைவதற்கும் மீண்டும் எவ்வளவு முயற்சிகள் போராட்டங்கள் மேன்மேலும் தேவையாகின்றன.
செப்டம்பர் --17
We must watch over our thoughts - a bad thought is the most dangerous of thieves.
நாம் நமது எண்ணங்களின் மேல் கவனம் வைக்கவேண்டும். தீய எண்ணம் மிகவும் ஆபத்தான கள்வன்,
செப்டம்பர் --18
It is the Lord who lets all in motion from the depths of the being; it is His will that directs, His force that acts,
இறைவனே ஜீவனின் ஆழங்களிலிருந்து யாவற்றையும் இயக்குகின்றான். அவனுடைய சித்தமே நடக்கிறது. அவனுடைய சக்தி தான் செயலாற்றுகிறது.
செப்டம்பர் --19
Often man is pre occupied with human rules and forgets the inner law.
மனிதன் பெரும்பாலும் சமுதாயத்தின் சட்ட்திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறான். தன் ஜீவ தர்மத்தை மறந்து விடுகிறான்.
செப்டம்பர் --20
Let not the talk of the vulgar make any impression on you.
கயவர்களின் பேச்சுக்கள் உனக்குள் பதியாமல் இருக்கட்டும்.
செப்டம்பர் --21
The sage is never alone… he bears in himself the law of all things.
ஞானி ஒருபோதும் தனிமையில் இல்லை. அவன் தனக்குள்ளே அனைத்திக்கும் அதிபதியான இறைவனுடனேயே இருக்கிறான்.
செப்டம்பர் --22
In all there lacks the unchanging peace of the Divine’s sovereign contemplation and the calm vision of the Divine’s immutable eternity.
இறைவனின் மேலான தியான நிலையின் மாறா சாந்தியிம் இறைவனின் நிலைபேறுடைய நித்தியத்வத்தின் அமைதியான நோக்கும் எல்லோரிடமும் குறைவாகவே உள்ளது.
செப்டம்பர் --23
The mind is a clear and polished mirror and our continual duty is to keep it pure and never allow dust to accumulate upon it.
மனம் என்பது ஒரு தெளிவான துலக்கிய நிலைக்கண்ணாடி அதை மாசின்றி வைத்துக் கொள்வதும் அதன் மேல் தூசுபடியாமல் வைத்துக் கொள்வதும் நம் தொடர்ந்த கடமை.
செப்டம்பர் --24
A new light shall break upon the earth anew world shall be born and the things that were announced shall be fulfilled.
இப்புவியின் மீது ஒரு புத்தொளி பாயும். புதியதோர் உலகம் பிறந்திடும் வாக்களிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேறும்.
செப்டம்பர் --25
Do not believe all that men say but blush not to submit to a sage who knows more than thyself.
மனிதர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்பிவிடாதே. ஆனால் உன்னை விட அதிகம் அறிந்த ஞானிகளிடம் கீழ்ப்படிய வெட்கப் படாதே.
செப்டம்பர் --26
It is in the most complete peace serenity and equality that all is the Divine even as the Divine is all.
மிகப் பரிபூரணமான சாந்தியிலும் தெளிவிலும் சமநிலையிலும் யாவும் இறைவனேயாகவும் இறைவனேயாவுமாகவும் உணரப் படுகிறது.
செப்டம்பர் --27
Like the child who does not reason and has no care trust thyself to the Divine that His will may be done.
தர்க்கம் செய்யாத கவலையில்லாத குழந்தையைப் போல அவன் சித்தமே நிறைவேறட்டும். என்று இரு. இறைவனிடம் உன்னை ஒப்படைத்து விடு.
செப்டம்பர் --28
The joy of perfect union can come only when what has to be done is done.
எது ஈடேற வேண்டுமோ அது ஈடேறிய பின்னரே பூரண ஐக்கியத்தின் மகிழ்ச்சி கிட்டும்.
செப்டம்பர் --29
O, to see no longer the appearances which change incessantly;to contemplate only The Divine’s immutable oneness in everything and everywhere.
இடையறாது மாறிக் கொண்டே இருக்கிற தோற்றங்களைப் பாராமல் எங்கும் எதிலும் உள்ள இறைவனின் நிலையான ஒருமையையே தியானம் செய்.
செப்டம்பர் --30
We aspire to be the valiant warriors of the Lord so that His glory may manifest upon the earth.
இறைவனின் மகிமை இந்த பூமியில் வெளிப்பட அவனுடைய தீரமிக்க மாவீர்ர்களாய் இருக்க நாம் ஆர்வமுறுகிறோம்.
அக்டோபர்--1
In the Divine’s light we shall be in the Divine’s knowledge we shall know in the Divine’s will we shall realize.
இறைவனின் ஒளியில் நாம் பார்ப்போம். இறைவனின் ஞானத்தில் அறிவோம். இறைவனின் இச்சையில் சித்தி பெறுவோம்.
அக்டோபர்--2
Out side the Divine all is falsehood and illusion all is mournful obscurity .In the Divine is life light and joy In the Divine is the sovereign peace.
இறைவனுக்கு புறம்பாகவுள்ள எல்லாமே பொய்மையும், போலித்தனமும், துயர்தரும் இருளும், ஆக உள்ளன, இறைவனிடமே வாழ்வும் ஒளியும்,மகிழ்ச்சியும், மாட்சிமிக்க அமைதியும் உள்ளன.
அக்டோபர்--3
In the sincerity of our trust lies the certitude of our victory.
நேர்மையான நம்பிக்கையில் தான் நம் வெற்றியின் நிச்சயம் உள்ளது.
அக்டோபர்--4
All our strength is with the Divine, with Him we can surmount all the obstacles,
நமது பலமெல்லாம் இறைவனிலேயே உள்ளது. அவன் துணையுடன் நாம் எல்லாத் தடைகளையும் வெல்ல முடியும்.
அக்டோபர்--5
When the Divine grants the true inner happiness nothing in the world has the power to snatch it away.
இறைவனே உண்மையான உள்ளார்ந்த மகிழ்ச்சியை வழங்கும் போது அதைப் பறித்துச் செல்லும் சக்தி உலகில் எதற்கும் கிடையாது.
அக்டோபர்--6
It is victory day; let it be a true victory of the spirit over ignorance and falsehood.
இது வெற்றித் திருநாள், அறியாமையின் மீதும் பொய்மையின் மீதும் ஆத்மா பெறும் வெற்றியாக இது விளங்கட்டும்.
அக்டோபர்--7
The Divine’s voice is heard as a melodious chant in the stillness of the heart.
இதயத்தின் அமைதியில் இறைவனின் குரல் இனிய இசையாய்க் கேட்கின்றது.
அக்டோபர்--8
At each moment of our life in all circumstances the grace is there helping us to surmount all difficulties.
நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் எல்லா சூழ்நிலைகளிலும் இறையருள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீண்டு வர நமக்கு உதவி கொண்டிருக்கிறது.
அக்டோபர்--9
The Divine’s triumph is so perfect that every obstacle every ill-will every hatred rising against Him is a promise of a vaster and still complete victory.
இறைவனுடைய வெற்றி பூரணமானது. அவனுக்கு எதிராக எழும் ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு தீய எண்ணமும் ஒவ்வொரு வெறுப்பும் அவனுடைய வெற்றியை மேலும் மிகப் பரந்த்தும் பூரணமானதும் ஆக ஆவதையே உறுதி செய்கிறது.
அக்டோபர்--10
The resistance with which we meet in the accomplishment of our work is proportionate to its importance.
நமது பணியை நிறைவேறச் செய்வதில் நாம் சந்திக்கும் எதிர்ப்பு இந்த பணியின் முக்கியத்துவத்தின் அளவே ஆகும்.
அக்டோபர்--11
The supramental force has the power to transform even the darkest hate in luminous peace.
அதிமன சக்திக்கு மிக இருண்ட துவேஷத்தைக் கூட ஒளி வீசுகின்ற அமைதியாக மாற்றும் வல்லமை உள்ளது.
அக்டோபர்--12
Every obstacle must disappear in every part of the being the darkness of the ignorance must be replaced by the Divine’s knowledge.
ஒவ்வொரு தடங்கலும் மறைய வேண்டும். இயல்பின் ஒவ்வொரு பாகத்திலும் உள்ள அறியாமை என்னும் இருள் நீக்கப்பட்டு அதனிடத்தில் இறைவனின் அறிவொளி வரவேண்டும்.
அக்டோபர்--13
Often we cling to that which was afraid of losing the results of a precious experience of giving up a vast and high consciousness and falling again into an inferior state.But we must always look forward and advance.
அரிதாக கிடைத்த அனுபவத்தின் பலனை இழந்து விடுவோமோ என்றும் மிகப் பரந்து உயர்ந்த உணர்வை விட்டு மீண்டும் கீழ்நிலைக்கு தள்ள பட்டு விடுவோமோ என்றும் அஞ்சுவதின் காரணமாக கழிந்ததையே கெட்டியாக பற்றிக் கொள்கிறோம்.ஆனால் நாம் எப்போதும் முன் நோக்கிசெல்ல வேண்டும்.
அக்டோபர்--14
What can he fear he who belongs to the Divine?can he not walk his soul expanding and his brow illumined upon the path the Divine traces for him whatever it may be even of it is altogether incomprehensible to his limited reason?
இறைவனுக்கு சொந்தமாய் இருப்பவன் எதற்குத் தான் அஞ்ச வேண்டும். ஆன்மா விரிந்து கொண்டும்,முகம் ஒளிவீசிக் கொண்டும், அவனுக்கென இறைவன் வகுத்த பாதையில் அது எதாயிருப்பினும் அவனுடையகுறுகிய பகுத்தறிவிற்கு சிறிதும் புரியாத்தாயிருப்பினும் நடக்க முடியாதா என்ன?
அக்டோபர்--15
Let us adore in silence and listen to the Divine in a deep concentration.
மோனத்தில் இறைவனைப் போற்றி வழிபட்டு ஆழ்ந்த ஒருமுகப்பட்ட நிலையில் அவனுக்கு செவிசாய்ப்போம்.
அக்டோபர்--16.
The Divine’s will is that we should be like channels always open always more wide so that His forces may pour their abundance into the world.
இறைவனின் விருப்பம் அவன் சக்திகளை உலகினுள் பெருமளவில் பொழிவதற்கு நாம் எப்பொழுதும் திறந்த அகன்ற வாய்க்கால்களாக இருக்க வேண்டும் என்பதேயாம்.
அக்டோபர்--17
Our will must always be a perfect expression of the Divine’s will.
நம் விருப்பம் எப்போதும் இறைவனுடைய விருப்பத்தைப் பூரணமாக வெளிப்படுத்துவதாகவே இருக்க வேண்டும்.
அக்டோபர்--18
The night also is full of promises and we must face it with full faith and confidence.
இருளிலும் முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. எனவே, இருளை நாம் முழு நம்பிக்கையுடனும்,விசுவாசத்துடனும் எதிர் கொள்ள வேண்டும்.
அக்டோபர்--19
There is no greater bliss than that of being like a new born child infront of the Divine.
இறைவனுக்கு முன்னால் அப்போதே பிறந்த குழந்தையைப் போல் இருப்பதைவிட மேலான இன்பம் வேறு எதுவும் இல்லை.
அக்டோபர்--20
The immutable Beatitude of the Divine is translated in the consciousness by an impelling force of progress of an incomparable intensity.
இறைவனின் நிலையான பேரின்பம் உணர்வில் ஒப்பற்ற அதி தீவிர முன்னேற்றத்தின் தூண்டும் சக்தியாக ஆகிறது.
அக்டோபர்--21
This force is transformed in the most external being into a calm and assured will which no obstacle can overthrow.
இந்த சக்தி ஜீவனில் ஒரு அமைதியான உறுதியான இச்சையாக உருவெடுக்கிறது. அதை எந்தத் தடையும் முறியடிக்க முடியாது.
அக்டோபர்--22
The Divine’s will is that the mind should know and He says.”Awake and be conscious of the Truth.”
நமது மனம் அறிவு விளக்கம் பெற் வேண்டும் என்பதே தெய்வ சங்கற்பம்”விழித்தெழு,பேருண்மையை உணர்” என்று இறைவன் சொல்கிறான்.
அக்டோபர்--23
We aspire to be liberated from all ignorance liberated from our ego so that we may open wide the doors of the supramental’s glorious manifestation.
அதிமனதின் மேன்மை மிக்க வெளிப்பாட்டின் கதவுகளை அகலமாகத் திறந்திட எல்லா அறியாமைகளினின்றும் அகங்காரத்திலிருந்தும் நாம் விடுபட வேண்டி ஆர்வமுறுகிறோம்.
அக்டோபர்--24
All our life all our work must be a constant aspiration towards the supramental perfection.
நம் முயற்சியில் தளர்வின்றியும், நமது தீர்மானத்தில் அமைதியுடனும் உறுதியுடனும் இருப்பின் இலட்சியத்தை அடைவது நிச்சயம்,
அக்டோபர்--25
Whatever happens we must remain quiet and trust the Divine ‘s grace.
என்ன நடந்தாலும் நாம் அமைதியாகவும், இறைவன் அருளில் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அக்டோபர்--26
Remaining steady in our effort and quiet and firm in our determination we are sure to reach the goal.
நம் முயற்சியில் தளர்வின்றியும், நமது தீர்மானத்தில் அமைதியுடனும் உறுதியுடனும் இருப்பின் இலட்சியத்தை அடைவது நிச்சயம்.
அக்டோபர்--27
In the perfect silence of the contemplation all widens to infinity and in the perfect peace of that silence the Divine appears in the resplendent glory of his light.
ஆழ்ந்த தியானத்தின் பூரண மோனத்தில் எல்லாம் அநந்தமாக விரிவடைகின்றன. முழு அமைதி செறிந்த அந்த மோனத்தில் இறைவன் தன் பேரொளிப் பிரகாசத்துடன் தோன்றுகிறான்.
அக்டோபர்--28
Our constant prayer is to understand the Divine’s will and to live accordingly.
நம் இடையறாத பிரார்த்தனை இறைவனுடைய விருப்பத்தை அறிந்து கொண்டு அதன் படி வாழ்வதற்காகவே.
அக்டோபர்--29
May the Divine’s love dwell as the sovereign master of our hearts and the Divine’s knowledge never leave our thoughts.
இறைவனின் அன்பு நமது இதயங்களில் தனி ஆணை செலுத்தும் எஜமானனாக உறையட்டும். இறைவனது ஞானம் நமது எண்ணங்களை விட்டு ஒரு போதும் அகலாது இருக்கட்டும்.
அக்டோபர்--30
Appearances and rules change but our faith and our aim remain the same.
தோற்றங்களும் விதிகளும் மாறும். ஆனால் நமது விசுவாசமும் குறிக்கோளும் மாறா.
அக்டோபர்--31
We must be always solely and exclusively the servitors of the divine.
நாம் எப்போதும் முழுமையாக இறைவன் ஒருவனுக்கே ஊழியம் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
நவம்பர்--1
Our aspiration rises always identical supported by a concentrated will
ஒரு முகப்பட்ட திடசித்தத்துடன் நமது ஆர்வம் எப்போதும் ஓரே சீராக எழுகின்றது.
நவம்பர்--2
We pray that the Divine should teach us ever more enlighten us more and more dispel our ignorance illumine our minds.
இறைவன் மேன்மேலும் நமக்குக் கற்றுக் கொடுக்க வேணடும். மேலும், ஒளியூட்ட வேண்டும். நம் அறியாமையை விரட்டி நம் மனத்தில் அறிவொளியை ஏற்ற வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்கிறோம்.
நவம்பர்--3
ஒவ்வொரு கணமும் முன்கூட்டியே கண்டு கொள்ளமுடியாதவை. அறியப்படாதவை நம்முன் உள்ளன. நமக்கு என்ன நேர்கிறது என்பது பெரும்பாலும் நமது நம்பிக்கையின் தீவிரத்தையும் தூய்மையையும் பொறுத்ததாக இருக்கும்.
நவம்பர்--4
At every moment the universe is recreated in its totality and in each of its parts.
ஒவ்வொரு நிமிடமும் இந்தப் பிரபஞ்சம் அதன் மொத்த வடிவிலும் அதன் ஒவ்வொரு பாகத்திலும் மறுபடி புதிதாய் சிருஷ்டிக்கப் படுகிறது.
நவம்பர்--5
If we had a truly living faith an absolute certitude of the almighty power of the Divine His manifestation could be so evident that the whole earth would be transformed by it.
இறைவனுடைய சர்வ வல்லமையுள்ள சக்தியில் உண்மையான உயிருள்ள நம்பிக்கையும் முழு நிச்சயமும் நமக்கு இருக்குமானால் இந்தப் பூவுலகம் முழுவதையும் திரு உருமாற்றம் செய்யும் வகையில் இறைவனின் வெளிப்பாடு தெளிவாகிவிடும்.
நவம்பர்--6
All is mute in the being but in the bosom of the silence burns the lamp that can never be extinguished the fire of an ardent aspiration to know and to live integrally the Divine.
ஜீவனில் எல்லாம் நிசப்தமாக இருக்கிறது. ஆனால் இறைவனை அறியவும். இறைவனை முழுமையாக வாழ்வில் வெளிப்படுத்தவும் விழையும் தீவிர ஆர்வத் தீயை, அந்த மோனத்தில் எரியும் விளக்கை அணைக்கவே இயலாது.
நவம்பர்--7
The flame of the aspiration must be so straight and so ardent that no obstacle can dissolve it.
பேரார்வத்தின் ஜ்வாலை மிகவும் நேரானதாகவும், மிகவும் தீவிரமானதாகவும், இருக்க வேண்டும். அப்போது எந்தத் தடையும் அதைச்சிதைக்க இயலாது.
நவம்பர்--8
In concentration and silence we must gather strength for the right action.
மன ஒருநிலைப்பாட்டிலும், மோனத்திலும்,முறையான செயலுக்குத் தேவையான பலத்தை நாம் சேகரிக்க வேண்டும்.
நவம்பர்--9
We must gather ourselves in a calm resolution and an unshakable certitude.
அமைதியான தீர்மானத்துடனும், அசைக்கமுடியாத நிச்சயத்துடனும், நம்மை ஒன்று கூட்ட வேண்டும்.
நவம்பர்--10
For the plenitude of His light we invoke the Divine to awaken in us the power to express Him.
அவனது ஒளியின் மிகுதிக்காகவும் அவனை வெளிப்படுத்தும் திறனை ந்ம்மில் விழிப்படையச் செய்யவும் இறைவனை அழைக்கிறோம்.
நவம்பர்--11
The serene and immobile consciousness watches at the bounderies of the world as a sphinx of eternity and yet to some it gives out its secret.
அந்த கால ஸ்பிங்க்ஸ் (எகிப்திய தெய்வத்தின் சிலை) போல் தெளிவான அசைவற்ற பேருணர்வு, உலகின் எல்லைகளில் காத்துக் கொண்டிருக்கிறது.இருப்பினும் ஒரு சிலருக்கு அது தன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறது.
நவம்பர்--12
We have therefore the certitude that what has to be done will be done and that our present individual being is really called upon to collaborate in this glorious victory in this new manifestation.
ஆகவே செய்யப்பட வேண்டியது செய்யப்படும் என்ற நிச்சயமும், இந்த மகத்தான வெற்றியில் நமது தனிப்பட்ட ஜீவன் ஒத்துழைக்க அழைக்கப்படுகிறது என்ற உறுதியும் நமக்கு இருக்கிறது.
நவம்பர்--13
None can say to the Divine “I have known Thee,” and yet all carry Him in themselves and in the silence of their soul can hear the echo of the Divine’s voice.
“உன்னை நான் அறிவேன்“ என்று யாரும் இறைவனிடம் செல்ல முடியாது. இருந்தாலும் அவனை எல்லோரும் தம்முள்ளே தாங்கியிருக்கின்றனர். அவர்களுடைய ஆன்மாவின் மோனத்தில் அவர்கள் இறைவனது குரலின் எதிரொலியைக் கேட்கவும் முடியும்.
நவம்பர்--14
Upon this world of illusion this sombre nightmare the Divine have bestowed His sublime reality and each atom of matter contains something of His Eternity.
பிரமைகள் நிறைந்த்தும் பயங்கரக் கனவு போன்றதுமான இந்த உலகில் மேல் இறைவன் தன்னுடைய மேன்மையான மெய்மையை பொழிந்திருக்கிறான்.சடப் பொருளின் ஒவ்வொரு அணுவும் தன்னில் கடவுளின் சாசுவதத் தன்மையின் ஏதோவொரு அம்சத்தை கொண்டிருக்கிறது.
நவம்பர்--15
The only important thing is the goal to be attained The way matters little and often it is better not to know it in advance.
அடையவேண்டிய இலட்சியமே முக்கியமான விஷயம், அதனை அடையும் வழி முக்கியமில்லை. அதனை முன்கூட்டியே அறியாமல் இருப்பது பெரும்பாலும் நன்று.
நவம்பர்--16
It is in oneself that there are all the obstacles it is in oneself that there are all the difficulties it is in oneself that there are all the darkness and all the darkness and all the ignorance.
எல்லாத் தடைகளும் எல்லாவித இடையூறுகளும் எல்லா இருளும் அறியாமையும் நமக்குள்தான் இருக்கின்றன.
நவம்பர்--17
There is a great power in the simple confidence of a child
ஒரு குழந்தையின் எளிய நம்பிக்கையில் மிகப் பெரிய சக்தி இருக்கிறது.
நவம்பர்--18
The Divine’s words comfort and bliss soothe and illumine and the Divine ‘s generous hand lifts a fold of the veil which hides the infinite knowledge.
இறைவனின் சொற்கள் ஆறுதலையும் பேரின்பத்தையும் அளித்து இதப்படுத்தி ஒளியூட்டுகின்றன.இறைவனின் தாராளம் மிகுந்த கரங்கள் அந்ந்தமான தெய்வீக ஞானத்தை மறைக்கும் திரையின் ஒரு மடிப்பை விலக்குகின்றன.
நவம்பர்--19
How calm noble and pure is the splendor of the Divine’s contemplation
இறைவனது தியானத்தின் பேரொளிப் பிரகாசம் எவ்வளவு அமைதியும் உன்னதமும் தூய்மையுமாய் இருக்கிறது.
நவம்பர்--20
We must be before the Divine always like a page perfectly blank so that the Divine will may be inscribed in us without any difficulty or mixture.
இறைவனின் முன்னிலையில் நான் ஒன்றும் எழுதப்படாத வெற்றுக் காகிதம் போல் இருக்க வேண்டும் அப்போதுதான் இறைவனின் விருப்பம் சிரமமோ கலப்போ இல்லாமல் நம்மில் பதிக்கப் பெறும்.
நவம்பர்--21
The very memory of the past experience has sometimes tobe swept away from the thoughts that it may not impede the work of perpetual reconstruction which alone in the world of relativities permits the perfect manifestation of the Divine.
எல்லாவற்றையும் தொடர்பு படுத்திப் பார்க்கும் இவ்வுலகில் இறைவனின் முழுமையான வெளிப்பாட்டை அனுமதிக்க வல்ல இடையறாத புனர் நிர்மாணப் பணிக்குத் தடங்கலாக இருக்கக் கூடிய பழைய அனுபவங்களின் நினைவையே கூட முற்றிலும் நம் எண்ணங்களிலிருந்து சில சமயங்களில் தள்ளிவிட வேண்டியிருக்கிறது.
நவம்பர்--22
At each moment may our attitude be such that the Divine’s will determines our choice so that the Divine may give the direction to all our life.
நம் வாழ்க்கை முழுவதும் இறைவனே வழி வகுக்க நாம் எடுக்கும் முடிவுகளை இறைவனது சித்தமே தீர்மானிக்கும் படியாக நமது மனோபாவம் கணந்தோறும் இருப்பதாக.
நவம்பர்--23
To live in the Divine with a life quite new a life solely made of the Divine of which the Divine should be the sovereign Lord……and so all trobles will be transformed into serenity all anguish into peace.
இறைவனிலேயே வாழும் ஒரு புத்தம் புதிய வாழ்வு. இறைவனாலேயே ஆகிய ஒரு வாழ்வு. இறைவனே அதன் தனிப் பெரும் எஜமான்னாய் இருக்கும் வாழ்வு.அப்படிப் பட்ட வாழ்வில் தொல்லைகள் யாவும் நிம்மதியாகவும் வேதனைகள் எல்லாம் சாந்தியாகவும் உருமாறி விடும்.
நவம்பர்--24
We feel the Divine so living in us that we await events with serenity knowing that His way is everywhere since we carry it in our being.
இறைவன் நம்மில் வாழ்வதை தீவிரமாக உணர முடிவதால் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை தெளிவுடன் எதிர் நோக்க முடிகிறது. நாம் இறைவனின் வழியை நமது ஜீவனில் தாங்குவதால் எங்கும் அதுவே நிலவுவதை அறிய முடிகிறது.
நவம்பர்--25
We must be frees from all care for contingences we must be delivered from the ordinary outlook on things.
நெருக்கடிகளைப் பற்றிய கவலையிலிருந்தும், விஷயங்களைச் சாதாரண நோக்கில் பார்க்கும் கண்ணோட்ட்த்திலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.
நவம்பர்--26
We must see only through the Divine’s eyes and act only through the Divine’s will/
இறைவனின் கண்கள் மூலமே நாம் பார்க்க வேண்டும். இறைவனின் இச்சை மூலமே நாம் செயல் பட வேண்டும்.
நவம்பர்--27
தனிப் பெருங்கருணையினால் பெறக்கூடிய மனநிறைவையும் பேரமைதியையும் ஒருங்கே தர வல்லது இறைவனின் அன்பு.
நவம்பர்--28
நமது இதயம் தொல்லை துயரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.அது உறுதியாகவும் சலனமற்றதாகவும் ஆகி யாவற்றிலும் இறைவனைக் காண்கிறது.
நவம்பர்--29
No comments:
Post a Comment