என் கொழுந்தன் தன் நண்பர்களுடன் குற்றாலம் செல்ல இருந்தான்..தனக்கும்
தன் நண்பர்களுக்கும் சப்பாத்தி செய்து தருமாறு
என்னிடம் கேட்டான்.நானும் மிகவும் பொறுப்பாக போட்டு கொடுத்தேன்.அப்ப எனக்கு மூன்று குழந்தைகள்..கடைசி பையனுக்கு 6 மாதமே
ஆன நிலை..வீட்டிலும் உதவிக்கு ஆட்களே கிடையாது.இருந்தாலும் செய்து கொடுத்தேன்.
குற்றாலத்தில் மீதியான சப்பாதிக்களை மேலே அருவியிலிருந்து
கீழே விட்டிருக்கிறார்கள்..பாடிய படி..என்ன பாட்டு தெரியுமா?????ஓடுகிற தண்ணியில ஒருத்தன்
விட்டான் சப்பாத்திய சேர்ந்திச்சோ சேரலயோ…….(தண்ணிர் தண்ணிர் பட பாடல்)
வந்தவுடன் என் கொழுந்தன் நண்பர்கள் என்னிடம் பகிர்ந்த தகவல்
இது..இன்றும் சப்பாத்தி தயார் செய்யும் போதும்
சிரிப்பை வர வழைக்கும் நிகழ்ச்சி இது
அப்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்.எங்கள் அப்பாவின் நண்பர்கள் (சோமு,தாம்பரம் லலிதா,நளினி) எங்கள் ஊர் திலகர் வித்தியாலயா பள்ளியில் நாடகம் போட்டார்கள்…நான் அந்த பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன்..கட்டபொம்மன் நாடகத்திற்கு நடுவில் அரசபை செட்டில் மன்னர் நடுநாயகமாக அமர்ந்திருக்க, மந்திரிகள் மற்றும் பலரும் அமர்திருக்க நான் நாட்டியமாடிய நிகழ்ச்சி மறக்க முடியாத ஒன்று..மன்னவன் வந்தானடி பாடலை இன்றும் கேட்கும் போது மனதை வருடி செல்லும் நிகழ்ச்சி…

நானும் என் கணவரும் ஸ்கூட்டரிலேயே குற்றாலம் சென்றோம்….
டி.வி.எஸ் சாம்ப்…பாதி வழி அவர் ஓட்டினார்…பாதி நான் ஓட்டினேன்…நன்றாக இருந்தது..திருநெல்வேலியிலிருந்து..குற்றாலம் வரை..போகும் வழியில் பல அனுபவங்கள்..எங்களுக்கு முன் ஜக்கி வாசுதேவ் தன் மனைவியுடன் சுசுகியில் சென்றார்….ஊர் திரும்பியதும் உறவினர் திட்டினர்..இவ்வளவு தூரம் வண்டியிலேயே சென்றீர்களா???என்று…அதன் பிறகும் இரு முறை சென்றோம் ..ஆனால் யாரிடம் எங்கள் அனுபவத்தை பகிரவில்லை….
பல்வலி போக்க நினைத்தேன்
பலவலி பெற்றேன்.
பல்வலியால் பெற்ற
மனவலி பெரிது என்பதா…!!!!!!!!!
உடல்வலி பெரிது என்பதா….!!!!!
ஐயஹோ…சும்மா கிடந்த சங்கை
ஊதுவதென்பது இது தானா….
மறந்தும் நினையேன்
மறவாமல் என்னைப் படுத்திய வலிகளை…
நான் சிறுமியாக இருக்கும் போது எங்கள் வீட்டில் முதலில் பிறந்த இரு
அக்காக்கள் தவறி விட்டனர்.ஒரு அக்கா, ஒரு அண்ணன் நான் மூவரும்
இருந்தோம்.மூன்று பெண்களுக்கு பிறகு பிறந்த என் அண்ணணின்
மதிப்பை நான் கூறவும் வேண்டுமா????ஒரு நாள் அண்ணன் டிங்கு
காய்ச்சலால் இறந்து விட்டான்…அனைவரும் மிகவும் கவலையில்
இருந்தனர்..அப்போது நான் மிகவும் அழுதேனாம்..என் ஆச்சி கடை
பையனிடம் என்னை கொடுத்தார்களாம் சமாதானப் படுத்த….அப்ப நான்
தவறி கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தேனாம்…நானும்
இறந்து விட்டதாக நினைத்து என் அப்பாவிடம் கூற அவர் எனக்கும்
இறுதி சடங்கு செய்யுங்கள் என வெறுப்பாக கூறினாராம்… இப்ப என்
வயது..53.வாழ்க்கையின் ஓட்டத்தை என்ன வென்று கூற…
என் அம்மா தாத்தாவின் பெயரை எனக்கு வைத்தார்களாம்..தாத்தா
மிகவும்
உயர மாகவும்,ஆரோக்கியமாகவும் ,பார்க்க நல்லா இருப்பார்களாம்..நான்
நோச்சான் ஆட்டம் இருப்பேனாம்…என் தாத்தா என்னை
பார்க்கும்போதெல்லாம் இந்த பிள்ளைக்கு போய் என் பெயரை
வைத்திருக்கிறாயே என என் அம்மாவிட ம் புலம்பிவார்களாம்..நான்
நன்றாக டான்ஸ் ஆடும் போது, சிறப்பாக பேசும் போது என் ஆச்சி இதை
கூறி சந்தோஷப் படுவார்கள்…
என் மகன் பைக் ஓட்ட ஆசைப்பட்டான்.அப்போது அவன் வயது 12.பைக் உயரம் கூட இல்லை..அதற்குள் பைக் ஓட்ட ஆசையா? என அவன் அப்பா சொன்னதற்கு மகன் சொன்ன பதிலை இன்றும் என் பேர பிள்ளைகளிடம் பகிர்ந்து மகிழ்கிறேன்…
மகன் சொன்ன பதில்: பஸ் ஓட்டும் டிரைவர் பஸ் உயரமா இருக்கார்நான் சிறுமியாக இருக்கும் போது எங்கள் வீட்டில் முதலில் பிறந்த இரு
அக்காக்கள் தவறி விட்டனர்.ஒரு அக்கா, ஒரு அண்ணன் நான் மூவரும்
இருந்தோம்.மூன்று பெண்களுக்கு பிறகு பிறந்த என் அண்ணணின்
மதிப்பை நான் கூறவும் வேண்டுமா????ஒரு நாள் அண்ணன் டிங்கு
காய்ச்சலால் இறந்து விட்டான்…அனைவரும் மிகவும் கவலையில்
இருந்தனர்..அப்போது நான் மிகவும் அழுதேனாம்..என் ஆச்சி கடை
பையனிடம் என்னை கொடுத்தார்களாம் சமாதானப் படுத்த….அப்ப நான்
தவறி கீழே விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தேனாம்…நானும்
இறந்து விட்டதாக நினைத்து என் அப்பாவிடம் கூற அவர் எனக்கும்
இறுதி சடங்கு செய்யுங்கள் என வெறுப்பாக கூறினாராம்… இப்ப என்
வயது..53.வாழ்க்கையின் ஓட்டத்தை என்ன வென்று கூற…
என் அம்மா தாத்தாவின் பெயரை எனக்கு வைத்தார்களாம்..தாத்தா
மிகவும்
உயர மாகவும்,ஆரோக்கியமாகவும் ,பார்க்க நல்லா இருப்பார்களாம்..நான்
நோச்சான் ஆட்டம் இருப்பேனாம்…என் தாத்தா என்னை
பார்க்கும்போதெல்லாம் இந்த பிள்ளைக்கு போய் என் பெயரை
வைத்திருக்கிறாயே என என் அம்மாவிட ம் புலம்பிவார்களாம்..நான்
நன்றாக டான்ஸ் ஆடும் போது, சிறப்பாக பேசும் போது என் ஆச்சி இதை
கூறி சந்தோஷப் படுவார்கள்…
தாத்தாவின் படம் பரணுக்கு போகும் முன்பு நடந்த சம்பவம் இது..
மரங்கள் கறுப்பு உமிழ்ந்த
இரவின் அகாலத்தில்
யாரோ கோபமுடன் கத்தும்
சத்தத்தைக் கேட்டு
எல்லாரும் விழித்துப்
பார்த்தோம்.
நாங்கள் இருப்பதை அறியாமல்
கூடத்தில் பாட்டி
தாத்தாவின் படத்தை பார்த்து
சத்தம்
போட்டுக் கொண்டிருந்தாள்:
“இதற்கா இந்த எலும்புக்கா
இத்தனை ஆட்டம்?”
நன்றி ..நா.முத்துக்குமாரின் அன்னா ஆவன்னா கவிதை தொகுப்புக்கு
ஆமாம் எங்கள் வீட்டில் நடந்ததை எப்படி முத்துக்குமார் அறிந்தார்!!!!!!!!!!!!!!
அவரிடம் கேட்க வேண்டும்….
super
ReplyDelete