Tuesday, July 31, 2012

en ninaivugalin e -pathivu --jokes

காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு
இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.

கணவன் : எப்போதெல்லாம் நீ மனவருத்தத்துடன் இருக்கிறாயோ அப்போதெல்லாம் கண்ணாடி முன்னால்
போய் நின்று கொண்டு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். என்னால் நம்பவே முடியவில்லை
என்று சொல். உனக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

மனை‌வி : ‌நிஜமாகவா...

கணவன் : ஆனால் இதை அடிக்கடி செய்ய வேண்டாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.

கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே,
எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு
நினைச்சுதான்..
கணவன் : ?!?!?!

காதலி: "இதோ பாருங்க! உங்க கையை வச்சிக்கிட்டு என்கிட்டே எந்த சில்மிஷமும் பண்ணக் கூடாது.
எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்." காதலன்: "சரி, அப்போ உன் கல்யாணம் ஆனதும் எனக்குச் சொல்லி அனுப்பு."

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!"
"நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..."
நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..."

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?"
"வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?"
"அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல... நானும் என் மனைவிகிட்ட சொல்லல..."

அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு நாள் வித்தியாசம்.

No comments:

Post a Comment