Thursday, March 29, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

"பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்." "அப்புறம் என்னாச்சி...?" "பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்."


"மகனே பரீட்சையில் எத்தனை கேள்வி வந்தது?" "ஐந்து கேள்விப்பா"

 "நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?" "முதல் மூணும் கடைசி இரண்டும்"

 "வெரிகுட் கீபிடப்"

அப்பா: டேய்! ஏன்டா இண்டர்வியூக்கு போகலையா?

மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!


"கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா... ஏன்?" "எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை."

"டைம் இஸ் கோல்டுன்னு சொன்னா, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற?" "அதை அடமானம் வைக்க முடியாதே"

தா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா?

சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவர்மென்ட்டு.




பிளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...

நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா?

பிளேயர்: அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா?

நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!

பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்


மனைவி: போதை ஏறிடுச்சுன்னா அதுக்காக இப்படியா?

 கணவன்: ஏன்... அப்படி என்ன பண்ணினேன்

பங்கஜம்? மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.


"ஐசிஐசிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?"

 "தெரியலையே..."

"தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்..."

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!"

"முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?"

 "உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போதுகூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்."



No comments:

Post a Comment