Thursday, December 13, 2012

en ninaivukalin e-pathivu ----story--

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!
















ராசாத்திக்கு மயக்கம் தெளிந்தபோது அருகில் யாரும் இல்லை. பிரசவம்

பார்த்த மருத்துவச்சி ''ஐயே! பொட்டப்புள்ளடா மருது'' சொல்லிவிட்டு சென்றது

 தெரியும். சிவத்தாயி குடிசை மூலையில் அமர்ந்தபடி கத்திக்

கொண்டிருந்தாள். ''அதெல்லாம் பாவம்டா, அவ இவ பேச்செல்லாம் கேட்டுட்டு

 அந்தச் சிசுவக் கொன்னுடாதடா பாவி! சொல்றதக் கேளு'' அவள்

முடிப்பதற்குள் அடி, இடி போல விழுந்தது. ''ஏய்! கெழவி வாய மூடு, இத

வளத்து சீர், கல்யாணம் காட்சி பண்றதுக்கு எங்கப்பன் எனக்கு சேத்து வச்சிட்டு

 செத்தான் பாரு'' இன்னும் எதேதோ திட்டிக் கொண்டிருந்தான் அவன்.

நெஞ்சுக்குள் பயம் படபடவெனப் படர்ந்தாலும் ராசாத்தி அமைதியாகப்

படுத்திருந்தாள். மருது அருகில் வந்து குழந்தையைக் கையில் எடுத்த போது ''

பொட்டப்புள்ள, அதுக்குப் பின்னால செலவு செய்யனுமுன்னு இப்பவே

கொன்னுடனுங்கிற... செய்யி... ஆனா அடுத்து எனக்கு ஆம்பிள்ளைப் புள்ள

பொறந்தா, அத நான் கொன்னுபுடுவேன்.....'' மருது அதிர்ந்தான். கோபம்

தலைக்கேற.. ''கழுத! என்னா தெனாவட்டு உனக்கு...'' விட்ட அறையில் தலை

 சுற்றியது ராசாத்திக்கு.

''ஐயோ! இதெல்லாம் கேட்கத்தான் இன்னும் இருக்கேனா? புள்ள பெத்தவடா,

அடிக்காதடா பாவி'' அரற்றினாள் சிவதாயி.

ராசாத்தி வலுவற்ற குரலில், ''ஆமா! உனக்குப் பொறக்கற ஆம்பளப் புள்ள

என்ன பெரிய உத்தமனாவா இருக்கப் போவுது? அது வளந்தோன நீ உன்

ஆத்தாள அடிக்கிற மாதிரி என்னையும் இழுத்துப் போட்டு அடிக்கும். என்னைய

 மாதிரி எவளாவது அதுக்கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பா, அதெல்லாம்

வேணாம், பிள்ளையக் கருவுல வளக்கறதுதான்யா கஷ்டம். அதக் கொல்ல

 யாரு உதவியும் எனக்குத் தேவயில்ல. போ! உன் குலத்த வேர் அறுக்கறதுல

நீயா நானான்னு பாத்துருவோம்'' அவள் குரலில் அழுத்தம், தெளிவு.

அவள் பேசப் பேச.... சிவதாயி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.


இன்னும் ராசாத்திக்கு அடி உதை விழுந்தபடிதான் இருந்தது. ஆனால் மருது

முகத்தில் இதுவரை அவள் கண்டிராத சிந்தனை ரேகைகள்! கண்கள் மயங்கச்

சரிந்த ராசாத்திக்கு தன் மகளை காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சி.











அரபு நாட்டில் இருந்த அஹமது என்கிற ஒரு பெரியார் இருந்தார். அவரிடம் ஓர்

 அழகிய குதிரை இருந்தது. அந்தக் குதிரையின் அழகில் கவரப்பட்ட பலர்

அதற்கு எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராயிருந்தனர்.

ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை அள்ளிக் கொடுக்கப் பலரும் முன்



வந்தனர். ஆனால் அந்தப் பெரியவர் அதை விற்க முன்வரவில்லை.
அந்த அரபு நாட்டில் லைலா எனும் அழகிய மங்கை ஒருத்தியும் இருந்தாள்.

 அவளை திருமணம் செய்து கொள்ள பல பணக்கார இளைஞர்களும்

விரும்பினர். ஆனால், அவள் தன்னை திருமணம் செய்து கொள்ள

விரும்புபவர்களில் அந்தப் பெரியவரிடம் இருக்கும் அழகான குதிரையைத்

தனக்கு நன்கொடையாகக் கொண்டு வந்து தருபவர்களைத்தான் திருமணம்

செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தாள்.


அந்த லைலாவை விரும்பியவர்களுள் காசிம் என்பவனும் ஒருவன். அவன்

அந்தப் பெரியாரிடம் சென்று தனக்கு அந்த அழகான குதிரையை விலைக்குத்

தரும்படி கேட்டான். ஆனால் அந்தப் பெரியவர் அந்தக் குதிரையைத் தர

மறுத்துவிட்டார். அவனும் தினசரி அந்தப் பெரியவரிடம் கெஞ்சிக் கேட்டான்.

ஆனால் அவர் மறுத்து விட்டார். காசிம் பல நாட்கள் அவர் வீட்டுக்குச் சென்று

பல வழிகளில் கேட்டும் அவர் அந்தக் குதிரையைக் கொடுப்பதாக இல்லை.

கடைசியாக காசிம் ஒரு யோசனை செய்தான். அந்தப் பெரியவர் தினசரி

குதிரையில் சவாரி செய்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு நீண்ட

போர்வையால் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு ஒரு

நோயாளியைப் போல் முக்கி முனகிக் கொண்டே படுத்துக் கிடந்தான்.

அவன் அப்படிக் கிடப்பதைப் பார்த்த அந்தப் பெரியவர் உனக்கு உடல்நிலை

சரியில்லையா? என்று விசாரித்தார். உடனே அவனும் தான் நோய்வாய்ப்

பட்டிருப்பதாகவும், நடக்க முடியாமல் இருப்பதாகவும் தன்னைப் பக்கத்தில்

உள்ள வைத்தியர் ஒருவர் வீட்டில் விட்டுவிடும்படியும் கெஞ்சிக் கேட்டுக்

கொண்டான்.


அந்தப் பெரியவரும் அவன் மேல் இரக்கப்பட்டு அவனை அந்தக் குதிரையின்

மேல் ஏற்றி குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி நடந்து சென்றார். சிறிது

தூரம் சென்றதும் குதிரை மேலிருந்த காசிம் தனது துணியில் பணத்தை

முடிந்து வைத்திருந்ததாகவும் அது சிறிது தொலைவிற்கு முன்னால் விழுந்து

விட்டதாகவும் அதை எடுத்து வந்து தரும்படியும் கேட்டான். அதைக் கேட்ட

பெரியவரும் கடிவாளத்தை விட்டுவிட்டு அதை எடுத்து வருவதற்காகத்

திரும்பினார்.

அவ்வளவுதான் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு குதிரையை விரட்டத்

துவங்கினான். அத்துடன் நிற்காமல் குதிரையை விலைக்குக் கேட்டேன்

தரவில்லை. இப்பொழுது குதிரையை என் யோசனையில் அடைந்து

விட்டேன். என்று ஏளனமாகச் சிரித்தான்.

உடனே அந்தப் பெரியவர், "தம்பி ஒரு வார்த்தையை மட்டும் கேட்டுச் செல்."

என்றார். உடனே அவனும் " சரி, அங்கிருந்தே சொல்லுங்கள்..." என்றான்

.
அந்தப் பெரியவர் உடனே, "உன்னிடமிருந்து ஒரே ஒரு உறுதிமொழி

 மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். அதை மட்டும் நீ செய்து விட்டால் எனக்கு

ஏற்பட்ட இழப்பைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டேன். அதாவது, நீ

எவரிடமும் இந்தக் குதிரையை என்னிடமிருந்து நயவஞ்சகத்தால் அபகரித்துக்


 கொண்டதாகக் கூறாதே... அப்படிச் செய்வது இஸ்லாத்தின்

 புனிதத்தன்மைக்குக் களங்கம் உண்டு பண்ணுவதாகும்." என்றார்.


அந்தப் பெரியாருடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்ததுதான்

தாமதம். உடனே குதிரையிலிருந்து கீழே குதித்து அந்தப் பெரியவரிடம்

கடிவாளத்தைக் கொடுத்து "என்னை மன்னியுங்கள். நான் ஒரு போதும்

இஸ்லாத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இழி செயலைச்

செய்யமாட்டேன். இது சத்தியம் என்று கூறிவிட்டுத் தன் வழியில் நடந்தான்.







முரடனாயிருந்த ஒருவனுக்கு அவன் தந்தை
அரண்மனையில் வேலை வாங்கித் தந்தார்.

அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே உடனே தன் மனைவியைத் தேடி ஓடினான் அவன்.

வழியெங்கும் ஒரே மழை. வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது. இருளில் தட்டுத் தடுமாறி
ஆற்றைக் கடந்து, மரம் ஏறி வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். கதவைத் திறந்த அவன்
மனைவிக்குப் �பகீர்� என்றது.

கணவன் நனைந்து வந்திருப்பதைக் கண்டாள்.

�இந்த மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்?� என்றாள்.

�ஒரு கட்டையைப் பிடித்து� என்றான்.

�கட்டையா...வெள்ளத்தில் பிணங்களல்லவா மிதந்து போய்க் கொண்டிருக்கின்றன? சரி
மாடிக்கு எப்படி வந்தீர்கள்? கீழே கதவு பூட்டியிருந்ததே!�

�மர விழுதைப் பிடித்து ஏறி வந்தேன்�

விளக்கை எடுத்து வெளியே வந்து பார்த்தாள். மரத்தில் மலைப் பாம்பு தொங்கிக்
கொண்டிருந்தது.

�அப்படி என்ன அவசரம்?� என்றாள்.

�உன்மேல் உள்ள அடங்காத ஆசை!�

�அழியப் போகும் இந்த உடம்பின் மீது அவ்வளவு ஆசையா? இவ்வளவு ஆசையும் ராமநாமத்தின்
மேல் வைத்திருந்தால் நல்ல கதியாவது கிடைக்குமே!�

ஒரு கண நேரம் அவளது வார்த்தையைக் கேட்ட அவன் உள்ளத்திலும் வானத்திலும் ஒரே
நேரத்தில் மின்னல் வெட்ட உண்மையை உணர்ந்தான்.

ராமநாம மகிமையை உளப்பூர்வமாக உணர்ந்து அமர கவியானான்.

அந்த அமர கவி யார் என்கிறீர்களா? வடமொழியில் துளசி ராமாயணம் எனும் புகழ்பெற்ற
காவிய நூல் எழுதிய துளசிதாசர்தான் அவர்.







அரசன் ஒருவன்
பெரிய ப்டை ஒன்றைத் திரட்டினான். பக்கத்து நாட்டை வெல்வதற்கு அந்தப் படையுடன்
பனி படர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான்.


அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதுமில்லாமல் துறவி
ஒருவர் அமர்ந்து இருந்தார்.


"ஆளைக் கொல்லும் இந்தக் குளிரில் ஆடை இல்லாமல்
இவர் இருக்கிறாரே...?" என்று அவர் மேல் இரக்கப்பட்டான் அரசன்.


விலையுயர்ந்த தன் போர்வையைக் கழற்றி அவ்ரிடம்
தந்தான். ஆனால் அவரோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.


" இந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ள இறைவன்
எனக்குப் போதுமான உடைகளைத் தந்து இருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்தக்
குளிரைத் தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையைத் தாருங்கள்."
என்றார் அவர்.


" உடலில் எந்த ஆடையும் இல்லை. சொந்தமாக எந்தப்
பொருளும் இல்லை. இவரை விட ஏழையை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது?" என்று நினைத்தான்
அவன்.


"அய்யா, உங்களை விட ஏழையை நான் எங்கே
கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட்டான் அரசன்.


" அரசே, நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார்
அவர்.


" பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுடன்
சேர்த்துக் கொள்வதற்காகப் படை எடுத்துச் செல்கிறேன்."


சிரித்த துறவி, " ஒரு நாட்டுக்கு அரசனாக
இருந்தும் நீ நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் பல ஆயிரக்கணக்கான வீரர்களின்
உயிரையும் பனயம் வைத்துப் பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்
போருக்குச் செல்லும் நீதான் என்னை விடப் பெரிய ஏழை. இந்தப் போர்வையை நீயே
வைத்துக்கொள்." என்றார்.


தலை கவிழ்ந்த அரசன் அவரை வணங்கினான்.


"அய்யா, என் கண்களைத் திறந்து விட்டீர்கள்.
உள்ளம் நிறைவு அடையாத நிலையில் உள்ளவர்களே ஏழை என்பதை நான் உணர்ந்து விட்டேன்.
இனி எந்த நாட்டின் மீதும் படை எடுக்க மாட்டேன்..." என்று சொல்லிவிட்டு தன்
படைகளுடன் நாடு திரும்பினான்.





ஆபத்திலும் ஆசை விடாது



ஒரு வணிகன் கடற்கரையோர நகரங்களுக்குச் சென்று வணிகம் செய்து வந்தான். இதனால்
படகு ஒன்றில் எப்பொழுதும் அவன் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

ஒருமுறை அவனைச் சந்தித்த நண்பன் ஒருவன், "படகிலேயே பயணம் செய்கிறாயே, உனக்கு
நீச்சல் தெரியுமா?" என்று கேட்டான்.

"தெரியாது" என்றான் அவன்.

"நீச்சல் தெரியாமல் இருப்பது ஆபத்து ஆயிற்றே. எனக்குத் தெரிந்த ஒருவர் மூன்றே
நாட்களில் நீச்சல் கற்றுத் தந்துவிடுவார். நீயும் கற்றுக் கொள்ளலாமே?" என்றான்
நண்பன்.

"எனக்கு நேரம் பணமாயிற்றே. நீச்சல் கற்றுக் கொள்வதற்காக என்னால் மூன்று நாட்களை
எல்லாம் வீணாக்க முடியாது."

"அப்படியானால் எபொழுதும் படகில் இரண்டு காலிப் பீப்பாய்களை வைத்திரு. படகு
கடலில் மூழ்கும் போது அந்தப் பீப்பாய்கள் மிதந்து உன்னைக் காப்பாற்றும்."

நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட அவன் படகில் இரண்டு காலி பீப்பாய்களை ஏற்றி
வைத்துக் கொண்டான்.

ஒருநாள் அவன் படகு புயலில் சிக்கிக் கடலில் மூழ்கத் தொடங்கியது.

தப்பிக்க வழியில்லை. அவன் இரண்டு காலிபீப்பாய்களையும் ஒன்றாகச் சேர்த்துக்
கட்டினான். அதன் மேல் படுத்துக் கொண்டான்.

"நடப்பது நடக்கட்டும். உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தால் அலைகள் என்னைக் கரையில்
சேர்க்கட்டும்" என்று நினைத்தான்.

திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

"இந்தப் பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன. விலையுயர்ந்த பொருட்களைக் காலியாக
இருக்கும் பீப்பாய்க்குள் வைத்துவிட்டால் தான் பிழைக்கும் போது பயன்படுமே" என்று
நினைத்தான்.

விரைந்து செயல்பட்ட அவன் பீப்பாய்க்குள் அனைத்துப் பொருட்களையும் அடைத்தான்.
பீப்பாய்களின் எடை மிகவும் கூடியது.

படகு மூழ்கும்போது அவனுடன் சேர்ந்து பீப்பாய்களும் மூழ்கியது.

அதிகமான ஆசை அவனைக் கடலில் மூழ்கடித்தது.






























No comments:

Post a Comment