Monday, December 18, 2017

Enninaivugalin epathivu...ninaithu parkiren

காலம் முன்னாே க்கி என்னை எழுத்துச்சென்றாலும் பாழும் மனது பின்  நாே க்கி யேசெல்கிறது...மனதின் பாே க்கில் எனது மலரும் நினைவுகள்...              பத்து வயதுக்கு முன் ...............                       நான் குழந்தை யாக  இருந்த பாே து எனக்கு மூத்தவன் இறந்து விட்டான்.. எல்லாே ரும் வருத்தத்தில் இருந்தனராம்.நான் மிகவும் அழுதே னாம்.என்னை கடையில்வேலைசெய்யும்பை யன் சமாதானம்செ ய் கிறே ன் என்று கீழே பாே ட்டு விட்டான்.பேச்சு மூச்சின்றி இருந்தே னாம்...என் அப்பா வருத்தத்தில் இவளை யும் அடக்கம் பண்ண ஏற்பாடுசெய்யுங்கள்.என்றார்களாம்..பின் நினைவு திரும்பி  இன்று  அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்வது .....உம்.....


வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை...திரும்பி போகமுடியாது..திரும்பி பார்க்கத்தான் முடியும்..எனவே மனம் போகும் போக்கில் என் நினைவுகள்........விரும்புவதே விருப்பமானவர்களுக்காக செய்வதை விட எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களை விரும்பியவர்களுக்காக செய்யாமல் கழித்த நாள்களே அதிகம்..அந்த மன ஆரோக்கியம் அப்ப மிகுதியாக என்னிடம் இருந்தது...காலத்தின் கட்டாயத்தால் இப்ப குறைந்து விட்டதோ என்ற மனக் கலக்கம் அடிக்கடி எனக்கு தோன்று கிறது.


மனதின் பாே க்கில்..............அந்த நாட்களில் இரவில் ராப்பாடி என ஒருவன் பாடிக் கொண்டு வருவான்.கையில் வட்ட வடிவில் ஒரு கருவி இருக்கும் விரலில் கட்டையை கட்டி தொங்க விட்டிருப்பான்.அந்த கட்டையால் வட்ட வடிவ கருவியில் அடித்துக் கொண்டே வருவான்..சங்கும் ஊதுவான்.இரவின் மயான அமைதிக்கு அவனது வரவு மனதிற்கு பயத்தை கொடுக்கும்.யாரும் அவனை பார்க்க முயல மாட்டார்கள்..அவனுக்கு வாசலில் காணிக்கையாக ரூபாய் வைப்பார்கள்...குறி வேறு சொல்வான்.மறு நாள் பெரியவர்கள் எல்லாரும் கூடி யாரைப் பற்றி எந்த வீட்டைப் பற்றி ராப்பாடி குறி கூறினான் என இவர்கள் குறிப்பு எடுப்பார்கள்..நாங்கள் அவனைப் பற்றி பயத்தோடு எங்களுக்குள் பேசிக் கொள்வோம்..இப்ப ராப்பாடி இடத்தை தொல்லை காட்சிகள் பிடித்து கொண்டு விட்டன..

En ninaivu galin e pathivu--my dance photo


Monday, November 27, 2017

En ninaivu galin e pathivu story

ஒரு பெரிய பணக்காரர். மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு, " எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி " என்று அறிவுரை சொன்னார்.
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

ஜென் துறவி கோபப்படவில்லை
 ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

‘என்ன சாமி சொல்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனையும்!’ என்றார் ஜென் துறவி. ‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’என்றார்.
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

😄😃😊😝😜😛மன்னரின் அரசவை...ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுபவர்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்கvன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என.

ஒருவரைஎப்படிஅவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

 மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்னஅங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிரான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிரான்.என்றார்

எவ்வளவு போகிறது...

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீன்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்..சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்யம்.

மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
.
அவமானம் என்பது ஒருவித மூலதனம்.

.
.
.
.
.
.
.
.
அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது. அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்

Monday, November 20, 2017

Enninaivugalin e pathivu..tamil super avvai

#ஔவையின் தமிழ்ப்புலமை

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த கீழ்க்கண்ட இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன்.

அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார்.

கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது.

அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார்.

ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார்.

கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி 
ஒளவையாரை நோக்கி,

‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ'

என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார்.

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே இப்பாடலில் உள்ள கேள்வி.

நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும்.

 "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.

கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

ஔவையார் பாடிய பாடலின் பொருள் விளக்கம்

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக் கட்டியினால் எழுதியிருந்த கீழ்க்கண்ட இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன்.

அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார்.

கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு

என்பதாகும் அவ்வரிகள்.

இதையும் சேர்த்து முழுப்பாடலாக,

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "

என்பதாகும்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது.

அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார்.

ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார்.

கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி 
ஒளவையாரை நோக்கி,

‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ'

என்று சிலேடையாக ஒரு தொடரைச் சொன்னார்.

எதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு கூரை (பந்தல்) இருக்கும் என்பதே இப்பாடலில் உள்ள கேள்வி.

நான்கு இலைகள் சேர்ந்து செய்யப்பட்ட கூரைபோல காட்சி தரும் "ஆரை" என்னும் கீரைக்கு ஒரே ஒரு அடிப்பகுதிதான் இருக்கும்.

 "ஆரை" கீரையைத்தான் கம்பர் இப்படி விடுகதையாக கேட்டார்.

டீ" என்கின்ற எழுத்து பெண்களை மரியாதையின்றி மற்றும் தரக்குறைவாக குறிக்க பயன்படுத்தப்படும் எழுத்தாகும். கம்பர் அந்த எழுத்தினை சொல்லில் பயன்படுத்தி விடுகதையினை கேட்டார்.

கம்பரின் குறும்பினை ஒளவையார் புரிந்து கொண்டார். அதே பாணியில் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."

ஔவையார் பாடிய பாடலின் பொருள் விளக்கம்

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

Sunday, November 19, 2017

En ninaivu galin e pathivu drama

அனைவருக்கும் வணக்கம்...பிரட்சனையில்லாத மனிதர்கள் யார்...பிரட்சனையை கண்டு பயப்படாமல் எதிர் கொண்டு தீர்த்து மகிழ்வதே வாழ்க்கை...இங்கு பிரட்சனையோடு வருபவர்களின் பிரட்சனையை தீர்த்து அவர்களை சேர்த்து வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்..அதுமட்டுமல்ல நேயர்களே..உங்களுக்கு ஆயிரம் பிரட்சனை இருந்தாலும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு அடுத்தவர் பிரட்சனையை பார்க்க டி.வி.முன் அமர்ந்து  நிகழ்ச்சி ரேட்டிங்கை அதிகப்படுத்தும் நீங்கள்  தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்..உங்களுக்கு எங்களது நன்றி..
.இன்று ஒரு அபலைப் பெண் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

.நான்....வாங்கம்மா வாங்க..............என்ன கண்ணை கசக்கிட்டே வரீங்க...பாருங்க பெண்களோட நிலைமையே இது தான்..வீடியோ ஓடுது மேக்கப் களைஞ்சிடும் நினைக்காம கண்ண கசக்கிட்டு வராங்க பாருங்க இது தான் பெண்களோட இன்றய நிலமை..



          ராஜம்....நான அழல மேடம். கண்ணுல தூசி


         நான்.    .பாருங்க கண்ணீர கூட தூசி ன்னு சொல்றாங்க இது தான் பெண்கள்...தமிழ் பெண்கள்......வாங்க உட்காருங்க....சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரட்சனை 



       ராஜம்...எனக்கு ஒரு பிரட்சனையும் இல்ல மேடம்..


       நான்....இல்லமா. இந்த நிகழ்ச்சிக்கு வந்துடீங்க...ஏதாவது சின்ன பிரட்சனைய சொல்லுங்க  ..நாங்க அதை ஊதி பெருசாக்கி உங்களையும் பார்ப்பவர்களையும் நொந்து நூடில்ஸ் ஆக்கிடறோம்..                 



 ராஜம்...ஒரு பிரட்சனையும் இல்ல மேடம்...




     நான்....சரி உங்க வீட்டுகாரர் என்ன பண்றாரு


   ராஜம்...அவர பத்தி பேசாதீங்க மேடம் ...ரொம்ப கொடும படுத்துவார் மேடம்...குடிச்சிட்டு வந்து அடிப்பார் சில சமயம் அடிச்சிட்டு போய் குடிப்பார் மேடம்..ஒரு நாள் மேடம் என் தாலி செயின அத்துட்டு ஓடிட்டார் மேடம்




   நான்..என்ன செயின அத்துட்டு ஓடிட்டாறா..எத்தன பவுன் மா.....


ராஜம்....அது ஒரு மூணு பவுனு இருக்கும் மேடம்...

.நான்...மூணு பவுனா....அழகா ஒரு அட்டியல் பண்ணலாமே .இருங்கம்மா அவர கூப்பிட்டு விசாரிக்கலாம்..

.ராஜம்....வேண்டாம் மேடம் இப்ப நான ரொம்ப நிம்மதியா  இருக்க மேடம்..அப்பறம் மேடம் என் செயின அத்துட்டு ஓடினார்ல மேடம் அப்ப நான் அருவாள தூக்கிட்டு பின்னால ஓடினேன் மேடம்.அவர் செயின வீசிட்டு போயிட்டார் மேடம்.. விட்ருங்க மேடம் நான இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கேன்...


நான்..இல்லம்மா.அவர கூப்பிட்டு விசாரிக்கலாம்...வாங்க சார்.உட்காருங்க..ஆமா..என்ன அனியாயம் சார்...கேட்க ஆளே இல்லேன்னு நினைப்பா  குடிச்சிட்டு வந்து அடிச்சிருக்கீங்க..சரி..அது என்ன அடிச்சிட்டு போய் குடிச்சிருக்கீங்க...இந்த எக்ஸஸைஸ் பண்றதுக்கு முன்னாடி வாம்அப் பண்ணுவாங்களே அத மாதிரி...


     சார்...மேடம்  நான அவங்களை அடிச்சதே இல்ல...என்னா அது யாரோ...


.நான்...என்ன ராஜம் அவர் அடிச்சதே இல்லனு சொல்றாரே.


.ராஜம்...என் புருஷ குடிச்சிட்டு வந்து அடிப்பார் மேடம்.அடிச்சிட்டும் குடிப்பார் மேடம்.. 

நான்...சரி இந்த நிகழ்ச்சிக்கு வந்துட்டீங்க.உங்கள சேர்த்து வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்..சொல்லுங்க சார் இவங்களோட வாழ விருப்பமா...


.சார்....எனக்கு விருப்பம் மேடம்...எங்கள சேர்த்துவைங்க மேடம்.


.நான்....என்ன ராஜம் நீங்க என்ன சொல்றீங்க.


.ராஜம்...வேண்டாம் மேடம்..


.நான்  ..இங்க பாருங்க ராஜம் குடிச்சிட்டு வந்து மனைவியை அடிச்சா திருப்பி அடிக்கலாம்..ஏன்..தூப்பாக்கிய வைச்சு சுடக் கூட செய்யலாம்..இது தான் நான் இந்த நிகழ்ச்சியின் மூலம் சொல்லும் தீர்ப்பு..ஆனா.அவர் திருந்தி வந்திருக்கிறாரு ஏத்துக்கிறது தான் பண்பாடு..மன்னிக்கிறது  சிறந்த குணம்..சொல்லுங்கம்மா...


.ராஜம்..இல்ல மேடம் அவரு குடிக்கிறாரா நிரந்தர வேல இருக்கா  இல்ல வேற ஏதாவது பெண் தொடர்பு இருக்க..ஒண்ணும் தெரியாம எப்படி மேடம்.

.நான்...பாத்தீங்களா....எவ்வளவு திறமைய கேள்வி கேட்கறாங்க..இவங்களோட வாழ்றதுள உங்களுக்கு என்ன சார் பிரட்சனை..இந்த மக்கள சாட்சியா வைத்து அவங்க கேக்ற கேள்விக்கு பதில் சொல்லுங்க..


.சார்..மேடம் நான் ஒரு ஹோட்டல்ல வேலை செய்யறன்...குடிக்கிறது  இல்ல மேடம் .தனியா தான்  இருக்கேன்..எங்கள சேர்த்து வைங்க மேடம்..

நான்....இருங்க சார் ...உங்கள சேர்த்து வைப்பது தானே நிகழ்ச்சியின் நோக்கம்...அவசரபடாதீங்க....சொல்லுங்கம்மா...

ராஜம் அமைதியாக என்னை பார்த்தல்.....

சார்...மேடம் ஒரு சின்ன சந்தேகம்..


.நான்...என்ன என்ன சந்தேகம்..வெண்ண திரண்டு வரும் போது தாழி உடஞ்ச மாதிரி...நிகழ்ச்சியே முடிய போகுது இப்ப போய் சந்தேகம் அது இது னுட்டு.


.சார்...இல்ல மேடம் அவங்க பேரு என்ன மேடம்..

நான்..என்ன பேரு என்னவா....


.சார்...மேடம்.நான் இப்படி போயிட்டு இருந்தேன்.உள்ள சூட்டிங் நடக்கு அங்க ஒரு அம்மாக்கு கணவனா நடிக்கிறாயானு கேட்டாங்க மேடம் நானும் சரினு நடிக்க வந்த மேடம்.ஆனா நான சொல்றதெல்லாம் உண்மை மேடம்.எனக்கு அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் எங்கள சேர்த்து வைங்க மேடம்.


.நான்...கட் கட் .காமிரா ஆப்..என்ன சார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திட்டு உண்மையெல்லாம் பேசிட்டு..சரி பரவாயில்ல  நம்ம எடிட்டர் நல்லா எடிட் பண்ணி தொகுத்து வழங்கிடுவார்..நீங்க போகலாம்..என்ன நேயர்களே.இன்றைய நிகழ்ச்சி பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.அடுத்த வாரம் இதே போல சந்திப்போம்..வணக்கம்..

Tuesday, November 14, 2017

Enninaivugalin e pathivu stories

*ஒரு நாள் வழக்கம்போல நான் ஜாகிங் செய்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.*
அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.

சட்டென்று மனதில் ஒரு எண்ணம். *அவரை முந்திக் கொண்டு* ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல்.

என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள்  தாண்ட வேண்டும்.
அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.

மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 100 அடிகளே இருந்தன. *என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.* இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி *அவரைப் தாண்டி விட்டேன் கடைசியில் !* உள்ளுக்குள் ஒரு பெருமிதம் !

‘அப்பாடி, முந்தி விட்டேன்!’

பின்னால் திரும்பிப் பார்த்தேன்.
*அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார்.* *அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!*

*_சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!_*

அவரைத் தாண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு  மூன்று தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.

இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.

இதேபோலத்தான் நம் வாழ்விலும் சில சமயம் நடக்கிறது !

நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது !

நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள், புகழ் பெற்றவர்கள  என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம்.
*_நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்._* *~நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.~*

இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.

~எப்போதுமே நம்மைவிட சிலர் முன்னால் இருப்பார்கள்.~
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் முடிந்த அளவு நல்லவர்களாக இருந்தாலே நம்மால் சிறப்புடன் இருக்க முடியும், ~யாருடனும் போட்டி போடாமலேயே!~

*'எல்லோரையும் துரத்துவதே வாழ்க்கை'* என்று நினைத்து சொந்த வாழ்க்கையை தொலைக்காமல் இருப்போம்❗விதியை மாற்றியமை !!!



ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார்.

அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை" காண்பித்தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.


ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டர் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.

Tuesday, October 31, 2017

Enninaivugalin e pathivu--mangalam song keyboard notes


Ramachandraya janaka       rajaja      manoharaya
G G G G A           G F#      G A B C      B A G G

maamakaabhishta daaya mahitha mangalam
G   A    G    E   C    E      D D   D   D    E  A   G

kosaleshaya manda hasa dasa poshanaya
G G G G A    G F# G A   B C B  A  G 

vasavaadi vinutha  sadwaraaya mangalam
G A G F#  E F# E D   D D D D  E A G 

Chaarumegha Roopaaya Chandanaadi Charchitaaya
G G G G A    G C     G  A B       F#  F A G G 

Haarakataka Shobitaaya Bhoori Mangalam  
G A G G F# E  F# E D    D D     E A G 

lalitharathna kundalaya thulasi vana maalaya
G G G G A    G C     G  AF       F#  F A G G 

Jalaja sadrusa dehaya charu mangalam
G A G G F# E  F# E D    D D     E A G 

Devaki Suputhraaya Deva Devottamaaya
G G G G A    G C     G  AF F#  F A G G 

Bhaavaja Guruvaraaya Bhavya Mangalam
G A G G F# E  F# E D    D D     E A G 

Pundarikaakshaya Poornachandra Vadanaaya
G G G G A    G C     G  AF       F#  FAG G 

Andaja Vaahanaaya Atula Mangalam
G A G G F# E  F# E D    D D     E A G 

vimalaroopaaya vividha vedanta vedyaaya
G G G G A    G C     G  AF       F#  FAG G 

bhutachitta kaamithaaya subhada mangalam
G A G G F# E  F# E D    D D     E A G 

ramadaasaya mrudula hridaya kamala vaasaaya
G G G G A    G C     G  AF       F#  FAG G 

Swami bhadra giri varaya sarva mangalam 
G A G G F# E  F# E D    D D     E A G 

Saturday, October 28, 2017

Enninaivugalin e pathivu--my song for varahi amman

வருவாய் வருவாய் வராஹியே
வந்தருள் புரிவாய்  வராஹியே

அனுதினம் வருவாய் வராஹியே
அனுக்ரஹம்செய்வாய் வராஹியே

சரணம் அடை ந் தாே ம் வராஹியே
செ ள பாக்கியம் அருள்வாய் வராஹியே

வரமளித்தருள்வாய்  வராஹியே
வணக்கம் தாயே வராஹியே

பாடிப் பணிந் தாே ம் வராஹியே
பஷமுடன் வா வராஹியே

கூடித் துதிக்கின் றாே ம் வராஹியே
குறை களை தீர்ப்பாய் வராஹியே

பள்ளி கரணையேதேடி வந் தாே ம்
திருச் சந்நதி முன் கூடி நின் றாே ம்

திருப் புகழ் தன்னை பாடுகின் றாே ம்
திருவடி நாடி பணிகின் றாே ம்

Saturday, October 14, 2017

Enninaivugalin epathivu.....story

*





*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.

-படித்ததில் பிடித்தது.

நசிகேதன்*

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு, நம் வாழ்வில் நடந்துவிட்டது. மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது. மரணம் என்றால் என்ன? அப்போது மனிதனுக்கு என்ன நேர்கிறது? அதன் பின் அவன் என்ன ஆகிறான்? இதுபோன்ற கேள்விகள் எல்லா காலகட்டத்திலும் எழுந்து வந்திருக்கின்றன. விடைகளுக்கான தேடலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது.

*சிறுவனின் கேள்வி*

வேத காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடைய புதல்வன் நசிகேதன். வாஜசிரவஸ் இவ்வுலகையே ஆளும் பேரரசன் ஆக விருப்பம் கொண்டார். அந்தப் பலனைத் தரும் விசுவஜித் என்ற யாகத்தைச் செய்தார். விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது நிறைவேற வேண்டுமென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான் அனைத்தும் உரிமையாக இருக்க முடியும்.

நிபந்தனைப்படி வாஜசிரவஸ் அனைத்தையும் தானம் செய்தார். ஆனால், தனக்கு உதவாதவற்றைத் தானம் என்ற பெயரில் கொடுத்தார். உதாரணமாக அந்நாட்களில் பசுக்களின் எண்ணிக்கையே ஒருவரின் செல்வச்செழிப்பை நிர்ணயிக்கும். எனவே, பசுவைத் தானம் செய்வது சிறந்தது. இவரோ, மரணத்துக்காகக் காத்திருக்கும் கிழப் பசுக்களைத் தானமாக அளித்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் இரட்டைத் தவறுகள் செய்தார்.

அவருடைய மகன் நசிகேதன் அனைத்தையும் கவனித்தான். தந்தையிடம் சென்று, “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். சிறந்தவற்றைத் தானம் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக மூன்று முறை கேட்டான். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

*எமலோகப் பயணம்*

தந்தை கோபத்தில் சொல்லி இருந்தாலும், அவர் சொன்னபடி எமனிடம் போக வேண்டும் என்று நசிகேதன் தீர்மானித்தான். இம்முடிவைத் தன் தந்தையிடம் கூறினான். அவர் தான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை எண்ணி வருத்தமுற்றார். அவருக்கு ஆறுதல் கூறிய நசிகேதன், “வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடி கொடிகளைப் போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே, நான் எமலோகம் செல்வதைப் பற்றிக் கலங்க வேண்டாம்” என்றான்.

நசிகேதன் எமலோகத்தை அடைந்தபோது, எமன் அங்கு இல்லை. எனவே, எமனின் மாளிகையின் முன் மூன்று நாட்கள் காத்திருந்தான். எமன் வந்ததும் மந்திரிகள் மூலம் செய்தி அறிந்தான். நசிகேதனை நோக்கி, “விருந்தினரான நீ மூன்று நாட்கள் உணவின்றித் தங்க நேர்ந்தது நான் செய்த குற்றம். அப்பழியைப் போக்க, என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்” என்றான்.

*நசிகேதனின் மூன்று வரங்கள்*

நசிகேதன் தெளிவான மனதுடன் எமதர்மனை நோக்கி, “உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை, என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் அற்றவராய் என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான். எமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்று வரம் தந்தான்.

அதன் பின் நசிகேதன், “எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப் பற்றிச் சொல்வாயாக. இதுவே எனது இரண்டாவது வரம்” என்றான்.

எமதர்மன், “நசிகேதா, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றிச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள். சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம், அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றான்.

யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தான். நசிகேதன் அழகாய்ப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்லவும், எமதர்மன் அகமகிழ்ந்தான்.

அந்த யாகம் நசிகேத யாகம் என்றே இனி விளங்கும் என்றான். மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினான்.

நசிகேதன், “மரணத்துக்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே” என்றான்.

*மரணத்துக்குப் பிறகு*

எமதர்மன் ,“நசிகேதா, நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள். பூமியில் உள்ள எல்லாச் செல்வங்களையும் அரசையும் கேள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துகொள். மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்றான். நசிகேதன் தெளிவாக, “உலகின் இன்பங்கள் நிலையற்றவை. ரகசியமாய் வைக்கப்பட்டுள்ள இவ்வுண்மையை நான் அறிய வேண்டும் . வேறு எந்த வரமும் வேண்டாம்” என்றான்.

எமதர்மன் நசிகேதனின் மன உறுதியில் அக மகிழ்ந்து, “நசிகேதா, உண்மையை அடைவதில் உறுதியாய் இருக்கும் உன் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்கான மந்திரம் ‘ஓம்’ ஆகும். உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். பொதுவாக மரணம் என்று குறிப்பிடப்படுவது உடம்பின் மரணம் மட்டுமே. உடம்பின் மரணத்துக்குப் பின்னரும் ஆன்மா வாழுகிறது. ஆன்மா பிறப்பற்றது; நிலையானது; அழியாதது” என்றான்.

மேலும், “மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும் பெற்ற பிறவியும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.”

*ஆன்ம அனுபூதி*

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம். உணர வேண்டியது. இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்.

மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்”-இவ்வாறாக எமதர்மன் தனது உபதேசத்தை நிறைவு செய்தான்.

இதைக் கேட்டு, பின்பற்றிய நசிகேதன் மரணமற்றவன் ஆனான். சிரத்தையுடன் தேடுதல் செய்து, கண்டடைந்தவற்றைத் தெளிவாய் உணர்ந்து, வழுவாமல் பின்பற்றினால் அனைவரும் நசிகேதன் ஆகலாம்.


அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-

நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,

“அன்பு என்றால் இது தான்"

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!

 அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!

Monday, October 9, 2017

Enninaivugalin epathivu...story

அமெரிக்காவை அலற வைத்த அப்துல் ஹமீது.!

1965-ல் நடந்தஇந்தியா,பாக் போர், டாங்கிகளிடையே நடந்த தாக்குதல்களுக்குப் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 471 பேட்டன் டாங்கிகள் அழிக்கப்பட்டு, பலது கைப்பற்றப்பட்ட சம்பவம் உலக இராணுவ வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

போர்முனையில் நடந்த அனைத்து மோதல்களிலும் 'அசல் உத்தர்' என்று குறிப்பிட்ட தாக்குதல் மிகப் பிரசித்தி பெற்றது. அத்தாக்குதலின் எதிரொலியாகவே பாகிஸ்தானின் பல பேட்டன் டாங்கிகள் கைப்பற்றப் பட்டன. போரில் சிதைக்கப்பட்ட டாங்கிகள் பல, போர் முடிந்த பின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தார்ன் தரன் (Tarn Taran) மாவட்டத்தில் உள்ள கேம்கரண் என்ற ஊரில் குவிக்கப்பட்டன. 'பாக் டாங்குகளின் கல்லறை' என்றும், 'பேட்டன் நகர்' என்றும் அந்த ஏரியாவுக்குப் பெயர் சூட்டி, இந்திய இராணுவத்தினரின் வீரத்துக்குச் சாட்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
யுத்தத்தில் 'அசல் உத்தர்' என்றால்... அது அசல் தியாகிகளின் சாதனையாகத்தானே இருக்க முடியும்? இங்கேயும் இருந்தார் ஒரு தியாகி... அவர்தான் ஹவில்தார் அப்துல் ஹமீது. அவருடைய வீரத்தாக்குதல்தான் போரின் திசையையே மாற்றி விட்டது. எது பாகிஸ்தானின் வலிமை என்று அவர்கள் இறுமாந்திருந்தார்களோ... அதைத் தகர்த்தெறிந்தவர் ஹவில்தார் அப்துல் ஹமீது!

அவருடைய மிக நுணுக்கமான பார்வை, படுதந்திரமான தாக்குதல் முறை, பாகிஸ்தானை மட்டுமல்ல... அமெரிக்காவையே அலற வைத்து விட்டது.
மாவீரன் அப்துல் ஹமீது, ஜூலை 1, 1933 அன்று உத்திரப்பிரதேச மாநிலம், தாமுப்பூர் என்ற கிராமத்தில் உஸ்மான் ஃபரூக்கி என்ற ஓர் ஏழை போலிஸ்காரரின் மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின், இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். 1954-ம் ஆண்டு கிரெனெடியர்ஸ் படைப் பிரிவில் சேர்க்கப் பட்டு, பதவி உயர்வு பெற்று, ஹவில்தார் (ஏட்டு) அந்தஸ்தில் அவர் பணி புரிந்து வந்த நிலையில்தான் 1965-ல் யுத்தம் வெடித்தது. பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த முதல் சிறப்பு ஆயுதப் படைப் பிரிவின் திட்டம் - பஞ்சாப் மாநிலத்தின் தார்ன்தரன் மாவட்டத்தின் உள்ளே ஊடுருவித் தாக்கி, தங்கள் பேட்டன் டாங்கிகளின் வலிமையினால் விறுவிறுவென முன்னேறுவது! அமெரிக்காவின் பெருமைக்குரிய தயாரிப்பான பேட்டன் டாங்கிகள் பலநூறு அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரம் போர்வீரர்களுடன் தாக்குதலை ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சரியாகச் சொல்வதானால், 'அசல் உத்தர்' என்ற அந்த சாதனைத் தாக்குதல் செப்டம்பர் 6-ம் தேதி அரங்கேறியது. அப்துல் ஹமீது பங்கு பெற்றிருந்த கிரெனெடியர்ஸ் பிரிவு முதலில் நடுங்கித்தான் போனது. பாகிஸ்தான் இராணுவ பேட்டன் டாங்கிகள் அப்படியொரு குண்டு மழை பொழிந்தன. எங்கும் வெடிச்சத்தம் பயங்கரமாக எதிரொலித்தது. நமது படையினரால், பழைய ஷர்மன் டாங்கிகளைக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கேம்கரண் டவுன் பாகிஸ்தான் படையின் வசமானது. எதிரிப் படையினர் மெதுவாக கேம்கரணிலிருந்து சீமா கிராமத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். நிலைகுலைந்து போயிருந்த நம் படைவீரர்களுக்கு உற்சாகம் தரும் குரலாக ஒலித்தது அப்துல் ஹமீதின் அழைப்பு! "ம்... ம்... வாருங்கள்... அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தாக்குதலைப் பதிலடியாகத் தரப் போகிறோம்" என்று கூறிக்கொண்டே தம் ஜீப்பில் ஏறிப் பாய்ந்தார் ஹமீது. சற்றுத் தயக்கத்துடன்தான் பின்தொடர்ந்தனர் அவரது படைப்பிரிவினர்.

புராணக் கதைகளில் நாம் கேட்டிருப்போம் - எத்தனை பெரிய வீரனுக்கும் எங்கேனும் ஓரிடத்தில் பலவீனம் இருக்குமென்று! கிருஷ்ணனுக்குக் கால் விரலில், கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்குக் குதிகாலில் என்றெல்லாம் உதாரணங்கள் உண்டு. சர்வ வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு பேட்டன் டாங்கிகளுக்கு அந்தப் பலவீனம் அவற்றின் பினபுறத்தில் இருந்தது. அவற்றின் பினபுறத் தடுப்புத் தகடு அத்தனை உறுதியாக இல்லாமல், மெல்லியதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பலவீனத்தை எப்படியோ கண்டறிந்து விட்ட அப்துல் ஹமீது, அந்த டாங்கிகளைப் பின்புறமிருந்து தாக்கத் திட்டமிட்டார்.

எதிர்பார்த்தபடியே பின்புறம் போயும் ஆயிற்று... "ட... ட... ட... ட...டுமீல்!" பயங்கர சத்தத்துடன் பேட்டன் டாங்கி வெடிக்கிறது. அத்தனை நவீன டாங்கி, இப்படி 'பிஸ்கோத்து'த் துப்பாக்கித் தோட்டாவுக்கே வெடித்து விடுகிறதே எனத் திகைத்துப் போகிறார்கள் நம் வீரர்கள். ஹமீது மீண்டும் சுடுகிறார்.
"ட... ட... ட... ட...டுமீல்!" இன்னொரு டாங்கி அவுட்.

இப்படியே 9 பேட்டன் டாங்கிகளைத் தனி மனிதராகச் சுட்டு அழித்தார் ஹமீது.
எதிரிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். டாங்கிகளை மெதுவாக ரோட்டை விட்டு வயல் வெளியில் இறக்கி அப்படியே பின்வாங்க நினைத்தனர்.
அமெரிக்காவின் ஆயுத நவீனத்தனத்தை நினைத்து நினைத்து அந்த டாங்கிகளை அதுவரை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு, இப்படி அவற்றைக் கொசு போலத் தனி மனிதராக அப்துல் ஹமீது நசுக்கியது ஏகமாகவே உசுப்பிவிட்டது. இழந்த நம்பிக்கையை முழுதாகத் திரும்பப் பெற்றவர்களாக ஆக்ரோஷத்துடன் தாக்குதலைத் தொடர்ந்தனர் அவர்கள்.

இந்திய இராணுவத்தால் அந்த இடத்தில அழிக்கப்பட்ட 97 பாகிஸ்தானிய டாங்கிகளில் 9 டாங்கிகள் அப்துல் ஹமீது என்ற தனி ஒரு வீரனால் அழிக்கப்பட்டது.

திரும்ப எத்தனித்து வயல்வெளிகளில் இறங்கிய பேட்டன் டாங்கிகளோ, சேற்றில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தன. பதில் தாக்குதலைத் தொடர்ந்த இந்தியப் படையினர் கோழியை அமுக்குவது போல் அவற்றைச் சுற்றி வளைத்துப் பிடித்து அழித்தனர்.

ஆனால், அப்துல் ஹமீது என்ற அந்த மாவீரனின் வீரத் தாக்குதல் வெகுநேரம் நீடிக்கவில்லை. பின் வாங்கி ஓடிய பாகிஸ்தான் படையினரின் பீரங்கித் தாக்குதலில், உடல் துளைக்கப்பட்டு அவர் வீர மரணமடைந்தார்.

தமது தனி மனித வீரதீரத்தால், ஒரு யுத்தத்தின் நிலையையும், ஒரு நாட்டின் சரித்திரத்தையும் தம் உயிரைக் கொடுத்து மாற்றி எழுதி விட்டார் அப்துல் ஹமீது. வீரத் தியாகியான அப்துல் ஹமீதுக்கு பாரத நாட்டின் உயரிய வீரப்பதக்கமான 'பரம்வீர் சக்ரா' வழங்கப்பட்டது.அமெரிக்கா பேட்டன் டாங்கி தயாரிப்பை 1966ல் முற்றிலுமாக நிறுத்தியது.!இந்த வரலாற்று தோல்வியை பார்த்து கொண்டிருந்த ஒரு இளம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பின்னாளில் ஆட்சியை பிடித்தார்.அவர் பர்வேஷ் முஸ்ரப்! அந்த வெஞ்சினம் கார்கிலில் வெளிப்பட்டு தோல்வியை தழுவியது வரலாறு.

அப்துல் ஹமீதுக்கு இந்திய அரசு பரம் வீர் சக்ரா விருது அளித்து பெருமைப்படுத்தியது.

ஜெய்ஹிந்த் அப்துல் ஹமீது.
இந்த மாவீரனின் வீர வரலாற்றை முடிந்தால் ஷேர் பண்ணுங்க.
🇮🇳ஜெய்️ஹிந்த் 🇮🇳
️🇮🇳வந்தே️ மாதரம்🇮🇳️

-இந்திய இராணுவச் செய்திகள்.*


செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்ற முருகன் பாட்டு*

ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்”
என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

அதை தகும் என்றும் , முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

இப்படி .....

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே "

*செரு* என்றால் போர்க்களம்.
*செருப்புக்கு* என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
*விளக்குமாறு* என்பதற்கு விளக்கம் , சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!

Tuesday, August 8, 2017

Enninaivugalin epathivu---message

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’ என்றழைத்த மகனின் முதல் சொல்லிலேயே, 'ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது!’ என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு மழை வருமாட்டு இருக்கு மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’ என்று சொன்ன பாட்டி வானிலை அறிவியல் படித்தது இல்லை.

'ஆடிப் பட்டம் தேடி விதை’ என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ எனப் பாடிய தேரன் சித்தர் மைக்ரோபயாலஜி தேர்வுகளில் தேறியது இல்லை.

'செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்’ எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு, 60 ஆடுகளில் இரண்டை மட் டும் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக் கணக்கிடுகிறார்கள்? அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்? இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?  ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு. வள்ளுவன் சொல்லும் மெய்ப்பொருள் காணும் அறிவும், பாரதி சொன்ன விட்டு விடுதலையாயிருந்த மனமும் சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்துவருகிறோம்.

'மம்மி எனக்கு வொயிட் சட்னிதான் வேணும், க்ரீன் சட்னி வைக்காதே சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது, 'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது. ஏனென்றால், சொல்லித் தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும் அவசரங்களும் தொலைத்தவைதான் அந்த அனுபவப் பாடம்!

தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து 'புரோட்டின், கலோரி, விட்டமின்’ பற்றிய ஞானம் பெருகிய அளவுக்கு,  'கொள்ளும் கோழிக் கறியும் உடம்புக்குச் சூடு; எள்ளும் சுரைக் காயும் குளிர்ச்சி. பலாப் பழம் மாந்தம். பச்சைப் பழம் கபம். புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

'அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது இந்த தெர்மாமீட்டர்ல உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை, வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?
'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா, 'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’ என்று அக்கறை காட்டும் அப்பா.

'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’ என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

'வயிறு உப்புசமா இருக்கா? மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணிவிட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’ என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது, வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே? குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக் கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக்கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக் கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா? 'பிள்ளை-வளர்ப்பான்’!

'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க. மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்,
மூட்டு வலிக்கு முடக்கத் தான் அடை,
மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,
குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,
வயசுப் பெண் சோகைக்குக் கம்பஞ்சோறு,
வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாழைத்தண்டுப் பச்சடி’ என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும் சில நேரம் மருந்துகள்; பல நேரம் மருத்துவ உணவுகள்.

காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

சுழியத்தைக் (ஜீரோவை) கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

'பை’ என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

'ஆறறிவதுவே அதனொடு மனமே’ என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன தொல் காப்பியம் எழுதிய ஊர் இது.

இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?

Tuesday, August 1, 2017

En ninaivu galin e thathivu--english story

*UBUNTU* -

UBUNTU IS a very nice story from Africa ...

The motivation behind the Ubuntu culture in Africa ...

An Anthropologist proposed a game to the African tribal children ...

He placed a basket of sweets near a tree

And made the children stand 100 metres away.

Then announced that whoever reaches first would get all the sweets in the basket.

When he said 'ready steady go!' ...

Do you know what these children did?

They all held each other's hands, ran together towards the tree, divided the sweets equally among themselves, ate the sweets and enjoyed it.

When the Anthropologist asked them why they did so,

They answered 'Ubuntu'.

Which meant -
_'How can one be happy when the others are sad?'_

Ubuntu in their language means -
_'I am because we are!'_

A strong message for all generations.
Let all of us always have this attitude and spread happiness wherever we go.

Let's have a *_Ubuntu_* Life ...

I AM BECAUSE WE ARE.

Monday, July 17, 2017

Enninaivugalin e thathivi---super msg...bird

ஆகாய ஆச்சரியம்.!
🐦
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?

அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

#நம்பிக்கைதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதையொன்றில் 1990களில் இந்திய  தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் ஒருவர் ஊர் ஊராக சென்று தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான பணியை  மேற்கொண்டு வந்தபோது அப்பொறியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது என்னவென்றால் போகும் இடமெல்லாம் கேபிள் போடுவதற்கு  மண்ணை தோண்டி தருவதற்காக ஒரு வேலையாள் நிரந்தரமாக வேண்டுமென்பதே.. அதனால் அப்பொறியாளர் ஒரு முடிவுக்கு வந்தார். வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பர போர்டு வைப்பது. இதுபற்றி அவர் தனது நண்பனிடம் தெரிவித்தவுடன் அவர் நண்பன், கவலைபடாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம். அதை நம்பி அப்பொறியாளரும் இரவு தூங்குவதற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பொறியாளர்  கடைத்தெருவிற்கு சென்றபோது அனைவரும் அவரை பார்த்து கிசுகிசுத்தவாறே சிரித்துள்ளனர். இதை கவனித்த பொறியாளர் பிறகு தனது நண்பன் வைத்த விளம்பர போர்டை பார்த்துதான் மக்களின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொண்டாராம்... அப்படி என்னதான் அந்த விளம்பர போர்டில் இருந்தது என்கிறீர்களா...???

"கூடவே இருந்து குழிதோண்ட ஆள்தேவை - இப்படிக்கு தொலைத்தொடர்பு அதிகாரி" 😂😂😂😂
#படித்தது            படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள்!
***************************

ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு.
ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த
குருவி ஒண்ணு,முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து,'ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு
பொறிச்சிக்கிடட்டுமா?'ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு.
ஆனா அந்த மரம்,'அதெல்லாம் முடியாது' னு கண்டிஷனா சொல்லிருச்சு.
சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி.
இடம்தானே..தாராளமா இருந்துக்கோ' னு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம்.
ஒரே மாசம்தான்...... ஆத்துல வெள்ளம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது.அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது.
ஆனா,குருவிக்கு இடம் கொடுத்த 2வது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது.
முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி,' அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார்'னு
எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது.
ஆனா,வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா.....
'என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும்...நீயும் என்னோட சேர்ந்து சாகவேண்டாம்'னு தான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்...
ஏ குருவியே! நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும்!' என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது.
அன்பு நண்பரகளை.
இப்படி தான் உண்மையான தியாகிகள் வெளி உலகத்துக்குத் தங்களை காட்டிக்கறது இல்லை!"
நமக்காக தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு; நம் மகிழ்ச்சிக்காக நம்மையே தியாகம் செய்யும் உறவுகளும் உண்டு!
மகன் மகிழ்ச்சிக்காக தனிக்குடித்தனம் அனுப்பும் பெற்றோர்களும்; மகள் மகிழ்ச்சியாக வாழ கடன்பட்டும்கூட
சீர்செனத்தி செய்யும் பெற்றோர்களும்,
சகோதரர்களும்கூட தியாகிகள் தான்!
சிலசமயம் அவர்கள் நம்மைக் கைவிடுவது போலத் தோன்றினாலும் ,
அது நம் நன்மைக்காகவே இருக்கும்!
ஆனால் கண்டிப்பாகத் தீமைக்காக இருக்காது!

#படித்ததில்_பிடித்தது!

Tuesday, June 27, 2017

enninaivugalin e pathivu---hindi lessions..



come+ing=coming

आ + रहा = आरहा

MALE

मैं  आ  रहा  हूँ

तुम  आ  रहे  हो

वह  आ  रहा  है

यह  आ  रहा  है

राम  आ  रहा  है


male plural

हम  आ  रहे  हैं

आप  आ  रहे  हैं

वे  आ  रहे  हैं

ये  आ  रहे  हैं

लड़के   आ  रहे  हैं


female singular

मैं  आ  रही  हूँ

तुम  आ  रही  हो

वह  आ  रही है

यह  आ  रही है

सीता  आ  रही है

female plural

हम  आ  रहीं  हैं

आप  आ  रहीं  हैं

वे  आ  रहीं  हैं

ये  आ  रहीं  हैं

लड़कियाँ  आ  रहीं  हैं



PAST TENCE


मैं  आती थी

तुम  आती थी

यह  आती   थी

वह  आती   थी

सीता  आती   थी



PLURAL

हम  आती थीं

आप  आती थीं

वे  आती थीं

ये  आती थीं

लड़कियाँ  आती थीं


मैं  आता  था

तू   आता  था

यह  आता  था

वह   आता  था

राम  आता  था

हम   आते  थें

आप   आते  थें

वे   आते  थें

ये   आते  थें

लड़के   आते  थें


मैं  आ  रहा  था

तुम  आ  रहे  थे

वह   आ  रहा  था

यह   आ  रहा  था

राम   आ  रहा  था


pural 

हम  आ  रहें   थें

आप  आ  रहें   थें

वे  आ  रहें   थें

ये  आ  रहें   थें

लड़के  आ  रहें   थें





मैं    आ ऊँगा

तुम   आओगे

वह   आएगा

यह   आएगा

राम    आएगा

हम  आ  येंगें

आप  आ  येंगें

वे  आ  येंगें

ये  आ  येंगें

लड़कें  आ  येंगें

हम     आ रहेंगे

तुम  आ रहोंगे

वे   आ   रहेंगे

ये    आ  रहेंगे

लड़कें    आ रहेंगे





मैं  आ ऊँगी

तुम  आ  आओगी

यह  आ येंगीं

वह   आ येंगीं

सीता  आ येंगीं




मैं   आ रहुँगी

तू  आ  रहेंगीं

वह   आ रहेंगीं

यह  आ   रहेंगीं

लड़कियाँ   आ   रहेंगीं
























































Sunday, March 12, 2017

En ninaivugalin e pathivu---Humore club kavithai...


 சூரியனின் சூடு பட்டு
 பூமியில் வேர் விட்டு
 உலகை அழகாக்கும் சோலை போல

  காலங்களின் சூடு பட்டு
  கடமைகளில் வேர் விட்டு
  மனதை மகிழ்விக்கும் ஒவ்வொரு
 மாதாந்திர கூட்டங்களும்

                                                                                               மறுப்பதற்கில்லை            


நல்லெண்ணெய் சேர்த்தால்
 இதயத்திற்கு நல்லது.
.நல்லெண்ணங்களை சேர்பதால்
இதயமே நல்லது என்ற
 தெளிவை ஏற்படுத்துகிறார்கள்                   மறுப்பதற்கில்லை.....            



செய்ய விரும்புவதை  செய்வது
 மட்டும் சுதந்திரமில்லை
 செய்ய விரும்பாததை செய்யாமல்
 இருப்பதுவும் சுதந்திரமே....        
 சமூக சூழல் எப்படி இருந்தாலும்
 தரம் தாழாமல் சுதந்திரமாக
இவ்வமைப்பு நடத்தப் படுகிறது...

                                                                                                      .மறுப்பதற்கில்லை
 கடமை என்ற மூன்றெழுத்தில்
 இம் மும்மூர்த்திகளின் மூச்சிருக்கிறது.
அதனால் வெற்றி மேல் வெற்றி
 வந்து சேர்கிறது..ஆனால் கிடைத்த
 வெற்றியின் பெருமை
 உறுப்பினரையே சேரும் என
 அவர்கள் கூறுவதில்
 பெருந்தன்மை இருக்கிறது.
EGO..வை ..YOU GO...என துரத்திவிட்டவர்கள் .

                                                                                                       ..மறுப்பதற்கில்லை...        

  விட்டில் பூச்சியாக சேரும் உறுப்பினர்களையும்
 நிகழ்ச்சிகளில்  பங்கு பெற வைத்து
 விமானமாக்கி  விடுவார்கள்....
                                                                                                           .மறுப்பதற்கில்லை...          1983 ஆம் ஆண்டு குறைந்த உறுப்பினருடன்
  தொடங்கப்பட்டு  இன்று  1800க்கும்
 மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.
..இவர்களின் உழைப்பின் வியர்வையால்
  வியர்வை வேர் வைக்கப் பட்டிருக்கிறது...
                                                                                                         .மறுப்பதற்கில்லை            
  பெற்றோரையும் பெரியோரையும் மதிப்போம்..
.நமது எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு உதவுவோம்
 என்று இவ்வாண்டு   ஆக கொண்டு
34 வது ஆண்டு விழாவை எதிர் நோக்கி
விருட்ஷமாக வளர்ந்திருக்கிறது.
 நம் பெருமைக்குரிய அமைப்பு..
                                                                                                               
                                                                                                             .மறுப்பதற்கில்லை  


இவ்வமைப்பு மேன் மேலும்
 சீரோடும் சிறப்போடும் பெருமை பெற
உறுப்பினர்களின் சார்பில் வாழ்த்துகிறேன்...


                                                                                                         
.                                                                                                              வே .முத்துலெட்சுமி