Monday, June 24, 2013

enninaivugalin e-pathivu jokes

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!

மனைவி என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????


சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ‘ மேனேஜர் நாயைக் காணோம்’னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..

ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி…!
புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், “அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்” என்று கூறினார். சர்தார்ஜியோ, “முடியாது” என்று சொல்லிவிட்டார்.அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:
நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.


சர்தார்ஜி: “அப்பர் பெர்த்திலே வந்ததாலே இராத்திரி முழுக்க தூங்கவே முடியலை”
சர்தார்ஜியின் மனைவி“லோயர் பெர்த்திலே இருந்தவங்க கிட்டே சொல்லி மாத்தியிருந்திருக்கலாமே?
சர்தார்ஜி“லோயர் பெர்த்துலேதான் யாரும் இல்லையே! எப்படி மாத்தியிருக்க முடியும்?”

சர்தார் 1நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!


துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.
அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.
சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி!
”ஹா… இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார்.அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!”என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.
சர்தார்ஜி சொன்னார் – ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!”
சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.
கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?
சர்தார்ஜி6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்தலேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரியஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!
சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டேதிரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!


No comments:

Post a Comment