Sunday, June 17, 2012

en ninaivugalin e -pathivu -jokes

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி.. 


ஆசிரியை புதிதாகச் சேர வந்த சின்னப் பையனிடம்:
"ராஜா, நாலுக்குப் பிறகு என்ன சொல்லு"
"ஐந்து"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி, ஏழுக்குப் பிறகு என்ன வரும்?"
"எட்டு"
"சபாஷ். சரியான விடை. உன் அப்பா நன்றாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரி பத்துக்குப் பிறகு என்ன வரும் சொல்லு."
"ஜேக்"


வாழ்க்கை என்பது பூனைக்கும் எலிக்கும் இடையில் நடக்கும் ஓட்டம் போல..
அதிகமாக எலியே வெற்றிபெறும்..
ஏனென்றால் பூனை ஓடுவது பசிக்காக..
ஆனால்.....
எலி ஓடுவது உயிருக்காக...
நாம் எதற்காக ஓடவேண்டும் என நாமே முடிவெடுத்துக்கொள்வோம்...


வாழ்க்கையும் ஆசிரியரும் ஒரே போல
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.
ஆசிரியல் பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைக்கிறார்
வாழ்க்கை தேர்வை வைத்து ரிசல்ட் மூலம் பாடம் சொல்லித்தருகிறது.


டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம்.


போலீஸ்: நேத்து ராத்திரி உங்க வீட்டுல திருடினவன் எதாவது சொல்லிட்டு போனானா..?
ஒருவர்: ஆமாம் சார்.. கோண கொப்பர கொய்யா-ன்னு ஏதோ சொல்லிட்டு போனான்..
போலீஸ்: அந்த ராஸ்கலா..? அவனுக்கு நேத்து நான் ட்யூட்டி போடலியே..?இருக்கட்டும் பேசிக்கறேன்..!

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
ஆனால் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வதில்லை

கொஞ்ச நாளா ஏன் நீ *குட்நைட்* அனுப்பல???
அட்லீஸ்ட் ஒரு *ஆல்அவுட்* டாவது அனுப்பலாம்ல..
கொசு தொல்ல தாங்க முடியல...

சூரியன் எப்எம் ல வேலைக்குசேர்ந்தது தப்பா போச்சுபா..
ஏன்...
சம்பளம் கேட்டா , கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்கிறான்


இந்திய அரசு ஏன் இரண்டாவது திருமணத்தை அனுமதிக்கவில்லை?
ஏனெனில், ஒருவன் ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படக்கூடாது.




No comments:

Post a Comment