இக்காலத்தில்
பணத்தின் நிலையை கவிஞர் வைரமுத்து அவர்கள் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்….
பணம்
ஒரு விசித்திர மாயமான். அது துரத்துபவனுக்கு குட்டி போட்டு விட்டு ஓடிக் கொண்டே
இருக்கும்.
குட்டிகளில்
திருப்தி அடையாத மனிதன் தாய் மானைப் பிடிக்கும் வேட்டையில் தவிக்க தவிக்க ஓடிச்
செத்துப் போகிறான்..
எவ்வளவு
அழகாக சொல்லியிருக்கிறார்…
பணம்
நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என நினைத்து அதன் பின் ஓட
முயற்சிக்கிறோம்..மாறாக பணம் நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக தேவைகளை
பெருக்கவே செய்கிறது,என்பதில் சந்தேகமே இல்லை…
மேலும்
சாதனைகளின் மடத்தனமான அளவுகோலாக நாம் பணத்தையே பயன்படுத்துகிறோம் ,ஏனெனில், பணத்தை
தான் நாம் பொதுவான அளவுகோலாக உயர்வான இடத்தில் வைத்து இருக்கிறோம்…என்ன செய்வது???
கடைசியாக
ஒன்று
பணம்
பிரித்து பார்க்கும்,பாசம் சேர்த்து பார்க்கும் என்பதை
மறந்து விடக்கூடாது….மேலும்,
பணம் பாசத்தை அறிவிக்கும் கருவியாக இருக்க வேண்டுமே
தவிர அளக்கும் கருவியாக இருக்ககூடாது…
No comments:
Post a Comment