Wednesday, January 2, 2013

en ninaivukalin e-pathivu ----New year message--2013

happy new year to all.


நாளையப் பற்றி முன் எச்சரிக்கையுடன் இருப்பது தவறில்லை. ஆனால் நாளைப் பற்றிய நினைப்பில் இன்றைய பொழுதை வீணாக்க கூடாது.

இன்றைய தினம் பற்றிய கவலை மனிதனை கீழே தள்ளி
விடுவதில்லை.நாளைய தின கவலையே மனிதனை ஆழத்தில் ஆழ்த்தி விடுகிறது.

இன்றைய பொறுப்புகளைத்தாங்கிக் கொள்ள நமக்குப் போதுமான வல்லமை இருக்கிறது. நாளைய பற்றிய நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.ஏனெனில் அது இன்னும் நம்முடையதாகவில்லை. சரி தானே!

அதுபோல் நேற்றைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பதிலும் பயன் இல்லை

“சிந்திய பாலைப் பற்றி சிந்திப்பதால் என்ன பயன்?”
பேசிய வார்த்தை,விடப்பட்ட அம்பு, பயன் படுத்திய வார்த்தை, இம் மூன்றும் திரும்பி வராது...

சென்றதினி மீளாது மூடரே-நீர்
சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
இன்று புதியதாய் பிறந்தோம் என்று நீவீர்
எண்ணமதை திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்...
என்ற பாரதியாரின் கூற்றும் உண்மையே;

எனவே—

கழிந்து போன நாளைப் பற்றி கவலைப் படுவதை விட, இன்னும் வராத ஒரு நாளைப் பற்றி எண்ணி பரிதவிப்பதைவிட இன்றைய தினத்தில் என்னசெய்வது என்கின்ற தெளிவுடனும் உறுதியுடனும் செயல் பட்டால் அதுவே பல பிரட்சனைகளைத் தீர்த்து விடக் கூடியதாக இருக்கும்.

கடந்த கால சிந்தனை கைகொடுக்க போவதில்லை.எப்படி இருக்கும் என தெரியாத நாளைப் பற்றி கவலைப் படுவதில் அர்த்தமில்லை.

.எனவே...

நேற்றைய கதவுகளை அழுத்தமாக சாத்தி தாளிட்டு விட்டு,நாளைய ஏக்கத்தில் நேரத்தை வீணாக்காமல் ,இன்று செய்யவேண்டியவேலைகளைமுறைப்படுத்திகவனமுடனும்,திறமையுடனும்,செய்வோம்.

மேலும்,

இன்றைய தின வேலைகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்ற
நம்பிக்கையுடன் தினமும் படுக்கையைவிட்டு எழுந்திருப்போம். அந்த நம்பிக்கையே பொறுப்புகளை வெற்றிகரமாக சமாளிக்கும் பலசாலியாக நம்மை மாற்றும்.

நேற்றைய வேலைகளை இன்றைக்கு செய்வதும்,நாளைய வேலையையும் இன்றே செய்வதும், நமக்கு வேலைப் பளுவை அதிகமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நாம் செய்ய வேண்டியது;

ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பரிபூரண வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

நேற்று என்பது பாரமாக வேண்டாம். நாளை என்பது பயமுறுத்த வேண்டாம்.இன்று நிம்மதியாக வாழக் கற்றுக் கொள்வோம்.
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment