Saturday, December 8, 2012

en ninaivukalin e-pathivu ---illaya thalaimuraiyin pulampal--dec



தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்
இயந்திரமாய்ப் பல் துலக்கி
அரைகுறையாய் குளித்து

அவசரமாய்த் திரும்புகையில்

என்னைப் பார்த்து சிரிக்கிறது
கல்லாய்ப் போன இட்லி.

நுனி நாக்கு ஆங்கிலம்

கம்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டு விட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில். . .

பார்த்துப் பார்த்து கல்வி தந்தாய்

கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா ?

No comments:

Post a Comment