Wednesday, December 22, 2021

Enninaivugalin e pathivu

 ஆமை சொல்லும் இரகசியம் !

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்

உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்

போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த

தொழில் நுட்பம்!

தன் நுண்ணறிவால்

நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்

நிறைய.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்

நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ

வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்

சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்

போக்குவரத்தை நீரின்

ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்

தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்

கடல்படையும் போகமுடியாத பல

இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய

தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல

வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்

பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை

அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்

மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்

ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,

கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்

மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்

இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்

பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்

அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்

உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்

தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்

கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட

வழித்தடமும் ஒன்றுதான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க

இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்

ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்

தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்

உண்டு. தான் பிறந்த

இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்

பல ரகசியங்கள் இருக்கும் போல! - Krish Ram

Enninaivugalin e pathivu

 உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....!!


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே....!


அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.


பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனை பேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கே அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.


தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.


ஹிட்லர் மன்னிப்பு கோரல்

---------------------------------------

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.


‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.


முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடைய ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். puradsifmcom 


இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை” என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.


யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.


இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.

இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிட்டு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

Enninaivugalin e pathivu

 நேற்று ராத்திரி மணி எப்படியும் இரண்டு இருக்கும்...திடீர்னு ஒரு ம்யூசிக் கேட்டது..சட்டுனு தூக்கம் கலைஞ்சி போச்சி....நல்லா செம குளிர் வேற இங்க..இழுத்து போர்வை தலைலேந்து கால் வரைக்கும் போர்த்தி  படுத்துருந்தேன் திரும்ப அதே ம்யூஸிக்..அட இது நமக்கு பழக்கப்பட்ட  சவுண்ட்  ஆச்சேனு  உத்து கேட்கவும் கண்டுபிடிச்சிட்டேன் இது Candy Crush Gameசவுண்ட் ஆச்சே..அய்யோ இந்த பாதி ராத்திரில யாரு விளையாடுறா?இவரா நு யோசிக்கும்போதே ஒரு பெரிய கொறட்டை சவுண்ட் இவர்க்கிட்டருந்து அது நான் இல்லைனு எனக்கு கன்பார்ம் பண்ணினமாதிரி.....கூடவே மறுபடியும் ஏதோ கேண்டி நொறுங்கி இருக்கும் போல ஸ்வீட் அப்படினு ஒரு சவுண்ட்...இப்ப கொழப்பமே இல்ல கன்பார்ம்மா அது ஏதோ ஒன்னு தான்...பேய் பிசாசுங்களுக்கெல்லாம் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மேல எப்பவும் ஒரு ஈர்ப்பு உண்டு..ஈஸியா அவைகளை அதால் ஊடுருவ முடியும்...பேய் அங்க  இருக்குனா அந்த இடங்களில் லைட்லாம் சரியாக எரியாது...பிளிங் ஆயிட்டே இருக்கும்.....எப்பவோ ஹண்டிங் ல பார்த்த ஒரு ஸீன் நியாபகம் வேற வந்து தொலைந்தது நேரம் பார்த்து...கண்ண இருக்கி மூடிக்கிட்டேன்...


கொஞ்ச நேரம் அந்த சவுண்ட் கேட்கலை...சரி தைரியமா இவர எழுப்பலாம்னு நினைக்கும் போதே திரும்ப நிறைய்ய கேண்டிய க்ரஸ் பண்ணின சவுண்ட்..இப்ப டேஸ்ட்டினு சத்தம்...செத்தேன்..கடவுளே எப்டியாவது  அதுக்கு இருக்கிற அஞ்சி லைஃப்பும் தீர்ந்து போகனும்....அது சீக்கிரம் தோத்துப்போய் இந்த இடத்த காலி பண்ணினா போதும்னு கந்தசஷ்டி கவசம் சொல்லுவோம்னு மனசுக்குள்ளயே சொன்னா பதினைஞ்சி லைனுக்கு மேல சரியாவே வர மாட்டேங்குது அதனால என்ன திரும்ப மொதல்லேந்தே சொல்லுவோம்னு ..மறுபடியும் டிகுகுண டிகுகுண டிகுகுண லயே நிக்குது...இந்த கன்ப்யூஸ்ல அந்த சத்ததை நோட் பண்ண விட்டுட்டேன்....


என்ன பண்ணிவச்சிருக்குனு தெரில ஒருவேளை அந்த 171வது லெவல்லயே ரொம்ப நாளா ஜெயிக்காம இருக்கோம்னு நமக்காக வெளையாடி கொடுக்குதோனு  ஒரு சின்ன கரிசனம் அது மேல வந்தாலும்....நோ பேய் சகவாசம் கூடாதுனு..இப்ப வேற ஸ்லோகம் ஏதாவது சொல்லலாம்னு நினைக்கும்போதே இவர் திரும்பி படுக்கிற சவுண்ட்...இதான் சமயம் டக்குனு எழுந்துப்போம்னு நினைக்கும்போதே கேண்டி சவுண்ட்....இது கேம்ம கேன்சல் பண்ணின சவுண்ட்.....அப்பாடா வெளையாடி முடிச்சி தொலைஞ்சது..இனி போய்டும்...இப்ப நாம் எழுந்துக்க வேணாம் நம்மள அது பாதி ராத்திரில பார்த்து டென்ஷன் ஆயிடும்... இப்படியே  கொஞ்சநேரம் மூச்சு விடாம படுத்துப்போம்னு அப்டியே நானும் கொர்ர்ர்ர்ர்ர்ர்.....


காலைல....ஏண்டி உனக்கு  எத்தனை தடவை சொல்லிருக்கேன் நைட்டு தூங்கும்போது கேம் விளையாடாதனு.நீ விளையாடீட்டு அப்டியே தூ்ங்கிட்ட...நைட்டு உன் மொபைல் மேல நான் படுத்திருக்கேன் போல...ஒரே  கேம் சத்தம்...எடுத்து ஆஃப் பண்ணிட்டு படுத்தேன்...இனிமேல் மொபைல்ல படுக்கும்போது கேம் விளையாடின அவ்ளவுதான்னு சொல்லிட்டு போறாரு....


அப்டீனா அந்த டிகுகுண டிகுகுண சஷ்டி கவசத்தை பாதி ராத்திரில உங்களுக்குதான் டெடிகேட் பண்ணினேனா நானு அவர பார்த்து கேட்கவும் ..நீ யாருனு நினைச்சனு கேட்கவும்...நான் பேய்னு சொல்லவும்..இந்த வீட்டுல ஒரு பேய்க்குதான் அலவ்டுனு சொல்லிட்டு  வாஷ் ரூம்க்கு ஓடிட்டார்....


சே இவர் கொறட்டை விடும்போதெல்லாம் இவர் தொப்பைக்கு இடுக்குல என் மொபைல் மாட்டி அந்த வைப்ரேஷன் ல கேம் அப்ப அப்ப ஆன் ஆயிருக்கு...இது தெரியாம நான் பேய் மேல வேற வீண் பழி சுமத்திட்டேன்...

Monday, December 20, 2021

Enninaivugalin e pathivu

 வாழ்க்கை என்பது ஒரு வழிப் பாதை...திரும்பி போகமுடியாது..திரும்பி பார்க்கத்தான் முடியும்..எனவே மனம் போகும் போக்கில் என் நினைவுகள்........விரும்புவதே விருப்பமானவர்களுக்காக செய்வதை விட  எனக்கு மிகவும் பிடித்த பல விஷயங்களை விரும்பியவர்களுக்காக செய்யாமல் கழித்த நாள்களே அதிகம்..அந்த மன ஆரோக்கியம் அப்ப மிகுதியாக என்னிடம் இருந்தது...காலத்தின் கட்டாயத்தால் இப்ப குறைந்து விட்டதோ என்ற மனக் கலக்கம் அடிக்கடி எனக்கு தோன்று கிறது.

Thursday, December 16, 2021

Enninaivugalin e pathivu

 மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.


என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !


நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!


என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!


தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.


அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!


தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !


நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!


எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!


நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"


உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!

Tuesday, December 14, 2021

Enninaivugalin e pathivu

 முத்து இல்லம் ' என்று அழகாக பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...


" இப்போது திருப்தியா அலமேலு ! நீ நினைச்சது போல செஞ்சாச்சு " என்றான் ராஜா என்ற முத்துராஜன்.


"என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம் ! ஏன்? உங்களுக்குமில்லையா ?இல்லே  நம்ம மாலா, லீலா குழந்தைங்களுக்குமில்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்றீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.


அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. நேற்று வரை இருந்த உணவு கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த நாளையில் இந்த உணவு தான் இந்த வேளைக்குச் சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவு சாப்பாடு என்று ஒன்று அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம் அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்கு தீனிகள் அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம் நீளமாக மாறின. சாயும்கால குழந்தைகளின் படிப்பு சீரியல் பார்ப்பதிலும், பாட்டு கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள் வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படி கூப்பிடாதவன் அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெரிந்தான்.


அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்துராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியை கையில் தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாக தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதை சற்று வருடியது. 


முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியான பயிற்சி' செய்வதற்கு தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவைகளைச் செய்ய தவறுவதில்லை.              


" அவரு தூங்குறாரு, இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வாசலில் இருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். 

வீட்டினுள் .. சமயலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்துகொண்டும் மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்கு காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால் தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோவென்று அரைகுறையாக நடந்தது.


இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாக பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். இந்த காட்சியை கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை கால் உதறியது. அந்த நிகழ்வை கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.

அவருடைய 'பாஸ் ' இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவன் மட்டுமே பார்த்தான். அதனாலே கொஞ்சம் பிரசர் அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய வரும்போது பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் இது ஆரம்பம் தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும் என்றும் சொன்னார்." என்றனர் அவர்கள்.


அவர்கள் பேச பேச அதை கேட்க கேட்க அவளின் உடல் தெம்பு குறைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

குடும்ப டாக்டரிடம் போனார்கள்..

அவர் அட்வைஸ் பண்ண தொடங்கி விட்டார்...

உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்தது உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உங்க மனைவி வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம், அது மட்டுமில்லே எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம் உங்களுக்கு பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம , உடம்பு கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாபிடுங்க. முடிவு உங்கள் கையில் !" என்றார் ஆணித்தரமாக.


 

"அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.


"ஐய்யா .. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.

Enninaivugalin e pathivu

 வயதானதற்குப் பிறகு எதற்கு ப்ரைவசி???  


வயதான பிறகு கணவன் மனைவிக்கு ப்ரைவசி தேவைப்படாதா?


உண்மையில் வயதான பிறகுதான் பெரும்பாலான ஆண்கள் மனைவியைப் புரிந்துகொள்ளத் துவங்குகிறார்கள். மனைவியின் சின்ன சின்ன விருப்பு வெறுப்புகள் அவர்கள் கண்களில் படுகின்றன.


 எது செய்தாலும் மனைவியின் சௌகர்யத்தையும் கணக்கில் எடுக்கவேண்டும் என்று தோன்றுவதே வயதான பிறகுதான். அதற்கு முன் வரை எப்படியிருந்தாலும் சமாளித்துக்கொள்வாள் அவளுக்கெதற்கு ப்ரெஃபரன்ஸ் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் (சிலருக்கு) ஓடும்.


மனைவியை ஆண்கள் காதலிக்கத் துவங்குவதே ஐம்பது வயதிற்கு மேல்தான். மனைவியின் உடல் வனப்பு மறைந்து அன்பும் அக்கறையும் கண்ணில் படும் வயது அது.


கணவருக்கு வெல்லச்சீடை பிடிக்குமென்று கூட ஒன்றை இலையில் போடும்போதோ, எடுத்து வைத்துக் கொடுத்தாலோ, கிழங்களுக்கு இந்த வயசிலும் ரொமான்ஸ் பாரேன் என்று காதுபடப்‌ பேசாத இளையோர் அமையவேண்டும். இல்லையெனில் சுண்டிப் போவார்கள். 


தான் ஏதாவது கல்யாணத்தில் போய் சாப்பிட்டால், வீட்டிற்கு எதற்கோ அழைப்பதுபோல்  கால் செய்து உருப்படாமல் ஏதாவது பேசிவிட்டு,  சாப்பிட்டியா‌ என்று முடிக்கும் பெரியவர்களை எனக்குத் தெரியும்.


 எங்கேயாவது மனைவிக்குப் பிடித்த தின்பண்டங்களைப் பார்த்தால் வாங்கிக்கொண்டு வந்து அதை பகிரங்கமாகக் கொடுக்கமுடியாமல் திணறும் ஆண்கள் பலர்.

நேரடியாகக் கொடுக்க ஈகோ இடம் தராது. 


மற்றொரு விஷயம், சிறு வயதில் முகத்திற்கு நேராகப் பல விஷயங்கள் பேசியபோதும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ‌அதே பெண்ணில்லை அவள். பெண்களுக்கு ஆண்களை விட மனோ பலமும், குடும்ப விஷயத்தில் அனுபவமும் அதிகம். எனவே, இப்போது கன்னா பின்னாவென்று பேசினால் திருப்பிக் கேட்டுவிடுவாளோ என்று ஒரு தயக்கம். 


அப்பா அம்மா ரூம்தானே என்று பெற்ற மகனோ ‌மகளோ கதவைத் தட்டாமல் அவர்களது தனியறையில் நுழைவது அவர்களுக்கு சங்கடம் தரும்.


தனியறை இல்லாவிட்டாலும் கூட அவர்கள்  இருவரின் உரையாடலை கவனிப்பதையும், அதில் குறுக்கே நுழைந்து பதில் சொல்வதையும் பெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை.


60 வயது வரை மனைவியை வீட்டில் விட்டுவிட்டு அலுலக வேலை என்று ஊர் ஊராகச் சுற்றிவிட்டு, வயதானபின் ஒருநாள் கூட மனைவியைப் பிரிய முடியாமல் தவிக்கும் பல பெரியவர்கள் உண்டு.


காமம், மற்றும் உடல் சார்ந்த விஷயங்களுக்காகத்தான் ப்ரைவசி என்றல்ல. அன்பையும் காதலையும் பரிமாறிக்கொள்ள  பெரியவர்களுக்கு ப்ரைவசி தேவைப்படுகிறது.


அதை மதிக்கும் இளைய தலைமுறை அமைந்தால் அது வரமாகும்.