Wednesday, January 22, 2014

enninaivugalin e-pathivu kurattaiyai kuraika

குறட்டையை குறைக்க:
 
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
 
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
 
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
 
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். 



குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
 
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.


 காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
 
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
 
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார்  சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர்  டாக்டர் ரவிராமலிங்கம்.           

Thursday, January 16, 2014

enninaivugalin e-pathivu images












enninaivugalin epathivu --aspiration

 key to win..... january....ASPIRATIONS..


They sustain you ,empower you, and give you purpose and direction in life towards ultimate happiness and fulfillment ..As you need air to breath, food to eat and water to drink, your Aspirations too are a needed daily nutrient.They are you and what you truly and sincerely want for yourself and your life. They are not what you could have should have or would have but simply what you want........thanks jelsie



our  highest  aspirations  are  our  greatest  possibilities....

Saturday, January 11, 2014

enninaivugalin e pathivu--story

பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL ஆசிரியர் அன்று பாடத்தை துவக்கும் முன்னர், கையில் ஒரு கிளாஸில் நீரை நிரப்பி, “இதன் எடை என்னதெரியுமா?” என்று கேட்க்கிறார். “50 கிராம்… 100 கிராம்…. 150 கிராம்….” என்று ஆளாளுக்கு கூறுகின்றனர். “இதை எடை பார்க்காதவரை இதன் சரியான எடை என்ன என்று தெரியப்போவதில்லை. நான் கூறவருவது இதன் எடையை பற்றியல்ல…. என் கையை இப்படியே நான் சிறிது நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும்?” Glass in hand“ஒன்றுமாகாது!” “சரி…. ஒரு மணிநேரம் வைத்திருந்தால்…?” “உங்கள் கைகள் வலிக்க ஆரம்பிக்கும்!” “நீ சொல்வது சரி தான். இப்படியே ஒரு நாள் முழுதும் வைத்திருந்தால்….?” “உங்கள் கையே சுத்தமாக வேலை செய்யாமல் போக வாய்ப்பிருக்கிறது. கைமூட்டுக்கள் எல்லாம் வலியெடுத்து மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு நிச்சயம் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருக்கும்!” “சரியான பதில்…. அது சரி…. இந்த சந்தர்ப்பங்களில் கிளாஸின் எடை மாறியதா? அல்லது அதன் எடை கூடியதா?” “இல்லை!” “அப்போது எனக்கு வலியை தந்தது எது ??” மாணவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மாணவன், “அதை நீண்ட நேரம் நீங்கள் தூக்கி வைத்திருந்தது!” “வலியிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்?” “முதலில் அந்த கிளாஸை கீழே வைக்கவேண்டும்!” “மிகச் சரி!” கிளாஸை கீழே வைத்த ஆசிரியர் பேச ஆரம்பிக்கிறார். “வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகளும் இத்தகையது தான். அவற்றை பற்றி சிறிது நேரம் சிந்தியுங்கள்… ஓ.கே.! ஆனால் நீண்ட நேரம் அவை பற்றி சிந்தித்தால் அவைகள் உன்னை செயலாற்ற விடாமல் முடக்கிவிடும்.” வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் சவால்கள் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம், அவை நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது. அவற்றை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் படுக்கச் செல்லும்போது அவற்றை கீழே வைத்துவிட்டு தான் படுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சோர்வு நம்மை அண்டாது. ஒவ்வொரு நாளும் நாம் புதிய மனிதர்களாக எழுந்திருப்போம். பிரச்னைகளை சந்திக்க கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும். சுருங்கச் சொன்னால்…. வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் சிறு கற்கள் போன்றவை. அதை நமது கண்களுக்கு அருகே வைத்து பார்த்தால் அது இந்த உலகையே மறைத்துவிடும். சற்று தூர வைத்து பார்த்தால் தான் அதன் விஸ்தீரணம் என்ன என்று புரியும்.