Friday, March 30, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?"
 "ஏன்?"

 "மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"

என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"

 "இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"

எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?" "டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்."



"ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை....." "அய்யய்யோ.... அப்புறம் என்ன பண்ணுனீங்க?.."

 "அப்புறம் பாக்கெட் -ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்...."

உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?

என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!


நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?

டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.

நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.

டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?

நர்ஸ்: ???

No comments:

Post a Comment