Wednesday, January 2, 2013

enninaivugalin e-pathivu en manathai urukkiya kavithai



தாய் மண் வாசம் தேடும் என் சுவாசம்
திரும்ப நான் போவேனா
என் ஆயுள்ரேகை
அழிந்து சாவேனா
இன்னொரு முறை என் சொந்த மண்ணை
மீண்டும் பார்ப்பேனா
மறுபடியும் நான அங்கு செல்கிற போதும்
முன் போல் சிரிப்பேனா
என்னை விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம்
நினைவில் சுடுகிறது
நெருப்பில் விழுந்த புல்லாங்குழலாய்
நெஞ்சம் எரிகிறது
கூர் நகம் கொண்ட எமன் எங்கள்
கூட்டை குதறியது
நினைவைத் தவிர வேறென்ன மிச்சம்
கனவும் கசக்கிறது
கண்ணெதிரில் உயிர் பிரிந்தவர் முகங்கள்
கனவில் அழுகிறது
கதறிய அவர்களின் கடைசிக் கூக்குரல்
காற்றில் அலைகிறது




நிம்மதி சூழ்க
ஜென்ம்ம் நிறைத்த்து
சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும்
கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க...
ஜன்னமும் பூமியில்
புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை
இரண்டு மில்லாவிடில்
இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணை தான்
ஞானத்தின் எல்லை
பாசம் உலாவிய
கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய
கைகளும் எங்கே?
நேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்ட தென்றது
சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்த்து
காற்றுடன் போக
மண்ணில் பிறந்த்து மண்ணூடன் சேர்க
எலும்பு சதை கொண்ட
உருவங்கள் போக எச்சங்களால் அந்த
இன்னுயிர் வாழ்க
பிறப்பு இல்லாமலே
நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும்
நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும்
நினைவுகள் தொல்லை
ம்றதியைப் போல் ஒரு
மாமருந்தில்லை
கடல் தொடும் ஆறுகள்
கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள்
அழுவதுமில்லை
நதி மழை போன்றதே
விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர்
மயங்குவதென்ன..
மரணத்தினால் சில
கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில
சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாத்தை
மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில்
செடி வந்து சேரும்
பூமிக்கு நாமொரு
யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது
நியதி என்றாலும்
யாத்திரை என்பது
தொடர்கதை ஆகும்
தென்றலின் பூங்கரம்
தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி
தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி
செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன்
வாழ்ந்திடக் கூடும்.
மாண்டவர் சுவாசங்கள்
காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி
சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும்
பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம்

எம்முடன் சேர்க....




விரிவதெல்லாம் வானமில்லை
கற்பிப்பதெல்லாம் கல்வியுமில்லை !நதி கடலாக முடியாதுகடலில் கலக்கலாம் ! உயிர்கள் இறைவனாக முடியாது
அவனோடு கலக்கலாம் !என்னால் நான் கொண்ட துயரத்தை
நின்னாலன்றித் தீர்க்க
என்னால் ஆகுமோ ?சூரியனுக்கு இருளைத் தெரியாது
அறிவுக்கு அறியாமையைத் தெரியாது
உன் மனத்தால் ஏற்பட்ட தளைகளை விட
வேறெந்த தளைகளால்
உன்னைக் கட்ட முடியும் ?தூக்கம் என்னவென்று தெரியாது
ஏன் தூங்க வேண்டும் ?விழிப்பு என்னெவென்று தெரியாது
ஏன் விழித்திருக்க வேண்டும் ?பிறப்பு என்னவென்று தெரியாது
ஏன் இறக்க வேண்டும் ?இருக்கும்இடத்தை விட்டு
அங்கு இங்கு நகராமல்
காலத்தின் பின்னே செல்ல வேண்டுமா ?இசையைக்கேள் !மனிதன் விடுதலை பெற வேண்டியது
தன்னிடமிருந்துதான் !எடுத்தது பிறப்பில்லை
காத்திருக்கும் இறப்பு !உன் விளக்கத்தை உன் விளக்கமே
உனக்கு உணர்த்துகிறது ! பாதையானாய் பயணமானாய்
புறப்பட்ட இடமானாய்
அடைகின்ற ஊரானாய் ! 
MARS -
க்கு போகிறாயா ? போ !எந்த உலகம் போனாலும்
உன்னைத் தொடர்வது மரணம் மட்டுமே !தலைக்கு மேலே விமானம்
காலின் கீழே மயானம் !அறிந்ததெல்லாம்
அறியாமையின் முயற்சி
அறியாததெல்லாம் அறிவிக்கு விளக்கம் !கல்வி மனிதனிடம் இல்லை
எங்கும் பரந்து கிடக்கிறது !நன்றி ;இசைஞானி இளையராஜா 
(
முல்லைச் சரம்-மே 2008)



இழந்து விட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ. 2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.


முதல் தேதியைச் சொல்லிச் சொல்லி
முப்பது நாளையும் தள்ளாதே
உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால்
முப்பது நாளும் முதல் தேதி !







No comments:

Post a Comment