- ஒரே
நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப்
பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது
அடிப்படையில், அறிவியல் ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு
வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும்.
நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம்
செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும்
அயர்ச்சியைத் தரக்கூடியது. - முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத்
தேர்வு செய்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில்
பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள்
மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட
ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி
முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல ! - உடற்பயிற்சி செய்யுங்கள்:
உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக
அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும்,
பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் ! - முடியாது
என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் : நம் பணிகளுக்கிடையில்
நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு
உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக,
முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால்
இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் ! இது உங்கள்
நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும். - காலையில்
ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் : ஒவ்வொரு நாளும் காலையில்
சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக்
குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு
மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும்
ஈடுபடுங்கள். - போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் : ஒவ்வொரு
நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு
மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை.
ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது
உளவியல். - எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம்
செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால்,
குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம்
சேமிக்கப்படும். - மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு
வைத்துக் கொள்ளுங்கள் : மின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத்
தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு
வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் : அது கவனச்சிதறலை
ஏற்படுத்தும். - தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து
விடுங்கள்: இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி
அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத
செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும். - செயல்பட அதிக நேரம்
இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்: ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம்
இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத்
தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் இறந்த காலத்திலும்,
எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப்
பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.
வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே.
Wednesday, January 23, 2013
en ninaivukalin e-pathivu ----vetri namathe---thathuvangal
Subscribe to:
Post Comments (Atom)
nalla thakavalgal
ReplyDeletenandri
www.padugai.com
Thanks