பிரச்னைகளை தூக்கிக்கொண்டு திரிபவரா நீங்கள்? MONDAY MORNING SPL ஆசிரியர் அன்று பாடத்தை துவக்கும் முன்னர், கையில் ஒரு கிளாஸில் நீரை நிரப்பி, “இதன் எடை என்னதெரியுமா?” என்று கேட்க்கிறார். “50 கிராம்… 100 கிராம்…. 150 கிராம்….” என்று ஆளாளுக்கு கூறுகின்றனர். “இதை எடை பார்க்காதவரை இதன் சரியான எடை என்ன என்று தெரியப்போவதில்லை. நான் கூறவருவது இதன் எடையை பற்றியல்ல…. என் கையை இப்படியே நான் சிறிது நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும்?” Glass in hand“ஒன்றுமாகாது!” “சரி…. ஒரு மணிநேரம் வைத்திருந்தால்…?” “உங்கள் கைகள் வலிக்க ஆரம்பிக்கும்!” “நீ சொல்வது சரி தான். இப்படியே ஒரு நாள் முழுதும் வைத்திருந்தால்….?” “உங்கள் கையே சுத்தமாக வேலை செய்யாமல் போக வாய்ப்பிருக்கிறது. கைமூட்டுக்கள் எல்லாம் வலியெடுத்து மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு நிச்சயம் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருக்கும்!” “சரியான பதில்…. அது சரி…. இந்த சந்தர்ப்பங்களில் கிளாஸின் எடை மாறியதா? அல்லது அதன் எடை கூடியதா?” “இல்லை!” “அப்போது எனக்கு வலியை தந்தது எது ??” மாணவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மாணவன், “அதை நீண்ட நேரம் நீங்கள் தூக்கி வைத்திருந்தது!” “வலியிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்?” “முதலில் அந்த கிளாஸை கீழே வைக்கவேண்டும்!” “மிகச் சரி!” கிளாஸை கீழே வைத்த ஆசிரியர் பேச ஆரம்பிக்கிறார். “வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகளும் இத்தகையது தான். அவற்றை பற்றி சிறிது நேரம் சிந்தியுங்கள்… ஓ.கே.! ஆனால் நீண்ட நேரம் அவை பற்றி சிந்தித்தால் அவைகள் உன்னை செயலாற்ற விடாமல் முடக்கிவிடும்.” வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் சவால்கள் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம், அவை நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது. அவற்றை எப்போதும் தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. ஒவ்வொரு நாளும் படுக்கச் செல்லும்போது அவற்றை கீழே வைத்துவிட்டு தான் படுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சோர்வு நம்மை அண்டாது. ஒவ்வொரு நாளும் நாம் புதிய மனிதர்களாக எழுந்திருப்போம். பிரச்னைகளை சந்திக்க கூடிய ஆற்றல் நமக்கு இருக்கும். சுருங்கச் சொன்னால்…. வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் சிறு கற்கள் போன்றவை. அதை நமது கண்களுக்கு அருகே வைத்து பார்த்தால் அது இந்த உலகையே மறைத்துவிடும். சற்று தூர வைத்து பார்த்தால் தான் அதன் விஸ்தீரணம் என்ன என்று புரியும்.
No comments:
Post a Comment