Sunday, February 12, 2012

en ninaivugalin e-pathivu -நல்லவங்க சொன்னத நானும் சொல்கிறேன்

பணிவாக இரு ! நீ கர்வப்படும்படி உன்னிடம் என்ன இருக்கிறது?

வணங்க ஆரம்பிக்கும்போதே வளர ஆரம்பித்து விடுகிறோம்.

வீழ்வது வெட்கமானதல்ல ! வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம் 

அடைபட்டிருக்கும் கதவுகளின் அருகில் நின்று அழுது புலம்பிக்கொண்டு திறக்கப்பட்டிருக்கும் ஜன்னல்களை கவனியாமல் இருந்து விடாதே.

அடுத்தவனுடைய மெழுகுவர்த்தியை அணைக்கும் முயற்சியில் உன்னுடைய விரல்களை சுட்டுக்கொள்ளாதே!

எதுவுமே நேராததுபோல் நடந்து கொள்ளுங்கள் ; என்னதான் நடந்திருந்தாலும் சரி !
சண்டையில் முதலில் வாயை மூடுகிறவன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ? ! !

    எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது. நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !

முட்டாள்களோடு விவாதம் வேண்டாமே. பார்கிறவர்களுக்கு யார் முட்டாள் என்ற  சந்தேகம் வந்து விடும்.  

உங்களை யாராவது விமரிசனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறதா ?

அப்படியானால் அந்த விமரிசனம் மிக சரியானதுதான்.!.


அதிர்ஷ்டம் கெட்ட காலத்தில் கைத்தடியும் பாம்பாகும்.

அடிமை போல் உழைக்கணும். அரசன் போல்
உட்கார்ந்து சாப்பிடணும்


அதிகம் யோசிப்பவன் சொற்பமாகத்தான்
செய்து முடிப்பான்.

அறுபதடி கம்பத்தில் ஏறி வித்தை காட்டினாலும்,
தரைக்கு வந்துதான் தட்டு ஏந்தியாகணும்.

அடுப்பு புகையுமிடத்தில் பிச்சைக்காரனுக்கும்
ஒரு பங்கு இருக்கத்தான் செய்கிறது 


அரண்மனை வாசற்படி அதிகம் வழுக்கும்.
அழகாபுரி கொள்ளையானாலும் அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு ஆழாக்கு பால்
கிடைத்தாலும் அதையும் பூனை குடிக்குமாம்

அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியாது.

அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் ஒரு
பாரமா?


அற்பப்புத்திகாரன் கைகளில் அதிகாரம்
வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
இரைச்சல்தான் மிச்சம்.

* அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ;
அது ஆற்றை கிழிச்சிகிட்டு பாயவும்
வேண்டும் !


அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
சொந்த நடையை இழந்ததாம்.


அணில் தள்ளி தென்னை சாயுமா ?


அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !

அமாவாசை இருட்டில் பெருச்சாளி
போனதெல்லாம் வழிதான் !

* அறுக்கதெரியாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள் !

அறுவடை காலத்தில் எலிக்கும் அஞ்சு
பெஞ்சாதி.

* அறப்படித்தவன் அங்காடி போனால்
விற்கவும் மாட்டான்; வாங்கவும்

அங்காடிகாரியை சங்கீதம் பாட
சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை
என்பாள்.

சீலை இல்லைஎன்று சின்னாயி வீட்டுக்குப் போனால், அவள் ஈச்சம் பாயை கட்டிக் கொண்டு எதிரே வந்து நின்னாளாம்!

கப்பல் ஏறிவிட்ட கடனை கொட்டை நூற்றா அடைக்க முடியும் ?

அன்னப்பாலுக்கு சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்கு சர்க்கரை கேட்கலாமா ?

அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.

அழிந்த கொல்லையிலே கழுதை மேய்ந்தால் என்ன ? குதிரை மேய்ந்தால் என்ன?

அற்பன் கை ஆயிரம் பொன்னிலும், சத்புத்திரன் கைத் தவிடு மேல் !

அவசரத்தில், அண்டாவுக்குள் கூட கை நுழையாது.

அரசன், கல்லின் மேலே கத்திரிக்காய் காய்க்கும் என்று சொன்னால், கெத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள்

அம்மண தேசத்தில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

ஆவுடையாரையும், ஆத்தாளையும் ஆற்று வெள்ளம் அடிச்சிட்டு போகும்போது சுத்தியுள்ள லிங்கமெல்லாம் சோத்துக்கு அழலாமா?

ஸ்ரீரங்கத்து காக்கையானால் கோவிந்தம் பாடுமா?

சிரட்டை தண்ணீரும் எறும்புக்கு சமுத்திரமே..

கெட்டிக்கார சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விட முடியாது !

சிட்டு குருவிக்கு பட்டம் கட்டினால் சட்டி பானை மேலே லொடலொடன்னு தத்துவத்தை தவிர வேறு என்ன செய்யும்?.

இறகு முற்றி, குஞ்சுகள் பெரிதானால், அதது தன்னுடைய வயிற்றைத்தான் பார்க்குமே தவிர தாய்ப்பறவையை பற்றி கவலைப் படுவதில்லை.

கழுகு எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் அதன் கண்களும் நோக்கமும் குப்பை மேட்டிலுள்ள செத்த எலியின் மீதுதான் இருக்கும்.

மயிலின் அழகு இயற்கையாக ஆண்டவனால் கொடுக்கப்பட்டது. அப்படியிருக்க கழுத்தை நீட்டிக்கொண்டு உடலை வளைத்துக்கொண்டு அந்த கர்வ நடை எதற்காக ? தான் எதையோ பெரிதாக சாதித்துவிட்டதைப்போல !!

தான் கூவுவதைக் கேட்பதற்காகத்தான் சூரியன் உதிக்கிறான் என்று சேவல் நினைக்குமானால், அதற்கு பெயர்தான் அகந்தை.!!

குயில் பாட்டில் இனிமையைக்காட்டிலும் சோகம்தானே அதிகம் இருக்கிறது. சோகத்தை ரசிக்க யாரால் முடியும், இதயமில்லாதவர்களைத் தவிர ?!

பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய அவசியமில்லை ! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.

முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக்கொண்டிருப்பான். அறிவாளி, இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்பான்.


பானையில் சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு குறைவில்லை. கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் பஞ்சமில்லை.

பணம் என்ற பாஸ்போர்ட் உங்கள் கையில் இருக்குமானால் சொர்க்கத்துக்குகூட வெகு சுலபமாக சென்று விடலாம்.

கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில் தேவையான பொருளைக்கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் உன்னை யாருக்குமே தெரியாது.

பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது திறந்த கைகளோடு போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.



ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.


























       

No comments:

Post a Comment