Monday, February 6, 2012

privacy--kavithai


... பள்ளிக்கூடம் போகலாம்
பகுத்தறிவை வளர்க்கலாம்

நல்ல பாடம் படிக்கலாம்
நல்லறிவை வளர்க்கலாம்..!
தாய்த் தமிழை கற்கலாம்
தரணி போற்ற வாழலாம்
ஆங்கிலத்தைக் கற்கலாம்
அகிலம் முழுக்க சுற்றலாம்..!
கணக்குப் பாடம் கற்கலாம்
கணிதப் புலி ஆகலாம்
அறிவியலைக் கற்கலாம்
அறிவில் சிறந்து நிற்கலாம்..!

வரலாற்றைப் படிக்கலாம்
முன்னோர் வழி நடக்கலாம்
புவியியலைப் படிக்கலாம்
புதியனவற்றைப் படைக்கலாம்..!

அறிவியல் தமிழ் கற்கலாம்
அண்டத்தை அறியலாம்
கணிப்பொறியைக் கற்கலாம்
புது கண்டுபிடிப்புகள் செய்யலாம்..!

No comments:

Post a Comment