ஒரு விறகு வெட்டி மரத்தில் விறகு வெட்டிக்கொண்டிருக்கும் போது தனது கோடாலியைக் கீழே தண்ணீரில் போட்டு விட்டான். அதை எப்படி எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் போது கடவுள் தோன்றி ஒரு தங்க கோடாலியை எடுத்து இது உன்னுடையதா என கேட்டார். விறகு வெட்டி இல்லை என்றான். கடவுள் வெள்ளி கோடாலியை எடுத்து இதா என்றார். இதுவும் இல்லை என்றான் விறகு வெட்டி. கடைசியில் அவனது இரும்பு கோடாலியை எடுத்து இதா என்றார். ஆமாம். என்றான் விறகு வெட்டி.
கடவுள் அவனது நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனுக்கே பரிசாக் கொடுத்து அனுப்பினார்.
சிறிது நாள் க்ழித்து அவன் மனைவி தண்ணீரில் விழுந்து விட்டாள். அப்போதும் கடவுள் அவனுக்கு உதவ நினைத்தார். ஒரு பேரழகியை காண்பித்து இவளா உன் மனைவி என்றார். உடனே விறகு வெட்டியும் ஆமாம்,ஆமாம், என்றான் அவசரமாக.. கடவுளுக்கு ஒரே ஆச்சரியம்.
என்னப்பா!!!!! உன் நேர்மை எங்கே போயிட்டு? இவள் உன் மனைவி இல்லையே என்றார்.
உடனே விறகு வெட்டி ஆமாம் இவள் இல்லை என்பேன். நீங்கள் ஐஸ்வர்யாராய் ஐ காண்பித்து இவளா? என்பீர்கள். நான் இல்லை என்பேன்.
பிறகு வேறு ஒரு அழகியை காண்பித்து இவளா என்பீர்கள் நான் இல்லை என்பேன். கடைசியில் என் மனைவியை காண்பிப்பீர்கள். நான் ஆமாம் என்றவுடன் உன் நேர்மையை மெச்சி எல்லாரையும் என்னுடன் அனுப்பி வைப்பீர்கள். ஒருத்தியையே சமாளிக்க முடியவில்லை. நான் என்ன செய்வது. அதனால் தான் அப்படி கூறினேன் என்றான் விறகு வெட்டி......
வள்ளுவர் கூறிய போல் நன்மை உண்டாகுமாயின் பொய் சொல்வதில் தப்பே இல்லை.
No comments:
Post a Comment