Monday, July 2, 2012

en ninaivugalin e -pathivu -lemon

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.


எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.


வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது.


மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.

பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.

முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

No comments:

Post a Comment