தும்பாவில் உள்ள rocket launching station இல் பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர்
தனது குழந்தைகளை அன்று மாலை 5:30 மணிக்கு பொருட்காட்சி பார்க்க
அழைத்து செல்வதாக கூறியிருந்தார். தனது மேலதிகாரியிடம்(BOSS) தகவல் தெரிவித்தார், அவரும் போவதற்கு அனுமதி அளித்தார்.
அந்த விஞ்ஞானி வழக்கம் போல் மதிய உணவு அருந்தி விட்டு வேலையில் ஈடு பட்டார். ஆவலோடு வேலை செய்து கொண்டே இருந்ததில் தனது
குழந்தைகளிடம் கூறிய வாக்கை மறந்துபோனார். மணி 8:30 ஆனது . தனது மேலதிகாரியை தேடினார், அவரும் அங்கு இல்லை. அதான் காலையில் கூறி விட்டோமே என்று எண்ணிக்கொண்டு வீட்டிக்கு புறப்பட்டார். குழந்தைகளுக்கு குடுத்த வாக்கை காப்பாற்றாமல் அவர்களை ஏமாற்றி விட்டோமே என்ற குற்ற உணஞ்சியோடு வீட்டிற்கு சென்றார். அங்கே அவரது மனைவி மட்டும் தனியாக செய்தி தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் எங்கே என்று கேட்க அவர்களை உங்கள் மேல் அதிகாரி பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றார் அவரது மனைவி. அந்த மேல்அதிகாரி 5:30 மணிக்கு அந்த விஞ்ஞானியை வந்து பாத்திருக்கிறார். அவர் ஆவலோடு வேலை செய்ததை பார்த்து விட்டு, இன்று இவர் புறப்பட மாட்டார் என்று எண்ணி அவரது குழந்தைகள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக அவரே சென்று குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றார்.
அந்த மேலதிகாரி வேறு யாரும் இல்லை!!.... நமது முன்னாள் ஜனாதிபதி, எளிமையின் சிகரம் DR. A P J அப்துல் கலாம் அவர்கள் தான்.

No comments:
Post a Comment