Friday, November 4, 2011

PRIVACY-Thagaval


இத்தாலியில் ஒரு ஓவியர் இருந்தார். இயேசு பிறப்பது முதல் அவர் சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சி வரை ஒவ்வொரு கட்டமாக வரைந்து கொண்டே வந்தார்.
                        குழந்தை இயேசுவை வரைய, தெய்வ அழகு நிரம்பிய ஒரு குழந்தை அவருக்கு கிடைத்த்து. இப்படியாக ஒவ்வொரு கட்டமாக இயேசு வின் வாழ்க்கை வரலாற்றை சுமார் 25 வருடங்களாக வரைந்து வந்தார்.
                 இயேசுவை சிலுவையில் அறைந்து, அவரை சாட்டையால் அடிப்பவனை வரைவதற்கு ,பார்ப்பதற்கு கொடுரமான தோற்றமும் பயங்கரமும் சேர்ந்து ஒரு மாடல் வேண்டும் என நினைத்தார்.அவருக்கும் கிடைத்த்து. ஆனால் என்ன ஆச்சரியம். எந்த குழந்தை ஐ குழந்தை இயேசுக்கு மாடலாக வரைந்தாரோ, அந்த  குழந்தை தான் ......வாழ்க்கை என்னும் புயலில் சிக்கி அப்படிச் சின்னாபின்னமாகி இருந்த்து.
                    வாழ்க்கை அனுபவங்கள் ஒருவனை எப்படி எல்லாம் கூறுபோட்டு விடுகின்றன என்பதற்க்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment