அந்தமான் பயணம்
28.2.2013
அனைவரும் சாப்பிட்டு விட்டதால் நான் மட்டும் அவசரமாக ராஜி
வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த 2 இட்லியை சாப்பிட்டேன்.
பின் ஒரு வெஜ் –நான் வெஜ் ஹோட்டலில் சாப்பாடு..சிக்கன் வாசனை சாப்பிட பிடிக்கவில்லை..வெறும் மோர் சாதம் சாப்பிட்டு விட்டு எழுந்துவிட்டேன்..எனக்கு பிடிக்க வில்லை என்பதால் நான் தள்ளி போவதால் சாப்பிடும் என் உடன் வந்தவர்கள் சங்கடப்படக் கூடாது என்று அன்றே பிரபாகரிடம் தயவு செய்து வெஜ் சாப்பிடுபவர்களுக்கு தனியாக சாப்பாடு போடுங்கள் என்று கூறிவிட்டேன்.அதிலிருந்து எங்களுக்கு சுமார் ஆறு ஏழு பேர் வரும் வரை தனியாகவே சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்தார்.
பின் செல்லூலர் ஜெயில் பார்த்தோம். எவ்வளவு ப்ளான் உடன் கட்டியிருக்கிறார்கள்..சிறை அறைகளைப் பார்த்து பிரமிப்பாகவும் , சிறை கைதிகளின் நிலை அறிந்து வருத்தமாகவும் இருந்த்து. மிகவும் மன வருத்தம் ஏற்பட்ட்து.
இரவு சாய்பாபா கோயிலுக்கு சென்றோம். அன்னபூர்ணாவில் சாப்பாடு.காலையிலிருந்து சரியாக சாப்பிடாததால், ஒரு மாதிரி இருந்தது அதனால் நான் மட்டும் ரூமில் படுத்துவிட்டேன். அனைவரும் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டார்கள், எனக்கு ஒரு தோசையும்,ஒரு சப்பாத்தியும் வாங்கி வந்தார்கள். மறு நாளிலிருந்து சரியாகி விட்டது. முதல் நாள் மாத்திரை சாப்பிடாததால் படுத்தி எடுத்து விட்டது.
பார்த்த இடங்கள்:
1.
CELLULAR JAIL
2.
FISHERIES MUSEUM
3.
ANTHROPOLOGICAL MUSEUM
4.
SAMUSRIKA MUSEUM
5.
CHATHAM SAW MILL
6.
FOREST MUSEUM
7.
SCIENCE CENTRE
8.
LIGHT & SOUND SHOW PRO
9.
RAJIV GANDTHI WATER
SPORTS COMPLEX
10.
GANTHI PARK
11.
ROSS ISLAND
12.
VIPER ISLAND
13.
HAVELOCK ISLAND
14.
RADHA NAGAR BEACH
15.
JOOLLY BAY ISLAND
16.
SUN SET POINT
17.
SAGARIKA GOVT.SHOPPING COMPLEX
யாருமே ஹாவ்லாக் தீவை பார்க்க கூட்டி போக மாட்டார்களாம்.
எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்த்து.மிகவும் அருமையான தீவு. இந்த தீவுக்கு போக
இரண்டு மணி நேர கடல் பயணம். அருமை அருமை..
அதுபோல் ஜாலிபாய் தீவும் அருமை. நன்றாக கடலில் நீந்தி
கழித்தோம்.சண்முக வள்ளி கடலிலேயே அந்தாச்சரி தொடங்கி விட்டார்கள். நன்றாக இருந்தது.
ஆதிவாசிகளை பார்க்க அரசாங்கம் தடை விதித்து விட்டதால் போக முடியவில்லை..
கண்னுக்கு குளுமையான அந்தமான் காட்சிகளை
மறக்க முடியாது..வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி...
No comments:
Post a Comment