ஒரு ராஜாவும், மந்திரியும் இருந்தனர். ஒரு நாள் மாம்பழம் நறுக்கினார் ராஜா, அப்போது அவரது விரல் ஒன்று கத்தி பட்டு துண்டாகி கீழே விழுந்து விட்டது.பக்கத்திலிருந்த மந்திரி”எல்லாம் நன்மைக்கே” என்றார். ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது.விரல் துண்டாகி விட்டது;இவர் எல்லாம் நன்மைக்கே என்கிறார் என்று கோபப் பட்டு மந்திரியை சிறையிலிட்டார்.
மந்திரியும் எல்லாம் நன்மைக்கே என்ற படி சிறை சென்றார்.
ஒரு நாள் ராஜா தனியாக காட்டுக்குச் சென்றார். அங்கே நரபலி கொடுக்க ஆளை தேடிக் கொண்டிருந்தனர்.ராஜாவைப் பார்த்ததும் அவரை இழுத்துக் கொண்டு தங்கள் தலைவனிடம் சென்றனர்.ராஜாவிற்கு ஒரு விரல் இல்லாததைப் பார்த்து இப்படி அங்க ஹீனம் உள்ளவன் நரபலிக்கு பிரயோசனம் இல்லை.என்று ராஜாவை விட்டு விட்டனர்.ராஜாவுக்கு மிகவும் சந்தோஷம்.அன்று ம்ந்திரி சொன்னது முற்றிலும் சரி. நாம் அவரை சிறையிலடைத்தது தவறு. உடனே அவரை விடுதலை செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் ..என்று எண்ணி சிறைச் சாலைக்கு வந்து மந்திரியிடம் மன்னிப்பு கேட்டார்.மந்திரியைப் பார்த்து,”உங்களை சிறையிலடைக்கும் போது வருத்தப்படாமல் எல்லாம் நன்மைக்கே என்றீர்களே! எப்படி? என்று கேட்டார். மந்திரி”தாங்கள் என்னை சிறையில் அடைக்காமல் இருந்திருந்தால் நானும் காட்டுக்கு வந்திருப்பேன்.எனக்கு அங்கஹீனமில்லாததால் என்னை நரபலி கொடுத்து இருப்பர்.தாங்கள் என்னை சிறையிலிட்டதால் நான் தப்பித்தேன்.அதனால் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணினேன் என்றார்.
No comments:
Post a Comment