Wednesday, March 28, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

திருடன் 1 : டேய், கொள்ளையடிக்கச் சொன்னா, வீட்டுக்காரனை ஏன்டா தலைகீழா தொங்கவிட்டிருக்கே.

 திருடன் 2 : அறிவு கெட்ட முண்டமே, அவனைத் தலைகீழா தொங்க விட்டதினாலே தானே பாக்கெட்லே இருந்த பர்ஸ் கீழே விழுந்துச்சு.


ஏன்டா... கூழைக் கரைச்சித் தண்ணிய உடம்பிலே ஊத்திக்கிட்டே குடிக்கிறே?" "கூழானாலும் குளித்துக் குடின்னு எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்திருக்காரே!"


டிராபிக் கான்ஸ்டபிள்: யோவ் நடுரோட்டை விட்டு ஓரமா போய்யா. வண்டிக்காரனுங்க வந்து மோதிடப் போறானுங்க.

 குடிகாரன்: என்னை ஓரமா போகச் சொல்லிட்டு நீங்க மட்டும் நடுரோட்டிலே நின்னா எப்படி

பாட்டில்லே மருந்து அப்படியே இருக்கே! சாப்பிடல்லியா?" "பாட்டில் மேலே எழுதியிருந்தபடி செய்தேன்

 டாக்டர்!" "என்ன எழுதியிருக்கு?" "பாட்டிலை இறுக மூடி வைக்கவும்" "? ? ? ....."


"சீதா பேனாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க டீச்சர்!" "இராவணன் தான் தூக்கிட்டுப் போயிருப்பான்! அவன் ஏற்கனவே சீதாவைத் தூக்கிட்டுப் போன களவாணி!"



கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா...? மனைவி: இல்லே... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார்....


"என்னது.. அந்த கிரிக்கெட் வீரர் சொந்தமா வாத்துப் பண்ணை வைக்கப்போறாரா..?" "ஆமா.. இதுவரைக்கும் ஏகப்பட்ட 'DUCK' வாங்கியிருக்காராமே!"



"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?" "ஆமா, ஆன்ட்டி..." "முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்." "உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"

லைவர் டெல்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்..." "அவங்க சொல்றதெல்லாம் புரியாம.. மௌனமாகவே இருந்திருக்கார்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு.. பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க..."


"கையில் பணமே தங்க மாட்டேங்குது..." "நீ ஏன் கையில வச்சிருக்கே... பாக்கெட்டில் போட வேண்டியதுதானே?"


"நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்." "அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்."





No comments:

Post a Comment