Tuesday, July 31, 2012

en ninaivugalin e -pathivu ---art message

ஓவியங்கள் வரைவதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நிர்வாணமான உடலில், அல்லது ஏறக்குறைய நிர்வாணமான உடலில் ஓவியம் வரைவது. இதில் ஒட்டு மொத்த உடலே ஒரு புதிய ஓவியத்தால் உருவம் மாறி பிரமிப்பூட்டும். இன்னொரு வகை உடைகள் மறைக்காத முகம், கை, கால்கள் போன்ற இடங்களில் மட்டும் ஓவியம் வரைந்து வசீகரிப்பது !
உலக அளவில் பல்வேறு கலைஞர்கள் இந்தத் துறையில் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். நியூசிலாந்திலுள்ள ஜோனே கர், பிரான்ஸிலுள்ள வெஸ் கிலேன் போன்றவர்களெல்லாம் இந்த கலையில் வரலாற்றுப் புகழ் பெற்றவர்கள். இப்போது அந்தக் கலையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர் ஜெஸின் மார்வெடல் எனும் பெண்மணி.
இருபத்து ஐந்து வயதாகும் ஜெசின் ஜெர்மனியில் பிறந்தவர். இரண்டாயிரத்து ஐந்துகளில் சிலகாலம் இந்தியாவிலும் சமூகப் பணி செய்திருக்கிறார். இசையும் கலையும் இவருக்கு இரண்டு கண்கள் போல. கூடவே மனித நேயமும் நிரம்பியதால் இவர் இன்னும் அழகாகிவிடுகிறார்.
மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் பயிற்சியைப் பெற்றவர் இவர். ஜெர்மனியின் டார்ட்மன்டில் அத்தகைய குழந்தைகளுக்காய் இசைப்பது, கலைகளை காண்பிப்பது என அவர்களை ஊக்கபடுத்தும் பணியையும் செய்து வருகிறார்.
“ மற்றவர்களை விட வித்தியாசமாய் ஓவியம் வரைய ஆசைப்படுகிறேன். என்னோட ஃபேவரிட் ஏரியாக்கள் ரியலிஸ்டிக், மற்றும் சர்ரியலிஸ்டிக் தான்” என்கிறார் இவர்.
பறவையாக, இயற்கைக் காட்சிகளாக, நவீன ஓவியங்களாக, ஒளிவீசும் படங்களாக இவருடைய கைவண்ணத்தால் உடல்கள் உருமாறுவதை உலகமே வியப்புடன் பார்க்கிறது. இணையத்திலும், உடல் ஓவியக் கலை உலகத்திலும் பிரமிப்புடன் உச்சரிக்கப்படும் பெயராகி இருக்கிறார் ஜெஸின் மார்வேடெல்.

No comments:

Post a Comment