ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கவலைகளை சுவாமி சுக போதானந்தா விடம் கூறிக் கொண்டிருந்தனர். ஒருவர் என் மாமியார் என்னை வெறுத்து ஒதுக்குகிறார் என்றார், மற்றொருவர் என் நண்பனை நம்பி என் மனைவி பிள்ளைகள் ந்கைகள் எல்லாம் போட்டு பிசினஸ் ஆரம்பித்தேன். நண்பன் என்னை ஏமாற்றி விட்டான், என்றார்.
எல்லாருக்கும் பொதுவாக உங்களுக்கு பிடிக்காத போர் அடிக்கும் சினிமா பெயர் ஒன்று சொல்லுங்கள் என்றார்.
அவர்களும் ஆளாளுக்கு ஒரு சினிமா பெயர் சொன்னார்கள்.
ஒகே, நாளை காலையிலிருந்து ராத்திரி வரை இந்த சினிமா காஸெட்டை வீடியோவில் திரும்பத் திரும்ப போட்டுப் பாருங்கள் என்றார்.
ஐயையோ என்னால் முடியாது என்றனர்.
பிடிக்காத சினிமாப் பார்க்க மறுக்கும் நீங்கள் விரும்பாத அந்த உண்மை காட்சிகளை ஏன் மனத்திரையில் ஓடவிடுகிறீர்கள்.அதை மறந்து விடுங்கள்.காயம் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும். என்றார்.
கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர பாரமாக இருக்க கூடாது.
No comments:
Post a Comment