Saturday, November 23, 2013

enninaivugalin e-pathivu---palza moli

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்...

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்கின்றனர் நம் முன்னோர்கள்.

ஆ--என்றால் ஆவினம் பசுவின் பாலிலிருந்து கிடைக்கும் நெய்யை இளமையில்  சாப்பிட்டால் உடலில் வனப்பு  ஏற்படும்.

பூநெய்---பூவிலிருந்து கிடைக்கும் தேனை முதுமையில் சாப்பிட்டால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாது என்று உணர்த்தவே “ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும் என்று கூறியுள்ளனர்...



அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவ மாட்டார்....

ஒரு மனிதனை அடித்தால் அவன் உண்மையைச் சொல்வான் என நம்புகிறார்கள்..ஆனால் நம் முன்னோர் கூறுவது...
அடி--இறைவனின் திருவடி..
இறைவனின் திருவடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார் ,என்பதே .....

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

கைப் புண் அல்ல..கை பூண்---கையில் அணியக்கூடிய ஆபரணம்…கழுத்தில் அணியும் ஆபரணத்தை பார்க்க கண்ணாடி அவசியம். ஆனால் கையில் அணியும் ஆபரணத்தை பார்க்க கண்ணாடி தேவையில்லை..

அதாவது நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்து கொள்ள அல்லது புரிந்து கொள்ள மூன்றாவது மனிதனைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் கருத்து..

முக்காலுங் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
காகம் மூன்று வேளையும் முழுகி குளித்தாலும் கொக்கு போன்ற வெள்ளை நிறத்தை அடைய முடியாது..அது போல அநியாயம் அதர்மம் அக்கிரமம் போன்ற செயல்களைச் செய்யும் மனிதர்கள் --யாகங்கள் வேள்விகள் அன்னதானம் போன்றவற்றை செய்தாலும் கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார் என்பதே பொருள்


கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்காருவதால் போன செல்வம் எல்லாம் திரும்பி வராது.கன்னம் என்பது முகத்தில் உள்ள கன்னம் அல்ல...கன்னக்கோல்...அதாவது கப்பல் ழூழ்கி செல்வமே போனாலும் கன்னக்கோல் வைத்து திருடக் கூடாது.உழைத்து முன்னேற வேண்டும்..என்பதே பொருள்



பந்திக்கு முந்து படைக்கு பிந்து

இதற்கு சாப்பாட்டிற்கு முந்து என பொருளல்ல..
அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவிற்கு  பந்திப் படை என்று பெயர்.போர்காலத்தில் பந்தி படை முன்னே செல்ல வேண்டும்.. ஆயுதங்கள் தாங்கிய படை பந்தி படைக்கு பின்னே செல்ல வேண்டுமாம்...இதுவே பொருள்




No comments:

Post a Comment