500ரூபாயில்கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ரூபாய் நோட்டின் வெண்மையான பகுதியில் மகாத்மா காந்தியின் வாட்டர் மார்க் தெரியும்.அதன் அருகே 500 என்ற எண் வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் பளிச் என்று தெரியும்.
நடுவில் இருக்கும் 500 என்ற எண்ணை சாய்த்துப் பார்த்தால் நிறம் மாறும்.
அல்ட்ரா வயலட் வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் ரூபாய் நோட்டின் வரிசை எண் ஒளிரும்.
நோட்டின் குறுக்கே வெள்ளிதகடு போன்ற பாதுகாபு இழை இருக்கும்.
மகாத்மாகாந்தி பட்த்துக்கு அடுத்து உள்ள பகுதியில் 500 என்ற எண் மறைந்து இருக்கும்.
இந்திய கரன்ஸி கூழாக்கப் பட்ட பருத்தியில் இருந்து தயாரிக்கப் படுவதால் எண்ணும் போது படபடவென சத்தம் வரும்.
1000ரூபாய் நோட்டில் மட்டும் வலதுபுறத்தின் மேலே,கருநீல நிறத்திலும்;இடது புறத்தின் கீழே,சிகப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
நீண்ட நாள் புழக்கத்தில் இருந்தால் ஒரிஜனல் நோட்டுக்கள் சற்றுத் தடிமனாகவும் இருக்கும்.
கள்ள நோட்டுக்கள் மெல்லியதாக இருக்கும்.
ரூபாயின் சீரியல் எண்கள் சிகப்பு நிறத்தில் பளிச் என்று இருப்பதோடு அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி சீராக இருக்கும்.
கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் சற்றுச் சிறியதாக இருப்பதோடு அல்ட்ரா வயலட் விளக்கொளியில் ஜொலிக்காது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் மத்தியில் அச்சிடப்பட்டு இருக்கும் 500,மற்றும் 1000 என்ற இலக்கங்கள் பச்சை நிறத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்.சற்றே சாய்த்துப் பார்த்தால் அந்தப் பச்சை நிறம் நீல நிறமாக மாறும்.
ஆனால் கள்ள நோட்டுக்களில் நிறம் மாறாது.
மகாத்மா காந்திக்கு இட்து புறம் இருக்கும் பாதுகாப்பு இழை உள்ளே பாதியும், வெளியே பாதியுமாகப் பொதிந்து இருக்கும்.பச்சையாக அச்சடிக்கப் பட்ட இழை வெவ்வெறு கோணங்களில் பார்க்கும் போது நீலநிறமாக தெரியும்.
கள்ள நோட்டுகளில் வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்தால் ஒரே கோடாகத் தெரியாது.நிறம் மாறும் தன்மையும் இருக்காது.
வாட்டர் மார்க்கில் மகாத்மா காந்தி படம் சினிமா ஸ்லைடு போலத் தெரியும்.
கள்ள நோட்டுக்களில் படம் தெளிவாக இல்லாமல் கார்ட்டூன் படம் போல இருக்கலாம்.
உங்களிடம் 500 ருபாய் 1000 ரூபாய் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கவனக் குறைவாக கையாண்டால் போலீஸ் கைது செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
பாகிஸ்தானில் ‘கிச்சன் பாலிடிக்ஸ்’ காரணமாக இந்தியா எங்கும் பரவியிருக்கும் கள்ள நோட்டுக்கள் உங்கள் கையிலும் இருக்கலாம்.உஷார் நண்பர்களே.....
பாகிஸ்தானின் உளவு அமைபான ஐ.எஸ்.ஐ. ரூ.500 மற்றும்ரூ.1000 இந்திய கரன்ஸிகளை கோடிக்கணக்கில் அச்சடித்து அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் மூலம் வங்க தேசம், நேபாளம் வழியாக வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கு பார்சல் அனுப்புகிறார்கள். அங்கு இருக்கும் முகவர்கள் மூலம் இந்தியா முழுக்க இந்த நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன வடமாநிலங்களில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் தினமும் படையெடுக்கின்றனர்.அவர்களை இங்கே வழிநடத்தும் முகவர்களைக் கள்ள நோட்டு லிங்கில் சேர்த்துவிடுகிறார்கள்.
அந்த முகவர்கள் கூலித் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் தொகையை முழுக்கவோ அல்லது சரி பாதி தொகையிலோ கள்ள நோட்டுகளைக் கலந்து விடுகிறார்கள்.
சமீபத்தில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றதாக தமிழகம், புதுச்சேரியில் வடமாநிலத் தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்கள்.அதில் பெரும் பாலானோர் அப்பாவிகளே....
கொஞ்சமே கொஞ்சம் முனைந்தால் நாமே கள்ள நோட்டுக்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
No comments:
Post a Comment