Monday, April 2, 2012

en ninaivugalin e-pathivu privacy-jokes

அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு.
அப்புறம்?
கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க.
பின்ன என்ன ஆச்சு?
கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார்

திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..!
போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...!

கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!

ஏன்டா காலேஜுக்கு போகலை?

இன்னிக்கு லீவ்!

உனக்கா காலேஜுக்கா?

எதிர்வீட்டு பத்மாவுக்கு!


தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?
ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

ஓட்டலில் தோசை நன்றாக இல்லை என்று கத்தினார் ஒருவர். அவரை சமாதானப்படுத்த முயன்றார் பரிமாறுபவர்
அதெல்லாம் முடியாது மேனேஜரை உடனே இங்கே கூப்பிடு என்று பாய்ந்தார் கஸ்டமர்.
சார் மேனேஜரை கூப்பிடுகிறேன். ஆனால் அவரை இந்த தோசையை சாப்பிடும்படி கட்டபாயப்படுத்தாதிர்கள்.

மளிகை கடைக்காரரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு?
ஏன்?
கிஸ் கேட்டா எத்தனை கிலோன்னு கேட்கிறார்...!

ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி.
ஏன்.
எப்பபார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்.

பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒ ரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்.
நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.

அவர் அரசியல்வாதின்னு எப்படி கண்டு பிடிச்சே?
கோயில்ல வந்து சாமியை பார்த்து, தலைவா என்னை காப்பாத்துன்னு காலடியிலே விழுறாரே.

சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.

அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?


கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.

உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை?
பேய்க் கதைதான்...!


உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.

No comments:

Post a Comment