நீதியின் உயரம்
நேர்மையின் உறுதி
சென்னை உயர் நீதி மன்றம்
அறத்தின் கவசம்
அழியாத வெளிச்சம்
சென்னை உயர் நீதி மன்றம்
மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்
மேல் நோக்கி மழை பொழிந்து கழியலாம்
ஆனால்-
ஒரு நாளும் நீதி பிறலாதி-சென்னை
உயர் நீதி மன்றம் வழுவாது.
காசு பணங்கள் கடந்து நீதியைக்
காவல் புரிவது உயர் நீதிமன்றம்
கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்
கடைசி நம்பிக்கை உயர் நீதி மன்றம்
ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை,
ஆய்ந்து சொன்னது உயர் நீதி மன்றம்
ஆளவந்தோரின் நன்மை தீமையை
அறுதி செய்வதும் உயர்நீதிமன்றம்
உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய
உறுதிகொண்டது உயர் நீதி மன்றம்
உலகப் போரில் குண்டு விழுந்தும்
உடைந்து போகாத உயர் நீதி மன்றம்
ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்
அசைந்து கொடுக்காத உயர் நீதி மன்றம்
அறங்களாலே ச்மூகம் காக்கும்
அரண்கள் அமைக்கும் உயர்நீதி மன்றம்.
கவிப்பேரரசு
வைரமுத்து
No comments:
Post a Comment