Sunday, February 12, 2012

en ninaivugalin e-pathivu --sri ragaventhira


கி.பி.19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சி, முன்பு மானியமாக வழங்கப்பட்ட நிலங்களை எல்லாம் மீண்டும் அரசுடைமை ஆக்கிக் கொள்ளும் பொருட்டு Re –sumption of Indian Lands Regulation  என்ற சட்டத்தைப் பிறப்பித்து Permanent settlement செய்த போது ஸ்ரீ ராகவேந்திர்ரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மாஞ்சாலம் எனப்ப்டும் மந்த்ராலய கிராமத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவையும் பிறப்பித்த்து.

ஆனால் இந்த உத்தரவிற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து இக்கிராமம் நவாப் சித்தி மசூத்கான் என்பவரால் திவான் செங்கண்ணரின் மூலம் ஸ்ரீ ராகவேந்திர்ருக்கு தானமாக அளிக்கப் பட்ட்து என்று விண்ணப்பம் செய்த வண்ணம் இருந்தனர்.

ஆங்கிலேய அரசாங்கம் ஒரு Settlement Officer ஐ மந்திராலயம் அனுப்பி உண்மை நிலைமையை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட்து.

அதன்படி தாமஸ் மன்றோ என்ற அதிகாரி மந்திராலயம் செல்ல ஏற்பாடாகியது.(இவரது உருவச் சிலை இன்றும் அண்ணாச் சாலையில் உள்ளது)

உள்ளே செல்லும் மின் தனது காலணிகளையும் தலையில் இருந்த தொப்பியையும் அசற்றி விட்டு பிருந்தாவனத்தை நெருங்கினார்.அவரைச் சுற்றி அதிகாரிகளும் பக்தர்களும் நின்றிருந்தனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தமஸ்மன்றோ அவர்கள் மட்டும் இடைவெளி விட்டுப் பேசிக்கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்தோருக்கு அவர் பேசுவதை கோர்வையாக புரிந்து கொள்ள முடியவில்லை,ஆனால் அவர் எதிரே யாருடனோ பேசுகிறார் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்தனர்.

தன் உரையாடலை முடித்துக் கொண்ட மன்றோ பிருந்தாவனத்தை வலம் வந்து சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பிருந்தாவனத்து பூஜகர்கள் மந்த்ர அஷ்சதையை கொடுக்க முற்பட்ட போது அவர் தன் கையை விரித்துக் காட்டி சொன்னார் தனக்கு குரு ஸ்ரீ ராகவேந்திர்ர் பரிசுத்தமான பரிமள மந்த்ர அஷ்சதையை வழக்கி விட்டார் .

மேலும் மன்றோ சொன்னார்சுவாமிகள் பிரத்யசமானார். அவர் பிரஹலாத அவதாரம் எடுத்த போதே இந்த இடம் அவர் வசத்தில் இருப்பதாகவும், தற்போது நவாப் அவர்களிடம் ஒரு சம்பிரதாயமே தவிர வேறொன்றும் இல்லை என்றும் கூறினார்.இன்னும் நான் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் ஆங்கிலத்திலேயே விளக்கம் தந்தார்.

இவற்றுக்கெல்லாம் அதிகாரபூர்வமான ஆதாரம் மதராஸ் அரசாங்க கெஜட்டில் பக்கம் 213ல்ஆதோனி தாலுகாஎனும் தலைப்பின் கீழ் 51வது அத்தியாயத்தில் விளக்கமாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment